குழப்பத்தைக் கண்டும்...!!!

முஸ்லிம்  சமுகத்தினுள் இருக்கும் இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைகளை
சுமந்தவர்களை முஸ்லிம் சமூகத்தின் முன் நிறுத்துதல் .

இன்று பிரச்சாரப் பணியில கலமிறங்கியிருக்கும் கூட்டங்களின் முறையற்ற  அனுகுமுறையாலும்  அழைப்புப் பணியின்  பெயரில் செய்யப்படுகின்ற அநியாயங்களாலும் உண்மையான குர்ஆனின் வெளிச்சம் வெளிவரவில்லை.  அதேபோன்று உண்மையான ஸுன்னா நடவடிக்கைக்குக் கொண்டுவரப்படவுமில்லை.  மாறாக  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் சொந்தக் கருத்துக்களும்  வழிகேடான  கொள்கைகளும் ஷிர்க்களும், குப்ர்களும், பித்அத்களும் பரவலாகப் பரந்திருப்பதை நாம்  காண்கிறோம்.  எனவே, இந்தக் களங்கங்களைத் துடைக்க வேண்டுமென்ற  நோக்கத்துடனும் இன்னும் யாரெல்லாம் சத்தியமான மார்க்கத்தை விளங்கி அதற்குக் கைகொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு  வழிகாட்டுவதற்கென்றும் அழைப்புப் பணியில் நபிமார்களின்  வழிமுறைகளை முன்வைக்க நாம் ஆசைப்படுகிறோம்.  இதனை மக்கள் புரிந்து கொள்வதன் மூலம் அதனடிப்படையில் செயற்படும் மக்களாக மாறி, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த நபிமாhகளின் அழைப்புப் பணிக்காக தோழர்களாக மாறுவதற்கு  முயற்சி செய்ய வேண்டுமென்றும் நாம் ஆசைப்படுகிறோம்.

அழைப்புப் பணி என்பது அவசியாமானதென யார் கூறுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் குழப்பத்தைக் கண்டும் அதற்கெதிராக பதிலளிக்காமல்  இருக்க முடியுமா?  ஒருவன் அல்லாஹ்வின் திருமறையான அல்குர்ஆனை இழிவுபடுத்தும் போது அதற்கெதிராக பதிலளிக்காமல் இருக்க முடியுமா?  குர்ஆனை இழிவுபடுத்துபவனைக் கண்டுகொள்ளாமல் அதற்கெதிராக குரலெழுப்பாமல் அழைப்புப் பணியை மேற்கொள்வது  அழைப்புப் பணியென்று  சொல்வதற்குத் தகுதியானதொன்றாகுமா?  குர்ஆனின் விளக்கத்தில் குழப்பம் விளைவிப்பவன் ஒருவன் இருக்கின்ற நேரத்தில் நாம் அழைப்புப் பணியை சுமந்தவர்களாக இருப்போமாயின் இங்கு எமது கடமை என்ன?  எமது கடமையானது முதலில் அவனுக்கெதிராக அவனுடைய போக்குக்கெதிராக குரல்கொடுப்பதுதான.  இன்னும் அந்தக் குர்ஆனை தூய்மைப் படுத்தி வைப்பதும் மக்களுக்கு மத்தியில் குர்ஆனி;ன் விளக்கத்தைத் தூய்மையாக முன்வைப்பதும் எமது கடமையாக அமையும்.  ஆனால் இன்னும் பலர் இந்தக் குழப்பத்தில்  மத்தியில்  வாழ்பவர்களாக  இந்தக் குழப்பத்தினால் தோன்றியுள்ள தவறான விளக்கத்திலிருந்து தூய்மையான விளக்கத்தை  பிரித்து அவற்றை சரிவர அடையாளம் காட்டுவதை அவசியமாகக கருதாதவர்களாக இருக்கிறார்கள்.  இன்னும் இந்தக் குழப்பமான விளக்கங்களுக்கு  மறுப்புத் தெரிவிப்பதையும் அவசியமானதெனக் கருதுபவர்களாகவும் அவர்கள் இல்லை.

நம்மில் பிரச்சாரம் செய்பவர்களாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதனாக தனது வாழ்வை வாழ்பவர்களாக இருந்தாலும் ஷிர்க்குகளை காணும் போது அதற்கு மாற்றமான வாழ்க்கையை நாம் வாழவில்லையென்றால்  ஷிர்க்கை அழிக்கும்  அழைப்புப் பணிக்குத் தோழர்களாக இருக்கவில்லை என்றால் நம்மிடத்தில் ஏகத்துவ அடையாளம் எங்கே?  நீங்கள் பித்அத்களைக் கண்டு அதற்கு முரணாக வாழ்கின்றவர்களாக இல்லாமல் பித்அத்களுக்கு எதிர்ப்புகாட்டுகின்ற அதற்கெதிராக  குரல் கொடுக்கின்ற அழைப்புப் பணிக்கு ஒத்துழைப்பளிக்கும்  தோழர்களாக இருக்கவில்லை என்றால் நீங்கள் பித்அத்தை வெறுப்பதற்கு  ஆதாரம் என்ன? நபிவழிமுறைகளைச் சர்ச்சைக்குரிய விடயமாக  ஆக்குவதைக் காண்கிறோம்.  இவைகளுக்கு மறுப்புகளைக் கொடுக்காமல்  நாம் வாழ்வதெல்லாம் நாம் நபிவழியை நோக்கிறோம்  என்பதற்கு ஆதாரம் என்ன?


நான் நபிவழியில் இருக்கின்ற மனிதனென்றால்  நபிவழிக்கு முரணானதைக் கண்டு அதில் நான் பொறுத்திருக் முடியாது.  அதைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.  உங்களுக்கு அதை மறுத்துரைப்பற்கு போதிய கல்வியறிவு இல்லாதிருக்கலாம்.  ஆனாலும் கல்வியைச் சுமந்தவர்களுக்குக் கைகொடுப்பதில் நீங்கள் பின்வாங்கக் கூடாது.  உங்கள் ஒவ்வொருவரது சக்தியும் தகுதியும் என்னவென்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.  இதுபற்றி நீங்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் கூற வேண்டிய  ஒரு காலம் வரும்.  இதுபற்றி அல்லாஹ் உங்களிடம் கேட்கும் நேரம் வரும்.  அன்று நீங்கள் கவலையடைவதில் எவ்வித பயனுமில்லை.  இன்று உலகில் உயிரோடு இருக்கும்  பொழுதே அல்லாஹ்வுக்காக செய்யப்படும் அழைப்புப் பணிக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வின் து}ய்மையான மனிதர்களாக மாறிவிடுங்கள்.  ஆல்லாஹ்த்தஆலா அவனது தூதரான நபி அவர்களை அனுப்பி அந்நபிக்கு ஏழு வானத்தின் மேலிருந்து அனைத்து உதவிகளையும் வழங்கினான். இவ்வாறு அனைத்து உதவி, ஒத்துழைப்புகளையும் அல்லாஹ் வழங்கிய பின்னரும் இந்த சமூகத்தை நோக்கிக் கூறுகிறான்

"எப்பணி நன்மையானதாகவும்  இறையச்சத்திற்குரியதாகவும் உள்ளதோ அதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்.  (ஆனால்) எது பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.  "

அல்லாஹ்வின் உதவி அந்த நபிக்கு போதுமானதாக இருந்தும் , ஆதாரத்திற்கு அல்லாஹ்வின் வஹி போதுமானதாக இருந்தும் அல்லாஹ் காட்டிய அற்புதங்கள் (முஹ்ஜிஸாத்) போதுமானதாக இருந்தும், இவை அத்தனையையும் நபி அவாகளுக்கு கொடுத்து அந்த நபி கொண்டு வந்த மார்க்கத்தை உயர்த்தி வைத்த பின்னும் அல்லாஹ்தஆலா பொது மனிதனுக்கு ஏவுகின்றான்.

   நன்மையான விடயத்திலும் இறையச்சத்திற்குரிய விடயத்திலும்
ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்.

ஏன் இதனை அல்லாஹ் பொது மனிதனை நோக்கி ஏவுகின்றான் அல்லாஹ்வுக்கு அனைத்தும் இயலுமானதாக இருந்த போதிலும் மனிதர்களை நோக்கி அல்லாஹ் கூறுவதன் அடிப்படையில் நம்மில் ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பில் பின்வாங்க முடியாது.  அனைவரும் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதை நோக்கி அழைப்பதில் தங்களின் தகுதிக்கேற்ப அவரவர் பங்களிப்பை வணங்க வேண்டும்.  இந்தப் பங்களிப்பின் மூலம் ஒவ்வொருவரும் தங்களின் செயல்பாட்டினை பரிபூரணமாக நிலைநாட்ட வேண்டும்.  இதன் மூலம்தான் ஒருவன் எந்தளவுக்கு அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி வணங்குகிறான் என்பதைக் கண்டு கொள்ள முடியும்.  இதன் மூலம் தான் அல்லாஹ்வின் மீது உ;ண்மையாள நம்பிக்கையை நிலைநாட்டுவதென்பது உறுதியாக நிரூபிக்கப்படும்.  நிச்சயமாக அதில்தான் ஒருவன் அவனுடைய ஈமானை நிலைநாட்டுவதைக் காண முடியும்.  இந்த அனைத்து  உண்மைகளும் உற்பொதிந்திருப்பதன் காரணத்தில்தான் அல்லாஹ் மனிதர்களை நோக்கி மேற்கூறிய திருமைறை வசனத்தில் ஒரு ஏவலை ஏவுகிறான்.  நபி அவர்களுக்கே ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமானதென்றால், அந்த நபிக்குப் பின் வந்த சத்தியத்தை சுமந்த மக்களுக்கு ஒத்துழைப்பது அவசியமாகாதா?  நிச்சயமாக அது அவசியமாகும். ...