[நபியின் ஸுன்னாவும் குலபாஉ ராஸித்தின் அல் மஹதியீன் ஸுன்னாவும்]

நபியின் ஸுன்னாவும் குலபாஉ ராஸித்தின் அல் மஹதியீன் ஸுன்னாவும்

بسم الله الرحمن الرحيم 
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد

 `

فإنه من يعش منكم يرى اختلافا كثيرا وإياكم ومحدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ


நிச்சயமாக நீங்கள்உங்களிடையே அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். காரியங்களின் புதியவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். நிச்சயமாக அவைகள் ஒவ்வொன்றும் வழிகேடுகளாகும். உங்களில் எவர் அந்தக் காலத்தை அடைந்து கொள்வார்களோஅப்பொழுது நீங்கள் எனது வழிமுறையினையும்குலபாஉ ராசிதீன் அல் மஹ்தியீனுடைய வழிமுறையினையும் உங்களுடைய கடைவாய் பற்களினால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவித்தலை இர்பால் இப்னு சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூதாவுத் திர்மிதி இப்னு மாஜா)


மனித சமூகம் கலக்கத்திலும் தடுமாற்றத்திலும் சத்திய பாதை எது என்று இனங்காணத் தெரியாத காலத்தில் வாழும் போது
,  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னவையும் குலபாஉ ராசிதீன் அல் மஹ்தியீனுடைய சுன்னாவையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளோம். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல் செயல் இன்னும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஸஹாபாக்களுடைய செயற்பாடுகள் என்ற இம்மூன்றினையும் சுன்னதி” – நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா என்று உலமாவுல் முஹத்திஸீன்” - அஹ்லுஸ் சுன்னத்தி வல் ஜமாத்தின் உலமாக்களால் வரையறுக்கப்பட்டு எமக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

என்னுடைய இந்த சுன்னத்தையும்  அதனோடு சேர்த்து என்னுடைய குலபாஉ ராசிதீன் அல் மஹ்தியீனுடைய சுன்னத்தையும் பற்றிப் பிடிக்குமாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினால் ஏவப்பட்டுள்ளோம். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த சுன்னாவை அதாவது நபி வழி என்று கூறும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையாக காணப்படுகின்றதோ அவ்வழிமுறைக்கு மாற்றமாக ஸஹாபா ரில்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மாயீன்கள் இருந்ததில்லை. எந்த நபி மொழியினை நபி வழி என்று கூறுகின்றீர்களோ அந்நபி மொழியினை அவர்களே அவர்களுக்குப் பின்னர் தோன்றியோருக்கு எத்திவைத்தார்கள். 

இதனையே இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் ரஹீமஹுல்லாஹ் அவர்கள்அவர்களுடைய கிதாப் ஸஹீஹ் முஸ்லிம்மிற்கு பெயரிடும் போது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நீதாமானவர்களைத் தொட்டும்நீதமானதைத்  கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து நீதமானவர்களைத் தொட்டு இந்த ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றால் அது நபியின் சொல்செயல் மேலும் நபியினால் அங்கிகரிக்கப்பட்ட ஸஹாபாக்களின் செயற்பாடுகள் ஆகும்மேற்கூறப்பட்ட அனைத்தையும் தெளிவுடனும்விளக்கத்துடனும் ஆதாரத்துடனும் ஸஹாபாக்கள் சுமந்து எங்களுக்கு எத்திவைத்துள்ளார்கள். அவர்களினால் அறிவிக்கப்படும் ஒவ்வொரு விடையமும்முதன்மையாக அவர்களுடைய வாழ்வில் பின்பற்றிய பின்னரே எங்களுக்கு எத்தி வைத்துள்ளார்கள். அவ்வாறில்லை என்றால் ஒரு மனிதனுக்கு 

“ عادل  ” 

என்ற வார்த்தையினை பயன்படுத்த மாட்டார்கள். 

“ عادل " 

என்ற வார்த்தை எதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்றால் அந்த குறிப்பிட்ட விடயத்தை தங்களுடைய வாழ்வில் நிலைநிறுத்தி பிறருக்கு எத்தி வைப்பதே அதனுடைய உண்மையான விளக்கமாகும். இதனாலேயே ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்களைப் பார்த்து 

   صحابة كلهم عدول    

ஸஹாபாக்கள் அனைவரும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை எத்தி வைப்பதில் நீதமானவர்கள்” 
என்று அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத்தினர் கூறியுள்ளார்கள். 

ஒரு தாபியீன்ஸஹாபியுடைய பெயரைக் குறிப்பிடாமல் ஸஹாபாக்களில் ஒருவர் எனக்கு அறிவித்தார் என்று கூறினால்அந்த ஸஹாபி யார் என்று ஹதீஸ் நூல்களில் தேடுவது கிடையாது. அதாவது ஹதீஸ்களை தரம் பிரிப்பதில் உள்ள அடிப்படைகளில் ஓர் அடிப்படை தான் ஓர் தாபியீன் எனக்கு ஒரு சஹாபி அறிவித்துள்ளார் என்று கூறிவிட்டால் மேலும்அந்த ஹதிஸினுடைய அறிவிப்பாளரை குறிப்பிடாமல் அவ்ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த ஹதீஸ் மக்பூல்” – ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸஹீஹான அஹாதீஸ் என்று உலமாவுல் முஹத்திஸீன்கள் ஓர் நிபந்தனையாக நிர்ணயித்துள்ளார்கள். 

ஏனென்றால் ஸஹாபா ரில்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மயீன்கள் அனைவரும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீசுகளை தெளிவான விளக்கததுடன் பெற்றுக் கொண்டு மேலும் அவைகளை அல்லாஹ்வின் திருப்தியை நாடி நிலைநிறுத்தியவர்கள் ஆவார்கள் . அவ்வாறு நிலைநிறுத்தியவைகளையே அவர்களுக்குப் பின்னால் தோன்றிய தாபியீன்களுக்கு எத்திவைத்தார்கள். 

மேற்கூறப்பட்ட விடையத்தினை விளங்கிக் கொண்டால்நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மொழிந்த

 فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ 

என்னுடைய வழி முறையினையும் குலபாவுல் ராசிதீன் அல் மஹ்தியீன் உடைய வழி முறையினையும் உங்களுடைய கடைவாய்ப் பற்களினால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் ” என்பதன் கருத்து விளங்கும். நபியுனா சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவோடு குலபாவுல் ராசிதீன் அல் மஹதியீனுடைய சுன்னாவையும் ஒன்றோடொன்று இணைத்து கூறப்பட்டுள்ளதை நாம் தெட்டத் தெளிவாக இனங்கண்டு விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஆனால்இன்று ஒரு சிலர் இந்த அஹாதீஸிற்கு விளக்கமளிக்கையில் எந்ந சுன்னாவை சுன்னா” என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டார்களோ அதனை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, “ஸஹாபாக்களின் சுன்னா” என்று அறியப்பட்டவைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்த அஹாதீஸிற்கு விளக்கமளித்து இதனை அவர்களுடைய கருத்துக்களை சுமப்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். 

மேற்கூறப்பட்ட அஹாதீஸ்நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாஸஹாபாக்களுடைய சுன்னா என இவ்விரண்டினையும் இணைத்து ஒன்றாக பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளதை தெட்டத் தெளிவாக எடுத்து இயம்புகின்றது. ஸஹாபாக்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்குப் பின்னால் இந்த மார்க்த்திலே பிளவுகளையும் சுன்னாவிற்கு முரணான பித்அத்களையும் உருவாக்கி விட்டார்கள்” என்று அன்று ஸஹாபாக்களை வெறுத்த முஹ்தஸீலாக்கள் இவ்வாரான ஓர் விளக்கத்தினை அளித்தனர். 

திர்மிதி” என்ற நூலிற்கு விளக்கமளித்த இமாம் முபாரக் பூரி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் முல்லா அலி காரி ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய விளக்கத்தினை முதன்மையாக எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்த குலபாஉல் ராசிதீன்கள் என்று போற்றப்படும் ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன் அவர்கள் நபியுடை சுன்னாவைத் தவிர வேறொரு சுன்னாவை அவர்கள் பின்பற்றவேயில்லை. 

மேலும்நபியுடன் இந்த குலபாஉல் ராசிதீன்களை இணைத்திருப்பதுஅவர்கள் நபியுடைய சுன்னவை சுன்னா” என்று அறிந்து பின்பற்றுவார்கள் அல்லது நபியுடைய சுன்னாவில் இருந்து ஓர் சட்டத்தினை எடுத்து சுன்னாவாகப் பின்பற்றுவார்கள். இன்னும் அவைகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அதனை சுன்னாவாகப் பின்பற்றவார்கள். இதுவே குலபாஉல் ராசிதீன்களுடைய சுன்னா” என்று இமாம் முல்லா அலி காரி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விளக்கத்தினை இமாம் முபாரக் பூரி ரஹீமஹுல்லாஹ் அவர்கள்அவர்களுடைய “ துஹ்பதுல் அஹுபதி ” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். 
 
மேலும்குலபாக்களுடைய சுன்னா என்று இங்கு நிலைநாட்டப்பபடுவதுநபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதைக்கு ஒப்பான பாதை அன்றி வேறு பாதையில்லை. ஆகவேஇந்த ஸஹாபா ரில்லானுல்லாஹி அஜ்மயீன்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதைக்கு ஒப்பான பாதையை அன்றி வேறு பாதையை தனதாக்கிக் கொள்ளவில்லை. 

இந்த விடையத்தில் அஹ்லுல் இல்ம்” - இல்மை சுமந்தவர்கள் என்றுபோற்றப்படும் கூட்டத்தினர் தங்களுடைய பேச்சை விரிவாக்கி விட்டார்கள். என்றாலும் அதனை உங்களுக்கு சுருக்கமாகத் தருகின்றேன் என்று இதனை மேலும் தெளிவாக இமாம் ஷவ்க்காணி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.  அரபு வார்த்தையிலே சுன்னா என்று சொ
ன்னால் அது ஒரு பாதை”. 

என்னுடைய பாதையையும்குலபாஉ ராசிதீன்களுடைய பாதையையும் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த ஸஹாபாக்களுடைய பாதை நபியுடைய பாதையாக இருந்ததே தவிர வேறொரு பாதையாக இருக்க வில்லை. அவர்களுடைய பாதை நபியுடைய பாதையாகவே இருந்தது. 
 
ஏனென்றால் அந்த ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்கள் நபியுடைய பாதையை வழிமுறைகளை கையாண்டு பின்பற்றுவதில் மிக பேராவல் கொண்டவர்களாக காணப்பட்டார்கள். நபி வழியினை உன்னிப்பாக கண்காணித்து ஒவ்வோர் விடையத்தினையும் அவர்களது வாழ்வில் பின்பற்றக் கூடியவர்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் பெரும் விடயங்கள் மட்டுமின்றி நபியுடை ஓர் சிறு விடயத்தினையும் நபிக்கு முரணாக செயற்படுத்த பயந்தவர்களாக காணப்பட்டார்கள்.
 
மேலும்சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தில் ஒரு விடயமாகட்டும் அல்லது அவர்களுடைய ஒரு சுன்னாவை இனங் காட்டுவதாகட்டும்  அதனை தெளிவாக விளங்கி மேலும் அதனை ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஆதாரமாக விளக்கியே  பின்பற்றும் மக்களாக காணப்பட்டார்கள் என்று இமாம் ஷவ்க்காணி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இமாம் ஷவ்க்காணி ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய  மேற்கூறப்பட்ட வார்த்தையை மட்டும் விளங்கிக் கொண்டால் ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்கள் நபியுடைய பாதையை தவிர்ந்து வேறோரு பாதையை தேர்ந்தெடுக்க வில்லை என்பது புரிந்து விடும்.

எங்களுடைய சமுகம்  நபி வழி என்று தனக்கென்று ஓர் தனி வழியினை அமைத்துக் கொண்டு ஸஹாபாக்கள் நபி வழியில் செயற்பட்டது போன்று செயற்படவில்லை. மாறாக நாங்களே நபியுடைய பாதையை சுத்தமாக பின்பற்றுகின்றோம் என்று சூளுரைக்கின்றனர். 
ஆனால்நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்

" أنا ملاذه  أصحابي  "    

" நான் என்னுடைய ஸஹாபாக்களுக்கு பாதுகாப்பு " என்று ஸஹாபாக்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அந்த ஸஹாபாக்களைப் பார்த்து அவர்களுடைய பாதை வேறுநபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதை வேறு என்று ஒரேபாதையை வெவ்வேறாக  எங்களுடைய சமூகங்கள் கூறு போடுவதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கின்றோம். 

ஆகவே உம்மதே இஸ்லாமிய்யாவில்  - முஸ்லிம் சமூகத்தில்  நபியுடைய பாதையையும் ஸஹாபாக்களுடைய பாதையையும் யார் இரண்டாகப் பிரிக்கின்றார்களோ நிச்சயமாக அவர்கள் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றாக்கிய பாதையை இவர்கள் இரண்டாகப் பிரிக்கின்றார்கள். 
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெட்டத் தெளிவாக ஒன்றாக்கிக் காட்டினார்கள் . அதாவது  

فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ ”   -  

 " என்னுடைய பாதையும் குலபாவுல் ராசிதீன் அல் மஹதியீனுடைய  பாதையும் ஒன்று என்று "  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றாக்கிய பாதையை தனது மண்டைக்கு பட வில்லை என்பதால் இரண்டாக பிரித்து விட்டார்கள்.

வரலாற்றை உற்று நோக்கினால் எந்த கூட்டங்களை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாத்தினர் வழிகேடர்கள் என்று அடையாளம் காட்டினார்களோ அவர்கள் அனைவரும் இந்த நபியுடைய பாதையை ஸஹாபாக்களுடைய பாதையில் இருந்து வேறாக பிரித்துக் காட்டி தான் வைத்துள்ளார்கள்.  அவர்கள் ஜஹ்மியாக்கள்கதரிய்யாக்கள்முஹ்தஸிலாக்கள்ஷியாக்கள்,  ரவாபிழாக்கள் , முர்ஜியாக்கள் போன்றோரை அஹ்லுஸ்சுன்னா வல்ஜமாத்தினர்கள் பிரித்துஇவர்கள் வழிகேடர்கள் என்று அடையாளம் காட்டினார்களோ அந்த அனைத்துக் கூட்டங்களும் சஹாபாக்களின் பாதையை நபியின் பாதையில்  இருந்து பிரித்தே வைத்திருப்பதை காணலாம். இதனை  வரலாற்றை உற்று நோக்கினால் நல்ல முறையில் கண்டுக்கொள்ளலாம் .   இதனை  இமாம் கதீபுல் பக்தாதி ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய

“   الفرق بين الفرق  " 

என்ற நூலில் அடையாளம் காட்டியுள்ளார்கள். 
 
இந்த அனைத்து வழிகெட்ட கூட்டங்களும் ஸஹாபாக்களுடைய பாதையை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையில் இருந்து பிரித்து வேறொரு பாதையாக மாற்றி விட்டார்கள். மாற்றமாக அல்லாஹ் சுபஹானஹுதாலா  அவனுடைய அல்குர்ஆனில் நபியுடைய பாதையே ஸஹாபாக்களுடைய பாதையென்று உறுதிப்படுத்தி கூறியுள்ளான். 

                                                                                                                                                                                         وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا 

(நிஸா – 115)

நேர்வழி இது என்று அடையாளம் கண்ட பின்னர் அந்த தூதரைவிட்டும் யார் பிரிந்து சென்றுஅல் மு ஃமினீன் என்ற பாதையைத் தவிர்ந்து வேறொரு பாதையை பின்பற்றினால்,  அதாவதுஅல்லாஹ் சுபஹானஹுதாலாவால் நேர்வழி காட்டப்பட்டதன் பின்னால் நபியின் பாதையில் இருந்து பிரிந்து விட்டால் என்று கூறிய பின்னர்மு ஃமினீனுடைய பாதையை தவிர்ந்து வேறு ஒரு பாதையைப் பின்பற்றினால் என்று எச்சரித்து  பின்னர் அல்லாஹ் சுபஹானஹுதாலா அல் மு ஃமினீன் ” என்று ஸஹாபாக்களை அடையாளம் காட்டிநபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதையே ஸஹாபாபக்களுடைய பாதை என்றும் அடையாளம் காட்டுகிறான். 
இதன் பின்னரும்  ஷைத்தான்கள் - வழிகெட்ட கூட்டங்கள் ஸஹாபாக்களுடைய பாதையை நபியுடைய பாதையை விட்டும் திசை திருப்புகின்றார்கள்.

الْمُؤْمِنِينَ  

ஸஹாபாக்களுடைய பாதை என்பது

“ سَبِيلِ الْمُؤْمِنِينَ ” 

நபியுடைய பாதையே முஃமினீன்களுடைய பாதை. 
அதாவது ஸஹாபாக்களுடைய பாதை என்று இமாம் இப்னு தைமியா ரஹீமஹுல்லாஹ் அவர்கள் மஜ்மூ பதாவா ” என்ற நூலின் மூன்றாவது பாகத்தில் முதல் பக்கத்தில் இருந்து 15 பக்கங்கள் வரையில் 

سَبِيلِ الْمُؤْمِنِينَ ” 

முஃமினீன்களுடைய பாதை ஸஹாபாக்களுடைய பாதையே என்று மிக துல்லியமாக இமாம் அவர்கள் ஆதாரத்துடன் நிறூபித்துள்ளார்கள். 
அவர்களுக்கு முன் வாழ்ந்த ஒவ்வொரு உலமாவும் மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு நபியுடை பாதையே ஸஹாபாக்களுடைய பாதை என்று எடுத்து இயம்பியுள்ளார்கள். 

ஆனால்இன்று வழிகேடான ஷைத்தான்கள்நாங்கள் ஸஹாபாக்களைவிடவும் நபியை தூய்மையாகப் பின்பற்றுகின்றோம். நாங்களே நபியுடைய வழிமுறையினை நபியுடைய சுன்னாவை ஸஹாபாக்களைவிடவும் தெட்டத் தெளிவாக விளங்கியவர்கள் என்று இந்த வழிகேடான ஷைத்தான்கள் ஆரவாரிக்கிரார்கள்  என்றால்இவர்களை விடவும் மிகப் பெரியதோர் ஷைத்தான் வேறுயாரும் இருக்க முடியாது . இந்த வழிகெட்ட ஷைத்தான்களே அன்று முதல் இன்று வரையில்நபியுடைய மரணம் தொடக்கம் மறுமை நாள் வரையில் இந்த சத்தியமான கூட்டத்திற்கு எதிராக களமிறங்கக் கூடியவர்கள் என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதை உம்மதே இஸ்லாமியவின் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் பிரதான அம்சமாகும்.

ஆகவே,  நீங்கள் அதிகமான கருத்து வேறுபாடு கொண்டிருப்பீர்கள். கலக்கத்திலும் தடுமாற்றத்திலும் நீங்கள் காணப்படுவீர்கள் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  அப்போது இந்த வழிகேடான ஷைதான்கள் உருவாக்கும் ஜமாத்தகளுக்கு எதிராக நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் பொன்னான அறிவுரையை வழங்கிச் சென்றுள்ளார்கள். 

 فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين      عضوا عليها بالنواجذ 

எனது வழிமுறையினையும் குலபா ராசித்தீன் அல் மஹ்தியீனுடைய வழிமுறையினையும் நீங்கள் உறுதியாக உங்களுடைய கடைவாய்ப் பற்களினால் பற்றிப் படித்துக் கொள்ளுங்கள் என்று இதனை உறுதிக்கு மேல் உறுதியாக ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். 
 
எவர்களுடைய மாய ஜாலங்களுக்கும் மக்கள்  மயங்கி இந்த ஸஹாபாக்களுடைய பாதையை விட்டு விட வேண்டாமென்றும் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இதுவே நேரானசத்தியமானஉண்மையான பாதை. 
என்றாலும் எவரெல்லாம் ஸஹாபாக்களுடைய பாதையைத் தவிர்ந்து வேறு பாதையை உருவாக்கியுள்ளார்களோ 

“ وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا ” – 

அவன் சென்றடையும் இடம் ஜஹன்னம். அதுவே மிக கெட்ட இடமாகும் என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனுடைய அல்குர்ஆனில் எச்சரித்து சரியான வழி எதுவென்றும் வழிகாட்டியுள்ளான்.

எனவே இல்ம்” –மார்க்கக் கல்வியினை தேடிமார்கக் கல்வியுடன் வாழ்ந்துஉண்மையான மார்க்கத்தினை அடைய வேண்டும் என்று துடிக்கும் உள்ளங்கள் அல்லாஹ்வுடைய தூதருடைய வழியினையும் ஸஹாபாபக்களுடைய வழியினையும் தவிர” பிரிதொரு வழி கிடையாது என்பதை உணர்ந்து அவ்வழி பின்பற்றி வாழ வேண்டும். இன்ஷாஅல்லாஹ்!. அதுவே நேரான பாதை ஆகும். 

சகோதரர் அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் அலி அவர்களின் ஜும்மா குத்பாவின் 
எழுத்து வடிவம் . தந்தவர் உம்மு ருசைக்