[அவர்களை மிகைக்கக் கூடியவர்கள் எல்லை மீறியவர்கள். அவர்களைத் தவிர்க்கக் கூடியவர்கள் மார்க்கத்தில் குறை செய்யக் கூடியவர்கள்]

அவர்களை மிகைக்கக் கூடியவர்கள் எல்லை மீறியவர்கள். அவர்களைத் தவிர்க்கக் கூடியவர்கள் மார்க்கத்தில் குறை செய்யக் கூடியவர்கள்

நபி சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

“ எனது வழிமுறையையும், எனக்குப் பின்னர் நேர்வழி பெற்ற, நேர்வழி காட்டக் கூடிய கலீபாக்களின் வழிமுறையையும் உங்கள் மீது கடமையாக்குகிறேன். அதனை கடைவாய்ப் பற்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். காரியங்களில் புதிதானதாக மார்க்கத்தில் உருவாக்கப் படுவதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படக் கூடிய ஒவ்வொன்றும் பித்அத்தாகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்.

அவர்களது அடிச்சுவடுகளை பின் தொடர்வதற்கும் அவர்களது வழிகாட்டுதல்களை எடுத்து நடப்பதற்கும் நாங்கள் ஏவப்பட்டுள்ளோம். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவைகளை கொண்டும் நாங்கள் எச்சரிக்கபட்டுள்ளோம். நிச்சயமாக அவைகள் வழிகேடானவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளோம். 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள். 

பின்பற்றுங்கள் பித்அத்களை உருவாக்காதீர்கள். நிச்சயமாக நீங்கள் போதுமாக்கப் பட்டுள்ளீர்கள். 

உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். 
" அந்த ஸஹபாக்கள் சமூகம் நின்ற எல்லையில் நில். ஏனெனில் அவர்கள் கல்வியின் அடிப்படையை அந்த எல்லையில் நின்றார்கள். தெளிவான பார்வையுடன் தடுத்துக் கொண்டார்கள். 

அவர்களை மிகைக்கக் கூடியவர்கள் எல்லை மீறியவர்கள். அவர்களைத் தவிர்க்கக் கூடியவர்கள் மார்க்கத்தில் குறை செய்யக் கூடியவர்கள். அவர்களை விட்டும் ஒரு கூட்டம் அவர்களை குறைவானதாக நோக்கியதால் மார்க்கத்தில் காய்ந்து விட்டார்கள். 


ஏனையவர்களில் அவர்களை வரம்பு மீறியவர்கள் மார்க்கத்தில் எல்லை மீறிப் போனார்கள். நிச்சயமாக அவர்கள் இவ்விரு சாராருக்கும் மத்தியில் நேரான பாதையில் மீது இருக்கிறார்கள். 

இமாம் அபூ அம்ர் அல அவ்ஸாயி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 


முன் சென்றவர்களின் அடிச்சுவடுகளை உன்மீது கடமையாக்கிக் கொள். மனிதர்கள் உன்னை மறுத்தாலும் சரி. இன்னும் மனிதர்களின் கருத்துக்களை விட்டும் உன்னை எச்சரிக்கிறேன். வார்த்தையின் மூலம் உனக்கு அதனை அவர்கள் அலங்கரித்தாலும் சரி. 

முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல் அத்ரமீ அவர்கள் பித்அத் ஒன்றைக் கூறி அதன் பால் மக்களை அழைக்கின்ற ஒரு மனிதருக்கு கூறினார்கள். 


இதனை அல்லாஹ்வின் தூதர் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன் அவர்கள் அறிந்தார்களா? அல்லது அறியவில்லையா? 


அதற்கு அவன் இதனை அறியவில்லை எனக் கூறினான். 


இவர்கள் அறியாத ஒரு விடயத்தை நீ அறிந்துவிட்டாயா? என வினவினார்கள். 


அதற்கு அம் மனிதன் நிச்சயமாக நான் கூறுவேன் அதனை அவர்கள் அறிந்திருந்தார்கள். 


அதனை பேசாமல் இருப்பதற்கோ அல்லது அதனை நோக்கி மக்களை அழைக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு போதுமானதாக இருந்ததா அல்லது போதுமானதாக இருக்கவில்லையா? 


ஆம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. 


அல்லாஹ்வின் தூதருக்கும், அவாரது கலீபாக்களுக்கும் போதுமானதாக இருந்த ஒரு விடயம் உனக்குப் போதுமானதாக இல்லையா? 


அந்த பித் அத்அத்கார மனிதன் மௌனமாகி விட்டான். 


அப்போது அங்கிருந்த கலீபா கூறினார்கள், 


" அவர்களுக்கு போதுமானது எவனுக்குப் போதுமானதாக ஆகவில்லையோ அவருக்கு அல்லாஹ்தஆலா அவனுக்குப் போதுமானதாக ஆக்காமல் இருக்கட்டும் " என்று. 


இவ்வாறேதான் அல்லாஹ்வின் தூதருக்கும், அவாது தோழர்களுக்கும் அவர்களை நல்ல நோக்கத்துடன் பின்துயர்ந்த தாபீயீன்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் வந்த இமாம்களுக்கும் மார்க்கக் கல்வியில் ஆழ்ந்த அறிவுள்ள உலமாக்களுக்கும் போதுமானதாக இருந்த அல்லாஹ்வின் பண்புகளை சுமந்த வசனங்களை ஓதுவதில் அதனது அறிவிப்புக்களை வாசிப்பதில் வந்த மாதிரி எத்தி வைப்பதில் எவனுக்கு போதுமானதாக இல்லையோ அவனுக்கு அல்லாஹுதஆலா போதுமானதாக ஆக்காமல் இருக்கட்டும்.


Taken from Lumathul I'thikad .