[வெசாக் பண்டிகை கண்டு களிக்கலாமா ? அங்கு ஆகாரம் உண்டு மகிழலாமா ?]

வெசாக் பண்டிகை கண்டு களிக்கலாமா ?  அங்கு ஆகாரம் உண்டு மகிழலாமா ? 

بسم الله الرحمن الرحيم 

الحمد لله والصلاة والسلام على رسول الله

 وعلى آله وصحبه ومن والاه وبعد


وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا

25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். ( 109 : 6)


இஸ்லாம் அல்லாத மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது , அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது , அத்தினங்களை கொண்டாடுவது , அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அவர்கள் வீட்டுக்கு அனுப்பும் விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்ளல்,அனைத்தும் கூடாது. ஏனெனில் இது  இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை , அவர்களது மதச் சடங்குகளை அங்கீகரிப்பதாக அமையும் என்பதனலாகும். முஸ்லிம் அல்லாத மதத்தவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!

பௌத்தர்கள் வணங்கி வழிபடும் ஒரு மனிதரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் இந்த வெசாக் பண்டிகை. இந்த மனிதரை தெய்வமாக கொண்டாடும் மக்கள் , அவரது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக , விளக்குகளால் ஜோடனை செய்து , அவரது வாழ்கை வரலாறை உருவங்களால் உருவகப்படுத்தி , ஜோதிடன் மூலம் சுப வேளை கணித்து , அந்த சுப வேளையில் அந்த ஜோடனை தோரணங்களையும் , அதனை கண்டு 

களிக்க வருபவர்களுக்கு ஆகாரம் வழங்கும் நிலையங்களையும் திறந்து கொண்டாட்டத்தினை ஆரம்பிப்பார்கள். இந்த எல்லா செயல்பாடுகளிலும் ஆண்களும் பெண்களும் சகஜமாகவும், அதற்கு மேலாககவும் ஒட்டி உரசி காரியமாற்றுவார்கள். 

இப்படி, அடி முதல் நுனி வரை குப்ரும் ,ஷிர்க்கும் , பாவமான காரியங்களும் கொண்ட சிலை வணங்குபவர்கள் கொண்டாடும் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு பற்றலாமா ? பார்த்து சந்தோசம் அடையலாமா ? பொழுது போக்காக கொள்ளலாமா ? இந்த காரியங்கள் இஸ்லாமிய ஷரியாவில் நேரடியாக தடை என்பதை சாதாரண முஸ்லிம்கள் கூட கண்டுக் கொள்ளலாம். இப்படி நேரடியாக மார்க்கத்தில் தடையான காரியத்தை முஸ்லிம்கள் கண்டு களிப்பதற்கும், உண்டு கழிப்பதற்கும் சென்று ஈடுபடலாமா ? 

கல்வியை தேடுவதோ, இபாதத்தில் ஈடுபடுவதோ , முக்கியமான தேவைகளோ அன்றி இரவை தூக்கம் இன்றி கழிக்க அனுமதி இல்லை. அப்படி இருந்தும், இந்த குப்ரா ஷிர்க்கான பாவமான கொண்டாட்டத்தை கண்டு களிக்கவும், உண்டு களிக்கவும், தமது குமரி பெண் பிள்ளைகள் வரை அழைத்துக் கொண்டு எமது முஸ்லிம் சமுகம் செல்வது மகா பாதக செயலாகும். தானும் கெட்டு 
தனது குமரிப் பெண்ணையும் , குழந்தைகளையும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த தீயச் செயல் உடனடியாக அறிவுறுத்தப்பட்டு நிறுத்தப் பட வேண்டும், இல்லையென்றால், அல்லாஹ்வின் தண்டனைக்கு அனைவரும் ஆளாக வேண்டி வரும். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 

இந்த மகா பாதக செயலுக்கு , சமுக நல்லிணக்கம் என்று கூட ஒரு சிலர் சொல்லுகின்றனர். இந்த மகா பாதக செயலை வந்து கண்டு களியுங்கள் , உண்டு மகிழுங்கள் என்று யாரும் நிர்பந்திக்கப்படவில்லை. மாற்றமாக, இதற்காகவே என்று எமது இளைய சமுகம் விசேட ஆடை முதல், ஆபரணங்கள் வரை அணித்து காபிர்களுக்கு சற்றும் சளைக்காமல் ஒப்பாக கூத்தடிக்கின்றனர். இதனை , பெற்றோர்கள் , ஆசிரியர்கள், பொறுப்பானவர்கள் கண்டிப்பதாகவோ தெரியவில்லை. இதனால், முஸ்லிம் இளைஞ்சர் யுவதிகள் மதுவிலும் , விபச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். யாரும் கண்டுக் கொள்வதாகவே தெரியவில்லை. 

இன்னும், இந்த பண்டிகைக்கு தேவையான அலங்கார பொருட்கள் முதல் , அவசிய சாமான்கள் வரை எமது முஸ்லிம்கள் இறக்குமதி செய்து விநியோகித்து, இரவு இரவாக விற்பனையிலும் ஈடுபடுகின்றனர். 
வல்லாஹு முஸ்தஹான். என்ன குப்ரும் ஷிர்க்கும் நடந்தாலும் பரவாயில்லை, தனது பை நிறைந்தால் சரி என்று இருக்கிறார்கள் எமது முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்களின் பண்டிகைகளை குறி வைத்து 
அதற்காகவே என்று வியாபாரங்கள் செய்வது மார்கத்தில் தடை என்பது கூட அறியாத மக்களாக தான் எமது முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 

யூதர்கள் முஸ்லிம்களை கொலை செய்வதால், உடமைகளை அழிப்பதால், யூதர்களின் உற்பத்திகளை வாங்காதீர்கள், பகிஷ்கரிப்பு செய்யுங்கள் என்று கதறும் எமது இஸ்லாமிய உம்மத், அல்லாஹ்வுக்கு இனை கற்பித்து செயல் படும் கொண்டாட்டத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்களை தாராளமாக 
கொடுத்து , விற்பனை செய்து தனது வயிற்றை நிறைக்கிறது. மனிதனுக்கு அழிவு , அட்டுழியம் செய்தால் தடை , ஆனால், மனிதனை படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக அட்டுழியம் செய்வதற்கு முஸ்லிம்களே துணை. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 

இவ்வாறு , இந்த வெசாக் பண்டிகை என்ற கொண்டாட்டத்தில் முஸ்லிம்களில் பலர் அறிந்தோ அறியாமலோ தனது பங்களிப்பை செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தீயச் செயல் அறிவுறுத்தப்பட்டு உடனடியாக 
நிறுத்தப் பட வேண்டும். முஸ்லிம்கள் தவ்ஹீதின் பக்கம் திரும்ப வேண்டும். ஷிர்க்கு தனது வெறுப்பை காட்ட வேண்டும். அதில் வீழ்ந்து விடாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். சிந்திப்பார்களா ?

இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்று முழுதாக காபிர்களுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவோ , மாற்று மதத்தவர் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்தவோ இவ்வாறான வழிமுறைகளை பயன்படுத்தவில்லை. 

மார்க்கத்தின் எந்தவொரு இபாத்திலும் அவர்களை கூட்டு சேர்க்கவோ , அவர்களுடைய பண்டிகை காலங்களிலோ , கொண்டாட்டங்களிலோ அவர்களுடன் ஒன்றர கலக்கவோ இல்லை. இன்னும் எமது அருமை சஹாபாக்களோ , தாபியீன்களோ , இவர்களை பின் தொடர்ந்த சலபுஸ் சாலிஹீன்களோ இந்த வழிமுறையை கையாளவில்லை. 

  •  إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்

நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை முஸ்லிம்கள் மறந்ததனாலேயே அது இன்றைய இழி நிலையை அடைந்துள்ளது. எனவே, முஸ்லிம்கள் அவர்களின் இஸ்லாத்தை நோக்கித் திரும்பினால் அன்றி வாழ்வில்லை, கடந்த பல தசாப்தங்களாக முஸ்லிம் உலகம் இஸ்லாம் அல்லாத கொள்கைகளை பரீட்சித்துப் பார்த்து படுதோல்வி கண்டுள்ளது மட்டுமில்லாமல் பாவத்தில் வீழ்ந்ததுவே மிகுதி.

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!