[உலக கிண்ண கிரிகட் போட்டிகளும், இஸ்லாமிய உபதேசங்களும்]

உலக கிண்ண கிரிகட் போட்டிகளும், இஸ்லாமிய உபதேசங்களும் 

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம், அல்ஹம்துலில்லாஹ் வஸ் ஸலாத்து வஸ் 

ஸலாம் அலன் நபிய அமா பஃத்


  وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

மனித இனத்தையும் ஜின் இனத்தையும் என்னை வணங்குவதற்காகவே 

அன்றி படைக்க வில்லை ( 51:56)


மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை அல்லாஹ் இவ்வாறு தெளிவாக கூறிவிட்டான்.


வணக்கம் என்பது என்ன என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹீமஹுல்லாஹ் கூறும்போது 


" ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு பெயர்ச் சொல், அல்லாஹ்வின் விருப்பத்தையும் திருப்பதியை தரக்கூடிய செயல் உள்ளாலும் வெளியாலும், சொல்லாலும் செயலாலும் செய்யப்படுவதாகும்.  "..


எனவே, எம்முடைய ஒவ்வொரு அசைவும் அல்லாஹ்வின் திருப்தியை விருப்பத்தை நாடி தேடி செய்யப்பட வேண்டும். 


இது இப்படி இருக்க , இலங்கையில் தற்போது நடைபெற இருக்கும் உலக கிண்ண கிரிகட் போட்டியில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தின் நிலைப்பாட்டில் தமது ஆதரவை விளையாடும் நாடுகளுக்கு செய்ய வேண்டும் எனவும், பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் ஒரு அறிவுறுத்தலை, இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்டு உள்ளது. 


இதனை , மேலோட்டமாக பார்த்தால், பிரச்சனைகள் இன்றி வாழ வழி சொல்வது போன்று தான் தெரியும். ஆம், மார்க்கத்தின் போதனைகளை ஒரு புறம் எறிந்து விட்டு,  உலக வாழ்க்கையில் நிம்மதிக்கு வழி காட்டுகிறார்கள். உம்மத்துக்கு மார்க்க வழி காட்டும் பொறுப்பு ஏற்று இருக்கும் இந்த சபை , மார்க்கத்துக்கு மாற்றமாக உலக வழி காட்டுகிறது என்றால், இவர்களிடம் மார்க்க வழி காட்டுதல் பெற முடியுமா ?  


முதலில், இந்த வெள்ளையர்களின் விளையாட்டில்  ஆதரவு தெரிவிப்பதில் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முன்பு, இந்த விளையாட்டுகளில் ஒரு முஸ்லிம் தனது அருமையான நேரத்தை செலவிட முடியமா என்று சிந்திப்பதில்லையா ? 


படைக்கப்பட்ட நோக்கமே, இறை திருப்தியை பெறுவது என்று அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின்பும் இந்த விளையாட்டில் யாருக்கு ஆதரவு என்று பேசுவதா ? அல்லது இந்த வீண் வேடிக்கை விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி, இறை திருப்தியை தரும் காரியத்தில் ஈடுபட வழி காட்டப்பட வேண்டுமா ? 


இவ்வாறு, மார்க்க விடயங்களில் பொடுபோக்காக நடந்துக் கொள்ளும் இந்த சபை முஸ்லிம்களை சரியான பாதையில் வழி நடத்துமா ? எதிர்பார்கத்தான் முடியுமா ? 


அன்பின் இஸ்லாமிய சகோதர்களே, நாம் முதலில் இந்த கிரிகட் விளையாட்டு என்பது ஒரு சூதாட்டமும், வீண் விளையாட்டும் என்பதை நல்ல முறையில் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் வெள்ளையர்கள். 


மேலும், காலை முதல் மாலை வரை முழுதும் அதிலேயே கழிக்கப்படும். இன்னும், இது பகல் இரவு போட்டி என்று வேறு நடை பெறுகிறது. ஓர் இரு மணி நேரங்கள் பயனுள்ள விளையாட்டுக்களில் கழித்தால் ஆவது ஓரளவு அது பற்றி கவனத்தில் கொள்ளலாம். மாற்றமாக , முழு நேரங்கள் வீணடிக்கப்படுவதும் , தூக்கத்தில் கழிக்கப்பட வேண்டிய, 

இபாத்துக்களில் கழிக்கப்பட வேண்டிய இரவும், வீண் விளையாட்டில் கழிக்கப்படுகிறது. இதற்கு மார்கத்தில் அனுமதி இல்லை. 


இன்னும், உலக கோப்பை போன்ற பெரும் போட்டிகள் ஆரம்பிக்கும் போது எல்லாவிதமான குப்ரும் ஷிர்க்கும் பாவமான காரியங்களும் கொண்டு தான் ஆரம்பிக்கப்படும். 


மேலும் இதனை கண்டு கழிக்க ஆண்களும் பெண்களும் கலந்து 

மேலும் பல தீய காரியங்கள் நடைபெறுகின்றன. அத்தோடு, இந்த நிகழ்ச்சிகள் ஊடகங்கள் ஊடாக காண்பிக்கப் பட்டு நாடே அதில் லயித்து அனைத்து காரியங்களும் பாழ்படுத்தப் படுகின்றன. அத்தோடு, தற்போது, இசை கருவிகள் அரங்கத்தில் கொண்டு வரப்பட்டு , கூத்தும் கும்மாளம் நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார் என்று காசு பந்தயம் எனும் சூதாட்டமும் உலகளாவிய ரீதியில் நடை பெறுகிறது. 


   يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ  ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2: 219)


وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ


ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)


இவ்வாறான ஷைத்தானியத் காரியம் தான் இந்த கிரிகட். இந்த விளையாட்டின் தீங்குகளை அடுக்கி கொண்டே போகலாம். இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விளையாட்டாக கருத முடியுமா ? இதனை முஸ்லிம்கள் கண்டு கழித்து சந்தோசம் அடைய முடியுமா ? இது இறை திருப்தியை பெற்று தருமா ? அல்லது அல்லாஹ்வின் வெறுப்பை பெற்று தருமா ? 


இந்த விளையாட்டை , பெரும்பான்மை சமுகத்தின் நிலைப்பாட்டில் ஆதரிக்கும் படி, முஸ்லிம்களை வழி காட்ட வந்துள்ளோம் என்று சொல்லும் ஒரு சபை, கேட்டுக் கொள்கிறது என்றால், இந்த சபை முஸ்லிம்களை வழி கெடுக்க முயற்சிக்கிறது என்று தான் அர்த்தம், வழி காட்ட அல்ல . 


மார்க்கத்துக்கு முரணான காரியத்தை எப்படி பெரும்பான்மை நிலைப்பாட்டில் செய்வது, ஆதரிப்பது. அப்படி சொன்னால், என்ன அர்த்தம் ? குப்ருடன் சேர்ந்து போங்கள் என்று மறைமுகமாக சொல்வதாக அமையாதா ? முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். 


இவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தெரியாது என்பதின் 

பட்ட வர்த்தனமான அத்தாட்சிகள் தான் இப்படியான ஆலோசனைகள். 


இதனால் தான் அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ, அதாவது உண்மையான உலமாக்கள் , கல்வியில் தேர்ந்தவர்கள் என்று அறியப் பட்டவர்கள் கூறிவிட்டார்கள் 


" நீ யாரிடமிருந்து இல்மை பெற்றுக் கொள்கிறாய் என்பதை கவனித்துக் கொள்... 
கிபாருத் தாபியீன் அப்துல்லா இப்னு முபாரக் >> இந்த மார்க்கம்அறிவிப்பாளர் தொடர் கொண்டது. அதுமட்டும் இல்லையெனில் எவரும் எதனையும் கூறுவார்.


எனவே, எமது முஸ்லிம்கள் இப்படியான வீணான காரியங்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். எமது நேரங்களையும் காலங்களையும் மார்க்க கல்வியை பெறுவதில் செலவிட வேண்டும், செலவிட பழக வேண்டும். ஏனெனில், மார்க்க கல்வி தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். 


முதலில் , கடமையை பூர்த்தியாக்குவோம், பின்னர் விளையாட்டுக்களை பற்றி சிந்திப்போம். ஏனெனில், அல்லாஹ், இந்த கடமையான விடயங்களை பற்றி நாளை மறுமையில் விசாரிப்பான். இன்னும், இந்த மார்க்க கல்வி இல்லாததால் தான் எம்முடைய சமுகம் கெட்டு குட்டிச் சுவராகிக் கொண்டு செல்கிறது. 


எனவே, இல்மை தேடி படித்து இறை திருப்தி பெறுவோம். அறிவிலிகளையும், அவர்களை கொண்ட சபைகளையும் விட்டு ஒதுங்கி கவனமாய் இருப்போம். 


அல்லாஹ்வே மிக அறிந்தவன்.