[தேசிய தின கொண்டாட்டங்களும் இஸ்லாமிய நிலைப்பாடும்]

தேசிய தின கொண்டாட்டங்களும் இஸ்லாமிய நிலைப்பாடும் 


தேசிய தினம் என்று ஒரு கொண்டாட்டத்தை இந்த குப்பார்கள் உருவாக்கியதோடு அந்த கொண்டாட்டத்தில் ஈடுபடும் நிமித்தம்  நாட்டு மக்களுக்கு அரசாங்கங்களும் இராணுவமும் பனிக்கின்றன. இதன் குப்ரான தன்மையும் வழிமுறையையும் அறியாத எமது மக்களும் அதனை ஆதரிப்பதும் அந்த கொண்டாடங்களில் பங்கெடுப்பதுமாக இருக்கிறார்கள். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை கைப்பற்றினார்கள்.அந்த நாளை கொண்டாடினார்களா ? அருமை சஹாபாக்கள் ரோமை , ஸ்பெயினை கைப்பற்றினார்கள் , அந்த நாளை கொண்டாடினார்களா என்றால் இல்லை. 


மேலும், நாம் வாழக் கூடிய நாடு , தாருல் குப்ர். குப்ரான நாட்டை விட்டு வெளியேறி இஸ்லாமிய நாட்டை நோக்கி செல்ல வேண்டும் என்பது தான் இஸ்லாமிய வழிமுறை. எமக்கு அந்த வசதி இல்லாததால் இந்த குப்ரான நாட்டில் வாழ்கிறோம். 


எனவே, முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த குப்ர் நாட்டின் தேசிய தினத்தில் பங்கெடுக்க முடியாது. இந்த நாட்டிலே அல்லாஹ்வின் ஆட்சியை நிலை நாட்ட முடியாது. குப்ரான் ஆட்சி நடக்கும் இந்த பூமியை கொண்டாட முடியாது. 


மேலும், கொடிகள் பிடிப்பது என்பது ஜிஹாதில் தான். மாற்றமாக தேசிய தினத்தில் கொடி பிடிக்க முடியாது , ஏற்றவும் முடியாது. மேலும், இந்த கொடியேற்றத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த கீதங்கள் முழுக்க முழுக்க குப்ரான வார்த்தைகளை கொண்டு இயற்றப்பட்டதாகும். அதே நேரத்தில், அந்த குப்ரான கீததுக்காக கண்ணியம் செய்யப்படும் வகையில் எழுந்து நிற்க வேண்டும். தமது செயல் பாடுகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். 


" அல்லாஹ்வை அன்றி யாருக்கும் கண்ணியமாக தாழ்மையுடன் , நிற்க முடியாது " என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா கட்டளை இட்டு விட்டான். எனவே, அப்படி நிற்பது ஷிர்க் ஆகும். அத்தோடு, இந்த கீதங்கள் அனைத்தும் இசையுடனான மேள தாளத்துடன் தான் இசைக்கப்படும். இது அடுத்த ஹராமாகும். 


இன்னும், இந்த தேசிய கொடிகளில் உயிர் படங்களும் காணப்படுகிறன. இவற்றை தொங்க விடும் இடங்களுக்கு மலக்குமார்கள் வரவும் மாட்டார்கள். இப்படி பலவகையான ஹராம்கள் கலந்ததுதான் இந்த தேசிய தினம். 


பூமி என்பது அல்லாஹ்வினுடயது . அந்த அடிப்படையில் அவனது பூமியில் தான் நாம் வாழ்கிறோமே தவிர குப்பார்களினுடயது அல்ல . அந்த குப்பார்களின் கட்டுப்பாட்டில் அந்த பூமி இருக்கிறது என்பதற்காக அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டு இவர்களுக்கு விசுவாசமோ , வழிபாடுகளோ செய்ய முடியாது . 


எனவே, எமது விசுவாசம் முதலில் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டும். அவனுக்கு இணை கற்பித்துக் கொண்டு குப்ரான ஆட்சிக்கு விசுவாசம் எந்த முறையிலும், எந்த அடிப்படையிலும் செய்ய முடியாது. இது தான் ஒரு முஃமீனின் நிலைப்பாடாக இருக்கும். 


இந்த விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் , எமது மார்க்க போதகர்கள், 

மவ்லவிகள் என்று சொல்கிறவர்கள் கூட கொடிகளை தொங்க விட்டு 

நாட்டுக்கு விசுவாசம் காட்டும் படி பிரச்சாரம் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் கொடிகளை தொங்க விடும்படியும் கூறுகிறார்கள் , தொங்கவும் விட்டு விடுவார்கள் போல் தான் தெரிகிறது. அல்லாஹ்வின் பற்றை விடவும் நாட்டு பற்று கிறுக்குத்தனமாக இவர்களுக்கு கூடிவிட்டது போன்று தான் தெரிகிறது.அல்லாஹ் தான் எம்மனைவரையும் காப்பாற்ற வேண்டும். இது, தேசிய தினம் சம்பந்தமாக இஸ்லாமிய கண்ணோட்டத்தை , 

இஸ்லாத்தின் நிலைப்பாட்டை , முஸ்லிம் அதனுடன் நடந்து 

கொள்ளும் வழிமுறையை எமது மக்களுக்கு தெளிவு படுத்துவதற்க்காக செய்யப்படுகிறது.