[மாற்று மத பண்டிகைகளும், இஸ்லாமிய கட்டுப்பாடுகளும்]

மாற்று மத பண்டிகைகளும், இஸ்லாமிய கட்டுப்பாடுகளும் 

وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا

25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.


لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 


உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். ( 109 : 6) 


இஸ்லாம் அல்லாத மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது , அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது , அத்தினங்களை கொண்டாடுவது , அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அவர்கள் வீட்டுக்கு அனுப்பும் விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்ளல்,அனைத்தும் கூடாது. ஏனெனில் இது  இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை , அவர்களது மதச் சடங்குகளை அங்கீகரிப்பதாக அமையும் என்பதனலாகும். முஸ்லிம் அல்லாத மதத்தவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!


இந்து மதத்தவர்கள் பொங்கல், தீபவாளி போன்ற பண்டிகைகளில் அவர்களின் சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடும் என்று தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜமாத்தும் ஏனையோரும் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களை முழுமையாக இஸ்லாம் தடை செய்யவில்லை என்று  பொதுவான காலங்களில் மாற்று மதத்தவர்களுடன் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிமாறிக் கொண்டவைகளை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். ஏனெனில் இதுவும்   இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை , அவர்களது மதச் சடங்குகளை அங்கீகரிப்பதாக அமையும் என்பதனலாகும். சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

ஜனவரி புதுவருடத்தை , முதல் திகதியை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு, முஸ்லிம்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர். பிறை கணக்கு என்றிலிருந்து ஆரம்பம் ? ரோமன் காலண்டரிலிருந்தா ? ஜுலியஸ் சீசர் கணக்கு போட்ட நாளிலிருந்தா ? முஸ்லிம் என்று சொல்லும் நாம் ஏன் இந்த ஆங்கிலக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் ? பிறந்த தேதி முதற் கொண்டு ஆங்கில மாதம், வருடம் என்று எல்லா நாட்களையும் ஆங்கிலத் தேதிகளோடு தான் தொடர்பு படுத்திப் பார்க்கிறோம். ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்வி முறையையும் அலுவல் முறையையும் பின்பற்றும் வரையும், ஒரு முஸ்லிமின் வழக்கம் இப்படித்தான் இருக்கும். முஸ்லிம் மீது அதன் எதிரிகள் மேற்கொண்ட கலாசாரப் படையெடுப்பின் விளைவு உம்மத் இத்தகைய உணர்ச்சியற்ற / உயிரோட்டமில்லாத நிலையை அடைந்துள்ளது. 

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, இது குப்ர் ஆகும்.


‘எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)


இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்று முழுதாக காபிர்களுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவோ , மாற்று மதத்தவர் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்தவோ இவ்வாறான வழிமுறைகளை பயன்படுத்தவில்லை. 


மார்க்கத்தின் எந்தவொரு இபாத்திலும் அவர்களை கூட்டு சேர்க்கவோ , அவர்களுடைய பண்டிகை காலங்களிலோ , கொண்டாட்டங்களிலோ அவர்களுடன் ஒன்றர கலக்கவோ இல்லை. இன்னும் எமது அருமை சஹாபாக்களோ , தாபியீன்களோ , இவர்களை பின் தொடர்ந்த சலபுஸ் சாலிஹீன்களோ இந்த வழிமுறையை கையாளவில்லை. 


  • அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். 


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை முஸ்லிகல் மறந்ததனாலேயே அது இன்றைய இழி நிலையை அடைந்துள்ளது. எனவே, முஸ்லிம்கள் அவர்களின் இஸ்லாத்தை நோக்கித் திரும்பினால் அன்றி வாழ்வில்லை, கடந்த பல தசாப்தங்களாக முஸ்லிம் உலகம் இஸ்லாம் அல்லாத கொள்கைகளை பரீட்சித்துப் பார்த்து படுதோல்வி கண்டுள்ளது மட்டுமில்லாமல் பாவத்தில் வீழ்ந்ததுவே மிகுதி.


அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!