[காதியானிக் கொள்கையும் இஸ்லாமிய தீர்ப்பும்]

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம்  சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே, காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும்.

இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். காதியானி என்பது ஒரு தனி மதமாகும். 

ஆனால் காதியானிகளை முஸ்லலிம் என்று அடையாளப் படுத்த காதியானிகளும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. 

இதன் பின்னணியில் இருப்பது பிரிட்டிஷ் அரசு. காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது என்பதும் அதன் கிளை அலுவலகம் ஒன்று இஸ்ரேலில் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.


இறுதி நபியாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகிய அஹ்மது என்ற பெயரைக் கொண்டு தங்களை ‘அஹ்மதிகள்’ என அழைப்பது மக்களை ஏமாற்ற ‘காதியானிகள்’ செய்யும் ஒரு தந்திரமாகும். 


காதியான் எனும் ஊரிலே பிறந்து, தான் நபி என்று பிதற்றிய மிர்ஸா குலாம் அஹ்மது எனும் தஜ்ஜால்களில் ஒருவனை  பின்பற்றுபவர்களே காதியானிகள். 


இவர்களையும், இவர்களது நவீன நபியின் தடுமாற்ற நிலையையும், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் ,என்பவைகளையும் மக்களுக்கு எடுத்துக் காட்டவே ...... 


 • காதியானிக் கொள்கையும் இஸ்லாமிய தீர்ப்பும் 1 2 3 4 
 • காதியானிகளின் பிரச்சாரம் மார்க்கமா ? அல்லது மறைமுகமான அரசியலா ? 1 2
 • காதியானிக் கொள்கையின் உண்மைகளும் இஸ்லாத்திற்க்கெதிரான சதி திட்டங்களும் 1 2 
 • காதியானிகளின் உலக ஆடம்பர மயக்கங்களும் , இஸ்லாம் காட்டும் ஜென்னத் நோக்கிய பயணமும் 1 2 
 • காதியானி கொள்கையின் பித்தலாட்டங்களும் இஸ்லாமிய கொள்கையின் உறுதித் தன்மைகளும் 1 2 3

இவர்களது குப்ரான கொள்கைகள் சில =} 
 • தன்னை ஒரு நபி என்று வாதிடுவது 
 • ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்படவில்லை , மரணித்து விட்டார்கள் .
 • முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள். 
 • வானத்தில் இருந்து இறங்க மாட்டார்கள். 
 • ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 120 வருடங்கள் வரை உயிர் வாழ்ந்து இன்றைய இந்தியாவில் இருக்கும் கஷ்மீர்க்கு வந்து மௌத்தாகி ஸ்ரீ நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஆதாரம் பைபிள் மற்றும் மக்கள் கதைகள். 
 • நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் மிஃராஜ் என்று வானத்துக்கு சென்று நபி மார்களையும் பின்னர் அல்லாஹ்வையும் சந்தித்து உரையாடவில்லை. 
 • ஜின்கள் என்பதும் மனிதர்களே.

 • நபி ஆதாமும் அவரது மனைவியும் சொர்கத்தில் வசிக்கவில்லை. அவர்கள் இப்பூமியிலுள்ள ஒரு தோட்டத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் . நவீன கண்டுபிடிப்புகளிலிருந்து இந்த தோட்டம் பாபிலோனியாவுக்கு அருகாமையிலுள்ள ஒரு தோட்டம் என தெரியவந்துள்ளது.


 "ஆங்கிலேயர்களால் தோற்று விக்கப்பட்ட நபி" என்ற விடயத்திற்கு காதியானிகள்  பதில் அளிக்கையில் :} 


"தற்போது எங்களுக்கு எதிராக எழுதுகோல் எனும் வாள் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆட்சேபனை எனும் அம்புகள் எங்களை நோக்கி எறியப்படுகின்றன. 


எனவே இறைவனின் புனித மார்க்கமான இஸ்லாத்தைக் காப்பாற்றுவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனிதத் தன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும் நாம் நமது எழுதுகோலைப் பயன்படுத்துகின்றோம்.


இதற்கான் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் வழிங்கியுள்ள ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இறைவன் நம்மை வாழவைத்திருக்கின்றான். அதற்காக அந்த மேலான இறைவனுக்கு நாம் நமது நன்றியை பிரகடனப்படுத்தும் போது இவர்கள் அதனை ஆட்சேபிக்கிறார்கள். 


நாம் யாரையும் சலுகைக்காக எதிர்பார்த்து எதையும் கூறவில்லை. ஆனால் நமது பிரச்சாரத்திற்கு எவ்விதத் தடையும் விதிக்காமல் அதற்க்கான முழு உரிமையும் வழங்கியுள்ள ஓர் ஆட்சிக்கு நாம் நன்றி கூறாமல் இருக்க முடியாது. (மல்பூசாத் பக்கம் 232)


எப்படி கதை ? மிர்ஸா குலாம் வந்ததே பிரித்தானியர்களின் இரத்தத்தில் ஊறிப்போன சிலுவையை உடைக்க என்று அவர் கூற , அந்த மனிதருக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுக்கிறது , மிர்ஸா குலாம் நன்றி தெரிவிக்கிறார். 


உலகம் அறிந்த உண்மைதான் பிரித்தானியா முஸ்லிம்களுடன் எப்படி நடந்து கொள்கிறது என்பது. இந்த பிரித்தானியா , இஸ்ராயில் போன்றவைகள் காதியானிக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள், உதவி செய்கிறார்கள் என்றால் , காதியானிகளை பற்றி அறிந்துக் கொள்ள இதைவிட அத்தாட்சி வேண்டுமா ?  


இவ்வாறு  பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவித்து, தன்னை நபி என்று சொல்கிறவர், தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டுகிறார். 


இவர்களும் எங்களுக்கு இதனை பதிலாக சொல்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ?!