[ஷேக் ஸைத் இப்னு ஹாதி அல் மத்கலி அவர்களின் உபதேசம் எழுத்து வடிவம்]

ஷேக் ஸைத் இப்னு ஹாதி அல் மத்கலி அவர்களின் உபதேசம் 06 முஹர்ரம் 1433 / 02 டிசம்பர் 2011 சவுதி நாட்டின் தெற்குப் பிரதேசத்தில் ஸாமிதா என்ற பிரதேசத்தில் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தின் சிறப்பான ஆலிம்களில் ஒருவரான அலிமுர் ரப்பானி அல்லாமா அஷ் ஷெய்க் ஸைத் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்களி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் சென்ற வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1433ம் ஆண்டு முஹர்ரம் மாதம் 6ம் பிறையில் எங்களுக்கு, இலங்கை வாழ் மக்கள்களுக்கு செய்த உபதேசத்தை உங்கள் முன்னால் வைக்கிறோம் . 


அதற்கு முன்னால் இந்த நாட்டிற்கு வருகைதந்த அவர்களுடைய மகன் அபூ ஹாதிம் அலி இப்னு ஸைத் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்களி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் எங்களுடைய  அழைப்பு பணியிலே ஒத்துழைப்பைத் தந்தது மட்டுமில்லாமல் அவருடைய நாட்டுக்குத் திரும்பி சென்றதன் பின்னால் எங்களோடு இருக்கும் தொடர்பை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக மீண்டும் மீண்டும் எங்கள் நிலவரங்களை விசாரித்து எங்களுக்கு இப்படியான ஒரு ஏற்பாட்டை செய்து தந்தார். 


அல்லாஹுத்தஆலா அவருடைய தந்தையான அஷ் ஷேய்க் ஸைத் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்களி ஹபிழஹுல்லாஹ் அவர்களுக்கும், அவரது மகனுக்கும் அருள்பாளிக்க வேண்டும். 


அதேபோன்று இப்படியான ஒரு மஜ்லிசை எங்களுக்கு ஏற்பாடு செய்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
எவ்வளவு தொலைவு தூரத்தில் இருந்தாலும் உலமா அஹ்லுஸ் ஸுன்னதி வல்ஜமாஅத்தினர்களோடு எங்களை அவன் தொடர்பு படுத்திவைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். 


அதே போன்று அந்த அல்லாஹுத்தஆலா விடத்திலே வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனக்கும், யாரெல்லாம் உலமா அஹ்லுஸ்ஸுன்னதி வல்ஜமா அத்தினர்களுடைய, ஸலபுஸ் ஸலிஹீன்களுடைய குரல்களை செவிமடுக்கின்றார்களோ அவர்களும், அந்தக் உலமாவுஸ் சுன்னாவின் குரலிலுல்ல பிரயோசனங்களை தங்களது வாழ்க்கையிலே எடுத்து நடந்து,  அதற்காக வேண்டி உதவி ஒத்துழைப்புகளைச் செய்து அதனைப் பரப்புவதற்கான ஏற்பாடுகளிலே ஈடுபட வேண்டுமென்று அல்லாஹுத்தஆலாவிடத்திலே நான் ( அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் அலி ) கேட்டு , அஷ் ஷேய்க் ஸைத் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்களி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளின் மொழிபெயர்ப்பை உங்களின் முன்னால் வைக்கிறேன். 

அஷ் ஷேய்க் ஸைத் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்களி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் முதன்மையாக குறிப்பிடுகின்றார்கள் , அல்லாஹுத்தஆலா தந்த நிஃமத்துகளை நாங்கள் கணக்கிட்டுப் பார்ப்போம் என்றுசொன்னால் எங்களினால் மட்டிட முடியாது. அப்படியான நிஃமத்துக்களில் ஒரு நிஃமத் கத்தான் இந்த ஊடகம் என்ற நிஃமத் எங்களுக்கு மத்தியிலே இருக்கின்றது. 


எங்களுடைய எத்தனையோ தேவைகளை மிகத்தொலைவான தூரத்திலிருந்தாலும் இதனூடாக நாங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றோம். அவன் தான் எங்களுக் இதனை இலகுவாக்கி வைத்தான். இன்னும் அதனை செவிமடுப்பதற்கு , அதனை செய்வதற்கு அல்லது அதனோடு தொடர்பு படுத்துவதற்கு , அவன் தான் எங்களுக்கு சக்தியைத் தந்தான். இது  அல்லாஹ் தந்த நிஃமத்துகளில் மிக மகத்தான ஒரு நிஃமத்தாக இருக்கின்றது. 


எவர்களெல்லாம் நல்ல முறையில் அதனுடைய பிரயோசனங்களை பயண்படுத்திக் கொள்வார்களோ அவர்களுக்காகவும் இன்னும், அபூ ஹாதிம் அலி இப்னு ஸைத் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்களி ஹபிழஹுல்லாஹ் , ஒரு கூட்டத்தினர் எம்மை தொடர்புகொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு அறிவித்ததார்கள். அவர்கள் எனக்கு முன்னால் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஞாபகமூட்டுவதை உபதேசத்தை விரும்புகின்றார்கள் இன்னும்,  அதிலிருந்து அவர்கள் பிரயோசனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டியும் ஆகும். ஏனெனில் நிச்சயமாக இந்த யதார்த்தங்கள் , அதாவது ஒருவருக்கொருவர் உபதேசம் செய்பவைகள் முஃமீன்களின் வழிமுறையாக இருக்கின்றது. உபதேசத்தை செலுத்துவதும் அந்த உபதேசத்தை ஏற்றுக்கொள்வதம் முஃமீன்களின் வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. 


எவர் அல்லாஹுத்தஆலாவுடைய வார்த்தையைப் புரிந்த கொண்டாரே அவர் அதனுடைய அந்தஸ்த்தையும் அதனுடைய தரத்தையும் அறிந்து கொண்டவராக இருப்பார். அதாவது உபதேசத்துடைய தரத்தை அறிந்து கொண்டவராக இருப்பார். 


அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான் 


“ காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதர்கள் நஷ்டத்திலே இருக்கின்றார்கள், எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்களையும் செய்து சத்தியத்தைக்கொண்டு  ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தவர்களைத் தவிர ” . 


எனவே,  சத்தியம் என்ற வார்த்தைக்குக் கீழால் எத்தனையோ வார்த்தைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பொறுமை என்ற வார்த்தைக்குக் கீழால் எத்தனையெ அர்த்தங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 


அல்லாஹுத்தஆலா கூறுகின்ற இந்த உபதேசத்தை நான் உங்களுக்குக் கூறுகின்றேன். சத்தியத்தை அறிவதும் , சத்தியத்தை நேசிப்பதும் , அதன் அடிப்படையில் அமல் செய்வதும் , அதனைப் பரத்துவதும் உங்கள் மீது கடமையாக்கிக் கொள்ளுங்கள். அதனுடைய மாபெரும் கூலியை, பரிபூரணமான கூலியை, சிறந்த கூலியை மிகவும் பெரியவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹுத்தஆலாவிடத்திலே நாங்கள் எதிர்பார்ப்போம்.

என்னுடைய உபதேசம் எனக்கும் உங்களுக்குமாக இருக்கிறது. எங்களுடைய முயற்சிகளை மார்க்கக்ல்வியைப் பெறுவதிலே செலவிடுவோம்.  அதனுடைய ஊடகங்களை , எது அந்த மார்கக்கல்வியை விளங்குவதற்கு ஒத்துழைப்பு தருமோ அந்த ஊடகங்களைப் பெற்றுக்கொள்வதிலே நாங்கள் முயற்ச்சி செய்வோம். 


அந்த ஊடகங்களாவன,  அரபு மொழி, இன்னும் தப்ஸீரை விளங்குவதற்கான, ஹதீஸை விளங்குவதற்கான, பிக்ஹ்குல் இஸ்லாமை விளங்குவதற்கான, தொகுக்கப்பட்ட இஸ்லாமிய நூல்களை விளங்குவதற்கான அடிப்படைகள் , இன்னும் இந்தத் தலைப்பிலே இருக்கக்கூடிய விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். 


எனவே நாங்கள் எந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டோமே அதிலே நானும் நீங்களும் அதிலே அமல் செய்து கொள்வோம். இதுதான் உறுதிப்படுத்துவதற்குறிய சிறப்பான சரியான வழிமுறையாக இருக்கிறது. 


இதன் மூலம் தான் இல்மைப்பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் புஃகஹாக்கலாக ஆகமுடியும். நாங்கள் எங்களுடைய மார்க்கத்தை விளங்கக் கூடியவர்களாக ஆகமுடியும். 


மார்க்கக்கல்வியைக் கற்றுக்கொள்வோம், கற்ற கல்வியை அமல் செய்வோம் ,  அதன்பால் அழைப்போம். எது எங்கள் மீது கடமையாக இருக்கின்றதோ, எதனை நாங்கள் கற்றதினூடாக செய்கின்றோமோ அதன்பால் நாங்கள் அழைப்போம். 

இதனை உறுதிப்படுத்துவதிலே எத்தனையோ நலவுகள் இருக்கின்றன. நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். 


அல்லாஹுத்தஆலா யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தைக் கொடுக்கிறான். 


நீங்கள் அறிந்திருப்பீர்கள் நிச்சயமாக மார்க்கத்தின் விளக்கமென்பது உங்களுடைய இதயங்களிலே நேரடியாக வந்து இறங்கக்கூடிய ஒன்றல்ல. நிச்சயமாக அது விளங்கப் படுத்துவதினூடாக பெறக்கூடியதாக இருக்கிறது. இன்னுமொருவர் விளக்கப்படுத்துவதினூடாக விளங்கப்படக்கூடியதாக இருக்கிறது. நிச்யமாக மார்க்க்கல்வியைக் கற்றுக்கொள்வதினூடாக நீங்கள் அந்தக் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருகின்றது.

இல்முடைய ஹலகாதுகள், இல்முடைய ஞாபகமூட்டலுடைய சபைகள் இன்னும் அப்படியானவர்களுடன் இருப்பது, இன்னும் அந்தக் கல்வியைப் பரத்துவது , மக்களை அதன் பால் ஒன்று சேர்ப்பது, இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொறுவரையும் அவர்களுடைய காரியத்தின் அடிப்படையிலேயே ஆக்கிவைக்கும். 


இந்த அமலை செய்வதற்கு இதன்பால் அழைப்பதற்கும். நிச்சயமாக ஒரு ஆலிம் இந்த அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார் , அவர் ஒரு ஆலிமிடத்திலே கற்றுக்கொள்ளாதவரை. அதாவது ஒருவன் ஒரு முஅல்லிமிடத்திலே கற்றுக்கொள்ளாமல் ஒரு நாளும் இந்த அந்தஸ்த்தை பெற்றுக்கொள்ள மாட்டான் , அந்த ஆலிமிடத்திலிருந்து அவன் அந்தக் கல்வியைப் பெற்றுக்கொள்ளாத வரை. 


அப்படியென்றால் அவர்கள் யார் ? அவர்கள் தான் அந்த உலமாக்கல். அவர்கள் தான் அந்த கன்னியமான குர்ஆனையும் சுத்தமான் ஸுன்னாவையும் சுமந்தவராக இருப்பார்கள். ஸஹீஹான விளக்கத்தை சுமந்தவர்களாக இருப்பார்கள். ஸலபுகளுடைய அகீதாவை சுமந்தவர்களாக இருப்பார்கள். ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய மன்ஹஜை அவர்கள் சுமந்தவர்களாக இருப்பார்கள். 


அவர்கள் அவர்களுக்கு மத்தியிலே நபியின் பாதையையும் இஹ்லாசையும் ஒன்று சேர்த்தவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் அருளைக் கொண்டு அவர்கள் இதற்காக வேண்டி இரவு பகலாக எந்தளவுக்கு தியாகம் செய்தார்களோ அந்தளவுக்கு  பின்னால் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 


இன்னும் அவர்கள் ஒரு நாளும் இந்த கல்வியை மக்களுக்குக் கொடுப்பதிலே அவர்கள் குறையும் செய்ய மாட்டார்கள். அதே போன்று அவர்கள் சோர்வுத்தனம் காட்டவும் மாட்டார்கள் . உலோபித்தனம் காட்டவும் மாட்டார்கள் . 


இன்னும் அவர்கள் இந்தப்பாதையிலே அவர்களுடைய வாழ்க்கை இருக்கும் காலமெல்லாம் செலவலிப்பார்களே , அந்த உலமாக்கலிடத்திலே கற்றுக்கொள்ள வேண்டும் . 


அதேபோன்று கற்றுக்கொள்பவர்கள் ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் அவர்கள் கற்றுக்கொள்வதிலே மும்முரமாக இருக்கவேண்டும்.


அல்லாஹுத்தஆலாவுடைய மார்க்கத்தை அல்லாஹுத்தஆலா யாருக்குக் கொடுத்தானோ, அவர்களினூடாகத் தான் நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா எவர்களுக்கு இல்மைக் கொடுத்தாலும், அல்லாஹுத்தஆலா, அவனிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட இல்ம் சொற்பமானதன்றி வேறொன்றும் கிடையாது. 


என்றாலும் எவர்களுக்கு அல்லாஹுத்தஆலா இல்மைக் கொடுத்தானோ அவர்களினூடாகத்தான் மார்க்கத்தின் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று இஸ்லாமிய விளக்கங்களை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இந்த கலிமதுல் பிக்ஹ் விளக்கம் என்ற வார்த்தை சுமந்திருக்கின்றதோ அந்த அடிப்படையிலே அதனை நாங்கள் மஜ்லிஸ்களிலும் குதுபுகளை வாசிப்பதிலும் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் . 


ஆரம்பமாக உலமாக்கலினால் எழுதப்பட்ட சுருக்கமான கிதாபுகளை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அகீதாவைக்கொண்டு ஆரம்பிக்கவேண்டும். ஏனென்றால் எங்களுடைய கொள்கையை , எங்களுடைய நம்பிக்கையை சீர் செய்துகொள்வதற்காக வேண்டியாகும்.  


இன்னும் இது இல்ம் களிலே முக்கியமானதாக இருக்கின்றது.  முஸ்லிமான ஆணும் , முஸ்லிமான பெண்ணும் அவர்களுடைய முயற்சிகளை இதனில் செலவழிப்பது கடமையானதாக இருககின்றது,  


அகீதாவை உறுதியாகப் பெற்றுக்கொள்வது , அதாவது அல்லாஹுத்தஆலாவை அவனுடைய ருபூபியத்திலே ஏகத்துவப்படுத்த வேண்டும், அல்லாஹுத்தஆலாவை அவனுடைய அஸ்மா வஸ் ஸிபாத்திலே ஏகத்துவப்படுத்த வேண்டும் , அல்லாஹுத்தஆலாவை அவனுடைய உழுஹியத்திலே ஏகத்துவப்படுத்த வேண்டும் . 


தவ்ஹீதுர் ருபூபிய்யா என்று சொன்னால் அல்லாஹுத்தஆலா அவனுயை செயற்பாடுகளில் தனித்துவமானவன். அதில் அவனைத் தனித்துவப் படுத்த வேண்டும். அல்லாஹுத்தஆலாவுக்கு சிறப்பான பெயர்களும் உயர்ந்த பண்புகளும் இருக்கின்றது. இதிலே யாரையும் ஒப்பாக்கி எடுக்காமல் அல்லாஹுத்தஆலாவை தனித்துவப்படுத்த வேண்டும். வணக்க வழிபாடுகளில் அல்லாஹுத்தஆலா தனித்துவமானவன். அதில் அவனைத் தனித்துவப்படுத்த வேண்டும். தவ்ஹீதுல் உளுஹிய்யா அதுதான் மிக மகத்ததானதாக இருக்கின்றது. இந்த மூன்று வகைகள் உள்ளடக்கியதை நாங்கள் படித்துக்கொள்ள வேண்டும். 


அதேபோன்று அகீதாவுடைய விடயங்களை நாங்கள் படித்துக்கொள்ள வேண்டும். ஏவல்களுடைய விடயங்களை நாங்கள் படித்துக்கொள்ள வேண்டும் , ஏனெனில் அதனைப் பின்பற்றுவதற்காக வேண்டி ,தடைகளுடைய விடயங்களை நாங்கள் படித்துக்கொள்ள வேண்டும் ஏனெனில், நாங்கள்  எங்களை விட்டும் அந்தத் தடையை தூரமாக்கிக் கொள்வதற்கு ஆகும் . 


இன்னும் அல் குர்ஆனிலும், அஸ் ஸுன்னாவிலும் எத்தனையோ படிப்பினைகள், எத்தனையோ உபதேசங்கள், எத்தனையோ ஆர்வமூட்டல்கள் எத்தனையோ எச்சரிக்கைகள் இருக்கின்றது. இவைகளை நாங்கள் படித்துக்கொள்ள வேண்டும். 


சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ஒரு ஆலிம் ஆலிமாக மாட்டான் இதனை அறிவதிலே அவனுடைய முயற்சியை ஆரம்பிக்காத வரைக்கும். 

அவருடைய அடிப்படை பின்வருமாறு இருக்க வேண்டும். ஆரம்பமாக அவர் ஒரு ஆசிரியரிடத்திலிருந்து , ஆசிரியர் என்றால் குர்ஆனையும், ஸுன்னாவையும் ஸஹாபாவழிமுறையில் சரியாக விளங்கின ஆலிமிடத்தில், அதன் பின்னால் அந்த தாலிபுல் இல்ம் அவருடைய (நப்ஸ்) உள்ளத்தின் சக்திக்கு ஏற்ப மார்க்கத்துடைய நூல்களை சேகரித்து அவர் அதனை படிக்கவேண்டும். 


அதே போன்று இந்த அகீதாவுக்கு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்துடையை அகீதாவுக்கு முரணானவைகளான ஷிர்க்களையும் பித்அத்களையும் அவர் அறிந்திருக்க வேண்டும். அதிலிருந்து அவர் அவரை தவிர்ந்து கொள்வதற்காகவும், மக்களை அதிலிருந்து எச்சரிக்கை செய்வதற்குமாக ஆகும் . இது அவருக்கான ஜிஹாதாக இருக்கின்றது. 


இது குர்ஆன் ஸுன்னா வஹியுடைய ஆதாரத்தைக்கொண்டு செய்யக்கூடிய போராட்டமாக இருக்கின்றது. அதேபோன்று ஏனையவர்களுக்காக வேண்டி குர்ஆனையும் ஸுன்னாவையும் ஆதாரமாக வைத்து செய்யக்கூடிய போராட்டமாக இருக்கின்றது. 


அல்லாஹுத்தஆலா அவனுடைய நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பார்த்து அவனுடைய இந்த வார்த்தையின் மூலம் ஏவுகின்றான் 


“நபியே அவர்களுடன் அதைக்கொண்டு பெரிய யுத்தம் செய்வீராக.” 


அதைக்கொண்டு பெரிய போராட்டம் செய்வீராக என்றால் அது என்பது குர்ஆன் வஸ் ஸுன்னா, இறக்கப்பட்ட வஹியான குர்ஆனைக் கொண்டும் அஸ்ஸுன்னாவைக் கொண்டும் என்பதாகும். 


அதிலே அவர் கீழ்வரும் நூல்களைப் படிக்க வேண்டும். அவையாவன தப்ஸீருடைய நூல்கள், ஹதீஸுடைய நூல்கள், ஏனைய கிளைகளுடைய நூல்கள், இஸ்லாமிய பிக்ஹ் உடைய நூல்கள். அதே போன்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறுகள் அடங்கிய நூல்களைப் படிக்க வேண்டும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹுத்தஆலா நபியாக அனுப்பியதிலிருந்து அவர் மரணிக்கும் வரைக்கும் எத்தனையோ கல்விகளை எங்களுக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள் அவைகளைப் படிக்கவேண்டும். எத்தனையோ உபதேசங்களை எங்களுக்கு தந்திருக்கின்றார்கள். எத்தனையோ படிப்பினைகளை எங்களுக்கு தந்திருக்கின்றார்கள் அவைகளை நாங்கள் படிக்கவேண்டும். இவைகள் அனைத்தும் ஒரு மனிதனை தர்த்தீப்பாக்கி வைக்கின்றது. குர்ஆன் வஸ் ஸுன்னாவின் அடிப்படைகளை பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 


இன்னும் அல்லாஹுத்தஆலா அவன் சொல்லிக்காட்டுகின்றான் 


அல்லாஹுத்தஆலா ஈமான் கொண்டவர்களுக்கும் இல்மை சுமந்தவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அவன் உயர்த்துகின்றான். 


அந்த ஈமானுக்கு முன்னால் இல்மையும் அமலையும் அவர் முற்படுத்தாத வரைக்கும் , ஈமானை அவர் அடைய மாட்டார் , ஈமானை அவர் பரிபூரணமாக்கமாட்டார் . இது அறியப்பட்ட ஒரு விடயமாக இருக்கிறது.  


ஈமான் என்பது அறியாமைத் தனத்தோடு ஒருபோதும் வராது . மடமைத்தனத்தோடு ஒரு போதும் வராது.  நிச்சயமாக மடமைத்தனம் என்பது அதனை முற்படுத்தி விடுகின்றது. போடுபோக்கான தன்மைகளும் இன்னும் மார்க்கக் கல்வியை படிப்பதைவிட்டு புறக்கணிப்பதும் இன்னும் அவைகளை விட்டும் தூரமாகுவதும் தான் மடமைத்தனத்தை உருவாக்கும் விடயங்களாக இருக்கின்றது. 

தரமான நியத்திற்கேற்ப நாங்கள் மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கல்வியின் அடிப்படையிலே அமல் செய்யவேண்டும். அந்தக்கல்வியைப் பரப்புவதற்கான முயற்சிகளிலே நாங்கள் ஈடுபடவேண்டும். 


ஏனென்றால் இது ஒரு மனிதன் சுமக்கக்கூடிய சிறப்பான அனந்தரச் சொத்துக்களில் ஒரு சிறப்பான அனந்தரச் சொத்தாக இருக்கின்றது. நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் 


“நிச்சயமாக உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள்  தீனாரையோ, திர்கமையோ வாரிசாக விட்டுச்செல்லவில்லை. அவர்கள் இல்மைத்தான் வாரிசாக விட்டுச்சென்றார்கள்.” 


இந்த வாரிசிசுச் சொத்தை பெற்றுக்கொள்வதிலே விரைந்து செல்வதிலே மகத்தான எத்தனையோ கூலிகள் இருக்கின்றன.

எனவே எங்களுடைய நல்ல நிய்யத்தோடு மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் ஷரியத்திலுல்ல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவைகள் எங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையிலே அமல் செய்யவேண்டும். எனென்றால் இதனைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலே அமல் செய்யவில்லையென்றால் அது இல்மாகாது


அதே போன்று அதன்பால் அழைப்புப்பணி செய்யவேண்டும், அதனைப் பரப்ப வேண்டும். இது தான் மிக மகத்தான ஜிஹாதாக இருக்கின்றது. இந்தப் போராட்டம் யுத்தகளத்திலே இறங்கி பேராடுவதை இல்லாமல் ஆக்கிவிடும். ஏனென்றால் இது ஜிஹாதல் பில்புர்ஹான் குர்ஆன் ஸீன்னாவுடைய ஆதாரத்தைக்கொண்டு போராடக்கூடிய போராட்டமாக இருக்கின்றது. 


இந்த ஆதாரம் ஒரு மனிதனை நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து, அவனை வினோதமான வாழ்க்கையிலிருந்தும் , அவனையே அவன் 
மறக்கடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து மார்க்கக் கல்வியின் வாழ்க்கையின் பாதையின்பால் அவனைக் கொண்டு சென்று விசாலமான ஒரு வாழ்கையின்பால் அவனைக் கொண்டு சென்று சேர்த்து விடும். ராஹத்தான ஒரு வாழ்க்கையின்பால் கொண்டு சென்று விடும். அந்த ராஹத் , அவனுடைய (ரூஹ்) உயிருக்கும் , அவனுடைய உள்ளத்துக்கும் அவனுடைய உடம்புக்குமாக இருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்குமாக இருக்கும், 


எனவே நாங்கள் அந்த மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொள்வதிலே முந்திக்கொள்ள வேண்டும். இன்னும் அதிலே சுத்தமான நிய்யத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் அமல் செய்ய வேண்டும். அதன்பால் அழைக்கவேண்டும். அதனை நாங்கள் பரத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் இந்த வாரிசுச்சொத்தை உண்மையாக நிலைநாட்டியவர்களாக இருப்போம். இல்லையென்றால் எந்தக்காலத்திலும் நாங்கள் அதனை நிலைநாட்டியவர்களாக இருக்கமாட்டோம். 

நிச்சயமாக உலமாஉ ரப்பானியீன்கள் அவர்கள் பல்வேறுபட்ட வடிவங்களிலே பல்வேறு வழிகளிலே இந்த மார்க்கத்தின் கல்வியைப் பாதுகாப்பதற்கும் அதனைப் பரப்புவதற்கும் அவர்கள் முயற்சி செய்கின்றார்கள். மீண்டும் இந்தக்கடமையை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ எங்கெல்லாம் பயணம் செய்கின்றார்களோ அங்கெல்லாம்  இந்த மார்க்கக் கல்வியை அவர்கள் பரத்தி விடுகிறார்கள். இது அவர்களுடைய கடமையாக இருக்கின்றது. இதுதான் மகத்தான ஜிஹாதாக இருக்கின்றது.

இன்னும் இரண்டு ஜிஹாத்களில் அதாவது, ஆயுதத்தினால் செய்யக்கூடிய ஜிஹாத், இல்மினால் செய்யக்கூடிய ஜிஹாத், இந்த இரண்டு ஜிஹாத்களிலும்  இல்மினால் செய்யக்கூடிய ஜிஹாத் தனித்துவமான ஜிஹாதாக இருக்கின்றது. 


இமாம் இப்னு கய்யூம் அல்ஜவ்ஸய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவது போன்று , ஏனென்றால் இல்மைப் பரப்புவது அதனை அடைவதிலே கவணம் செலுத்துவது மேலே சொன்ன இரண்டு ஜிஹாத்களில் மிக தனித்துவமான , முக்கியமான ஜிஹாதாக இருக்கின்றது . அது தான் மகத்தான ஜிஹாதாக இருக்கின்றது. 


ஆயுதத்தினால் செய்கின்ற ஜிஹாதைவிட எதிரிகளை சந்திக்கின்ற ஜிஹாதைவிடவும் இல்மினால் செய்யக்கூடிய ஜிஹாத் தனித்துவமான ஜிஹாதாக இருக்கின்றது. ஏனெனில் , இதிலே மனிதர்களுடைய உயிர்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்றது . அதே போன்று பயங்கரமான குப்ரிலிருந்தும், ஷிர்க்கிலிருந்தும் உள்ளத்தின் மனோஇச்சை நோய்களிலிருந்தும் சந்தேகத்தின் நோய்களிலிருந்தும் அவனைப் பாதுகாக்கின்றதாக அந்த ஜிஹாத் இருக்கின்றது. 


எனவே நாங்கள் அனைவரும் இந்த விடயத்தில் கவணம் செலுத்துவோம். அப்போது, எங்கள் நிய்யத்துக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அதனை அடைந்துகொள்ள முடியும். 


அல்லாஹுத்தஆலா எங்களுக்கு உதவி செய்பவனாக இருக்கின்றான். அவனது உதவி இன்றி எந்தொரு நலவையும் நாங்கள் செய்ய முடியாது எந்ந ஒரு கெடுதியையும் எங்களால் விட்டுவிட முடியாது அல்லாஹ{த்தஆலா எங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கின்றான். 

வல்லாஹு அஃலம்.