[இலங்கையும் இஸ்லாமிய அழைப்புப்பணியும்]

இலங்கையும் இஸ்லாமிய அழைப்புப்பணியும்

இன்று பிரச்சாரப் பணியில களமிறங்கியிருக்கும் கூட்டங்களின் முறையற்ற  அனுகு முறையாலும்  அழைப்புப் பணியின்  பெயரில் செய்யப்படுகின்ற அநியாயங்களாலும் உண்மையான குர்ஆனின் வெளிச்சம் வெளிவரவில்லை.  அதேபோன்று உண்மையான ஸுன்னா நடவடிக்கைக்குக் கொண்டுவரப்படவுமில்லை.  
மாறாக  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் சொந்தக் கருத்துக்களும்  வழிகேடான  கொள்கைகளும் ஷிர்க்களும், குப்ர்களும், பித்அத்களும் பரவலாகப் பரந்திருப்பதை நாம்  காண்கிறோம்.  எனவே, இந்தக் களங்கங்களைத் துடைக்க வேண்டுமென்ற  நோக்கத்துடனும் இன்னும் யாரெல்லாம் சத்தியமான மார்க்கத்தை விளங்கி அதற்குக் கைகொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு  வழிகாட்டுவதற்கென்றும் அழைப்புப் பணியில் நபிமார்களின்  வழிமுறைகளை முன்வைக்க நாம் ஆசைப்படுகிறோம்.  
இதனை மக்கள் புரிந்து கொள்வதன் மூலம் அதனடிப்படையில் செயற்படும் மக்களாக மாறி, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த நபிமார்களின் அழைப்புப் பணிக்காக தோழர்களாக மாறுவதற்கு  முயற்சி செய்ய வேண்டுமென்றும் நாம் ஆசைப்படுகிறோம்

எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. மேலும் எமது சமூகத்தில் அறபி மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை. எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம்.

அழைப்புப் பணியில் தெளிவுடன் இருப்பதன் அவசியத்தை அறிந்ததனால்தான் யாரும் ஒருவன் எந்தளவுக்குப் படித்தவனாக இருந்தாலும் அவனுக்கு அழைப்புப் பணிவிடயத்தில்  உலமாக்கல் அனுமதி கொடுக்கும் வரை அவனை அழைப்புப் பணிக்குத் தகுதியுடையவனாக அயிம்மத்துஸ் ஸுன்னா (ஸுன்னாவுடைய இமாம்கள், உலமாக்கள் ) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  ஏனென்றால்  அழைப்புப் பணியைச் சுமந்தவன் தெளிவைப் பெற்றவனாக இருக்க வேண்டும்.  அது எத்தகைய தெளிவு என்றால் எத்திவைப்பதற்கு முன் கற்றுக்கொண்டதை சரிவர அறிந்தவர்களாகவும், பூரணமாக விளங்கியவர்களாகவும் இருக்க வேண்டும். 

இலங்கையில் ஸலபி வாவும் அதற்கு பொறுப்பானவர்களும்
கேட்

இலங்கையும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆவும் கேட்க
இல்மை சுமந்த மனிதரும் இலங்கை மக்களும் கேட்க

இல்மை சுமந்த மனிதர்களுடன் உறவாடுவதின் பாக்கியமும்

அதனை அறுத்துவிடுவதில் ஷெய்தான்களின் பங்கும் கேட்க

ஒற்றுமையும் இலங்கையில் அதனை நிலைநாட்டும் வழிமுறைகளும்  கேட்க
பிரிவுகளை தவிர்ந்திருப்பதும் அல் ஜமாத்தோடு இணைந்திருப்பதும் வாசிக்க
அழைப்புப் பணியின் அவசியமும் அதன் எல்லைகளும் வாசிக்க

ஸலபி தஃவாவும் தெற்காசிய நாடுகளுக்கான

அதன் பரவுதலும் 1 2 3  

கொள்கையின் உண்மைகளும் மனிதனின் தன்மைகளும் வாசிக்க 
01 Sep 2013 எனது ஊர் மக்களுக்கு ஒரு உபதேசம் - ஷேக் அஸ் சைலாணி 
வழிகேடுகளுக்கு  எதிரான  போராட்டங்களும்  பலகத்துறை  மக்களுக்கு  ஒரு  உபதேசமும்  கேட்க
19 Sep 2013 இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமையும் அதனை நிலை நாட்டும் வழிமுறைகளும் 
27 Sep 2013 குத்பா பின் உரை ஸஹிஹான இல்மை பெற்றுக் கொள்வதும் இலங்கை மத்ரஸாக்கலின் அவலங்களும்
28 Feb 2014 குத்பா பின் உரை ஸலபி தஃவாவும் அதனை எத்திவைப்பதில் வளர்ப்பதில் எமது பங்களிப்பும்
26 Dec 2015 தவ்ஹீத் ஜமாத்களின் அன்றைய ஆட்டங்களும் ஸலபின் போர்வையில் இன்றைய ஆட்டங்களும்
இன்று ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு பின்னர் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எமக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிய மர்கத்தினை பின்பற்றும் முஸ்லிம்களாக இருக்கும் நாம் அதனை எந்த முறையில் பின் பற்ற வேண்டும் என்பதனை நன்குணர்ந்து கொள்வது அவசியமாகும். 
ஏனெனில் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் பிற்காலத்தில் வரும் தனது உம்மத்தினரின் நிலை பற்றி கூறும் போது .....

நிச்சயமாக பனூ இஸ்ராயில்கள் (யஹுதிகளும் நசாராக்களும்) எழுபத்தி இரண்டு கூட்டத்தினர்களாக பிரிந்தார்கள். அவர்களில் ஒரு கூட்டம் இன்னும் அதிகமாகும். எனது உம்மத்தினர் எழுபத்தி மூன்று கூட்டத்தினர்களாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தினரை தவிர அனைவரும் நரகம் செல்வார்கள். அதற்க்கு சஹாபாக்கள் யாரசூலல்லாஹ் அந்தக் கூட்டம் யார் எனக் கேட்க, நானும் எனது தோழர்களும் இன்று எந்த முறையில் இருக்கின்றோமோ அதே முறையில் இருப்பவர்கள் என பதிலலித்தர்கள்.  
 (லாலக்காயி, அல் பரக் பைனல் பிரக் )

எனவே எமது இந்தகாலக்கட்டத்தில் மார்கத்தை பின்பற்றும் மக்கள் எத்தனையோ பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு வரும் தாம் தான் சரி என்ற வாதத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான காலத்தை பற்றித்தான் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மேற்குறித்த ஹதீஸில் கூறுகிறார்கள். அத்தகைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பிரகாரம் வாழ்ந்து நேர்வழியில் தானா இருக்கிறோம் ? என்பதனை நெஞ்சில் கரம் வைத்து பரீட்சித்துப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். 
ஏனெனில் இன்று இருக்கும் ஒவ்வொரு கூட்டத்தினரும் நாம் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பிரகாரம் தான் வாழ்கிறோம் என வாயளவில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் செயலளவில் கொண்டுவர சஞ்சலப்படுகிறார்கள். 
இன்று இஸ்லாம் என்பது யார் வேண்டுமானாலும் அவர் நினைத்ததை செய்து விட்டு போகலாம் என்ற போக்கில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் ? 

" நானும் எனது தோழர்களும் இன்று எதிலிருக்கிறோமோ அதில் இருப்பவர்கள் தான் வெற்றி பெற்று சுவனம் செல்பவர்கள் " எனவே அன்று நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் எதனை மார்க்கம் என விளங்கிச் செயற்பட்டார்களோ அதைத் தான் நாமும் மார்க்கம் என செயற்படுத்த வேண்டும். 

அது அல்லாத ஏனையவைகள் நாம் செயல்படுத்துகின்ற போது நாம் வெற்றி பெற்றவர்கள் அல்ல என்பதனையும் , வழிகேட்டில் இருக்கிறோம் என்பதனையும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும். வழிகேட்டின் வாடை கூட வீசாத ஒரு வசந்த காலமான அந்த சஹாபாக்களின் காலத்தில் எவைகள் எல்லாம் இஸ்லாம் என்று இருந்ததோ அவைகளே எப்போதும் இஸ்லாம் ஆக இருக்க முடியும். அன்று இஸ்லாமாக இருக்காதவைகள் ஒரு போதும் இஸ்லாமாக இருக்க முடியாது என்பதனை எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

எனவே நாம் எந்த ஒரு குர் ஆன் வசனத்தினை எடுத்து செயல்பட முற்பட்டாலும் அதனை எப்படி செயல் படுத்த வேண்டும் என நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் தமது தோழர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை சற்று அவதானித்து விட்டு அதனை அமுல்படுத்தினால் நிச்சயமாக நாம் அவர்கள் இருந்த முறையில் தான் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. மாறாக நாம் நினைத்த முறையில் செயல்படுத்துகின்ற போது எமது சிந்தனையில் பட்டவைகள் ஒரு போதும் 
மார்க்கமாக ஆகாது என்பதனை மறந்து விடக்கூடாது. 

மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துக்கூற எல்லாப் புறத்திலும் ஒவ்வொரு கூட்டத்தினர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மேற்கொள்ளும் அழைப்புப்பணி கண்டிப்பாக நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையினை மக்களுக்கு எத்திவைக்க கூடியதாகவே அமையவேண்டுமே தவிர , அவர்கள் காட்டாத ஒரு பாதையினையும், அவர்கள் சொல்லித்தராத ஒரு விளக்கத்தினையும் எடுத்துக்காட்டகூடியணவாக இருக்க கூடாது. அப்போது தான் இந்த அழைப்புப்பணி சரியான திசையை நோக்கிச் செல்லும். இல்லையெனில் அழைப்புப்பணி என்ற பெயரில் அனாச்சாரங்கள் தூவிவிடப்பட்டு தூய்மையான நபி வழி மக்களை விட்டும் மறைத்து விடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இஸ்லாமிய சமூகத்திற்கு தொண்டு செய்யும் நோக்கில் பல மௌலவிகள் இன்று எமது சமூகத்தில் கிளம்பியுள்ளதை காணமுடிகிறது. நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை எல்லா விடயங்களிலும் முஸ்லிம்கள் பின்பற்ற சரியான வழியினை அமைத்துக் கொடுப்பதே இந்த மௌலவிகளின் பாரிய கடமையாக அமைய வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினர் கூட தம்மை வழி நடாத்த முன்வரும் இந்த மௌலவிகளை பற்றியும் , அவர்களது கொள்கை கோட்பாடுகள் பற்றியும் சற்று அவதானித்து நடந்து கொள்ள வேண்டும்.


அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் சம்பவங்களும் , நாளுக்கு நாள் இடம் பெரும் நிகழ்வுகளும் எமக்கு இதனையே உணர்த்திக் கொண்டிருக்கின்றன. உலமாக்கள் என்ற பெயரில் மக்கள் மத்தியில் போலி வேஷங்கள் போட்டு துய்மையான நபி சல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையினை இஸ்லாமிய சமுகத்தினரிடமிருந்து தூக்கி எறிந்து, பித்அத்களையும் ஷிர்க்குகளையும் உயிர்பிக்கும் தலைவர்களையும் மௌலவிகளையும் உயர்ந்த உலமா என்று அறிமுகம் செய்து , உண்மையை , சத்தியத்தை உலகத்திற்க்கு எடுத்து கூறிகொண்டிருக்கும் சத்தியவான்களை, இல்மை சுமந்த மனிதர்களை எம்மை விட்டு தூரப்படுத்தி , ஒரு புறம் ஒதுக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது நாட்டில் உலமாக்களின் வழிமுறையின் அடையாளம் அடியோடு அழிக்கப்பட்ட காரணத்தினால் விரும்பியவர்கள் எல்லோரும் உலமாக்களாக மாறி கல்வியின் அடிப்படையே இல்லாமல் மார்க்க விடயத்தில் தீர்ப்புகள் வழங்க முன்வந்திருக்கிறார்கள். எல்லா வழிகேடர்களும் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

சத்தியத்திற்கு எதிராக குரல் எழுப்புதல் என்பது வரலாற்றில் பதுமை வாய்ந்த விடயமோ , அதிசயமானதோர் அம்சமோ அல்ல. இஸ்லாமிய வரலாற்றையோ அல்லது பொதுவான வரலாற்றையோ ஒரு முறை நாம் உற்று நோக்குகின்ற போது மனிதனின் பொதுவான இயல்பே தனக்குத் தெரியாத ஒன்று முன்வைக்கப்படும் போது அதனை ஏற்ற்றுக் கொள்ளமுடியாது, சகிக்க முடியாது பல போராட்டங்களையும் ,பிரச்சனைகளையும் மேற்கொள்வதாகும்.

இந்த அடிப்படையில் உலகத்தில் முன்வைக்கப்பட்ட எந்தவொரு புதிய கருத்தும் பல்வேறுபட்ட இன்னல்களை தாண்டாது, பிரச்சனைகளை எதிர்நோக்காது வந்ததாக காணமுடியாது. 

இந்த வகையில் சத்தியதிற்க்கு எதிர்ப்புகள் காட்டுவது வரலாற்றுக்கு ஒரு புதுமையான அம்சம் அல்ல என்பது தெளிவாகின்றது. உலக விடயங்களில் ஒரு புதிய கருத்து முன்வைக்கப்பட்ட போது நிகழ்ந்திருக்கும் நிகழ்வுகளையும், போது விடயங்களில் அறிஞ்சர்கள் முன்வைத்திருக்கும் கருத்துக்களின் போது இடம் பெற்ற போர்முனைகளையும், போரட்டகோஷங்களையும் வரலாறுகள் இன்றும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன என்பதனை எவரும் மறுக்க முடியாது.

இத்தகைய போராட்டங்கள் மேற்கொள்வதும் , சத்தியத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும் மனிதனின் பொதுவான பலவீனமான இயல்பாக இருந்து வருகிறது. அந்த மனிதனை நோக்கி அவன் அறியாது இருந்த சத்தியம் அவனுக்கு எத்திவைக்கப்படும் போது கருத்து முரண்பாடுகளும், வேறுபாடுகளும் , பிரச்சினைகளும் இல்லாமல் உடனே அவன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இந்த மனிதனின் இயல்பை அல்லாஹ் சுபஹானவ்தாலா கீழ்வரும் குர் ஆன் வசனத்தில் சுட்டிக்காட்டுகிறான்.

 

إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ 
أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا 
جَهُولًا

நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி , மலைகள் ஆகியவற்றின் மீது (அதை சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதை சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிகொண்டன. இன்னும் அதில் (சுமப்பதில்) இருந்து அவை பயந்தன. இன்னும் மனிதனோ அதனைச் சுமந்துக் கொண்டான். நிச்சயமாக அவன் பெரும் அநியாயக்காரனாகவும் அறியாதவனாகவும் இருக்கிறான். (33:72)

இந்த வசனத்தில் அல்லாஹ் சுபஹானவ்தாலா கூறியிருக்கும் விடயங்களை எமது கவனத்திற்கொண்டு எமது கடமையை சரிவர உணர்ந்து சத்தியத்தை சத்தியம் என எடுத்துக்கூறி, சத்தியத்தை அசத்தியத்துடன் கலக்காது வாழக்கூடியவர்களாக நாம் அனைவரும் முயல்வோமாக. 

இன்னும் நபி சல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறையினை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து, இஸ்லாமிய மார்க்கத்தை உயிர்பித்து , வழிகேட்டினை விட்டும் மக்களை தூரமாக்கி சத்தியத்தை வாழவைக்கப் பாடுபட்டு அழைப்புப்பனியினை மேற்கொள்ளும் அனைவரும் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைப்படி இந்த அழைப்புப்பனியினை மேற்கொண்டு நாளை மறுமையில் நாம் அனைவரும் வெற்றி பெற்றவர்களாக மாற எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்தருள்புரிவானாக !  

அல்லாஹ்வின் திருப்தியே எங்கள் இலக்கு

சத்தியத்தின் குரலே எங்கள் நோக்கு