[ஜாகிர் நாயிக்]

‘எனது உம்மத்திலுள்ள பல கூட்டத்தினர் இணை வைப்பவர்களுடன் சேரும்வரை, (அவர்களுடன் சேர்ந்து) சிலைகளை வணங்கும் வரை மறுமைநாள் ஏற்பட மாட்டாது’ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்) இதே கருத்தில் முஸ்லிமிலும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.

எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. 
மேலும் எமது சமூகத்தில் அறபி மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை. 
எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம். 
சமூகத்திலுள்ள மக்களின் இந்த வரைவிலக்கணம் எமது இமாம்கள் (அஇம்மதுல் முஸ்லிமீன்) காட்டித் தந்த வரைவிலக்கணமல்ல.  இவர் கூட்டத்தை உருவாக்கினார். பெயரை வளர்த்துக் கொண்டார். எனவே உம்மத்துக்கு வழிகாட்டும் ஆலிமாக மாறி விட்டார். 
இதனால் எந்த உலமாக்கள் இவரை ஒரு ஆலிமென்று சமூகத்துக்கு அடையாளம் காட்டினார்களென்பதோ இவர் எந்த உலமாக்களிடம் அமர்ந்து கல்வியைப் பெற்றுக் கொண்டாரென்பதோ மக்களுக்கு தேவையற்றதொரு விடயமாக மாறி விட்டது. அதன் அவசியத்தை எவரும் பொருட்படுத்தவில்லை.
அஸ்ஸுன்னாவின் கல்வி தவிர்த்து மாற்றுமதத்தவர்களின் நூல்களான பைபிள் இந்து மத நூற்கள்,ஏனைய இணைவைப்பாளர்களின் நூற்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், தத்துவங்கள், தர்க்கங்கள் ஆகிய கல்விகளைத் தான் கற்று சுமந்திருக்கிறார். இவர் கல்வியை வழிகெட்ட அஹ்மத் தீதாத் என்பவரிடமே  கற்றுள்ளார். 

இவர் இந்த அடிப்படையிலேயேதான்  விஞ்ஞானக் ஆராய்ச்சிகள், தத்துவங்கள் தர்க்கங்கள பைபிள், இந்து மதநூற்கள் ஏனைய இணைவைப்பாளர்களின் நூற்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொள்வதுடன் அதனை மனனமிட்டும் தஃவா பணி என்ற பெயராலும்  இஸ்லாமிய மார்க்கம் என்ற பெயராலும் இஸ்லாத்தை எம் சமூகத்தின் மத்தியில் எத்தி வைத்து முஸ்லிம் சமூகத்தை வழிகேடான பாதைக்கு இட்டுச் செல்பவர்.


இவர் அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் இஸ்லாத்தையும் நம்புவது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடன் ஒப்பு நோக்கியே ஆகும்.  இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலனவர்கள் யூத கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள்.  
ஆக அல்குர்ஆனை நம்புவதற்கும், விளங்குவதற்கும் யூத, கிறிஸ்தவர்களின் ஆராரங்களையே அடிப்படையாகக் கொள்கின்றார்.  ஏந்தளவுக்கென்றால் அல்குர்ஆனும்; விஞ்ஞான விளக்கமும் முரண்படுகின்ற பொழுது விஞ்ஞான விளக்கத்தையே அல்குர்ஆனின் விளக்கம் என ................

  • ஷாகிர்  நாயிக்கின் பேராபத்து  1  2
அல் குர் ஆனையும் சுன்னாவையும் , தர்கானுகூலமான விவாதம் , தர்க்க சாஸ்திரம் , விஞ்சான உண்மைகள் ஆகியவற்றுடன் அனுசரித்து சொல்கிறோம் என்று கூறுகிறார். 
இந்துக்கள் மற்றும் ஏனைய அல்லாஹ்வை மறுப்பவர்கள் தமது வியாபார நிலையங்களில் எவ்வாறு தமது கடவுள்களின் உருவங்களை தொங்க விட்டிருப்பார்களோ , அது மாதிரி , மதங்களை குறிப்பிட்டு , இவரது இணைய தளத்தில் மாற்றுமத கடவுள்களின் உருவங்களை தொங்கவிட்டுள்ளார்.
இவர் அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் இஸ்லாத்தையும் நம்புவது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடன் ஒப்பு நோக்கியே ஆகும். ஆக அல்குர்ஆனை நம்புவதற்கும், விளங்குவதற்கும் யூத, கிறிஸ்தவர்களின் ஆராரங்களையே அடிப்படையாகக் கொள்கின்றார். ஏந்தளவுக்கென்றால் , அல்லாஹ் சுபஹானஹுதாலா மறைவானதை நம்புவது ஈமான் என்று சொல்ல , இவரோ தனது மறுமை பற்றிய கொள்கை தர்கானுகூலமானது என்கிறார். இதோ கீழே அவரது கேள்வி பதில் நிகழ்ச்சியை வாசியுங்கள். 


கேள்வி : மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள் ?.

பதில்:   மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
அறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமான பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். 
அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. 
இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. 
அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. 
எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. 
எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.