[யூசுப் அல் கர்ழாவி]

qardawi image.png


 


வழிகேடர்கள் ஹஸனுல் பன்னா, ஹஸனுல் ஹுழைபீ, செய்யித் குத்ப் ஆகியோரின் வரலாற்றின் உயிரோட்டமிக்க உருவம் தான் இவர்.....

நியாயமான கருத்து வேறுபாடுகளுக்கும் நிந்தனையான பிரிவினைகளுக்கும் இடையில் இஸ்லாமிய எழுச்சி என்ற அவரது நூலில், 

'

பிக்ஹிலும் அகீதாவிலும் சில பிரச்சினைகளில் எப்போதும் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஏகத்துவமும் நீதியும், மறுமையில் இறைவனைக் காணுதல், மனித செயல்களும் விதியும், மனித நாட்டமும் இறைநாட்டமும், மனித சக்தியும் இறை சக்தியும் என்பன போன்ற விடயங்களில் பல்வேறு கருத்துகள் நிலவத்தான் செய்யும் எ‌ன்று  வழிகேடு கொள்கைகளை சரிகண்டு எழுதியுள்ளார். 


மேலும்
அவர் "
இத்தகைய உட்பிரிவுகளோடு சம்பந்தப்பட்ட வேறுபாடுகளை, அத்தியாவசியமானது, அருட்கொடையானது, நெகிழ்ச்சியானது " என வழிகேடா பிரிவுகளின் கொள்கையை வர்ணித்துள்ளார்


இவ்வாறுவழிகேடர்களுடனும் வழிகேட்டுக் கொள்கைகளுடனும்
 " வேற்றுமையில் ஒற்றுமை ", " முரண்பாட்டில் உடன்பாடு " எ‌ன்று ஒற்றுமை கோஷம்போடுபவர்....

இன்று உலகளாவிய ரீதியில் பிரச்சாரம் செய்கின்ற யூஸுப் அல் கர்ளாவி அல் குர்ஆனையும் சுன்னாவையும் தரமாக விளங்கியவரல்ல என கூறுகின்றோம். 

இவ்வாறு நாம் சொல்வது இஸ்லாத்துக்கு செய்கின்ற உதவியும் இந்த உம்மத்திற்குக் கூறுகின்ற சிறந்த உபதேசமுமாகும். யூஸுப் அல் கர்ளாவி அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்கக் கூடியவராக இருப்பினும் அவரது விளக்கங்களில் கையாளும் குர்ஆன் ஆயத்களும் ஹதீஸ்களும் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையில் கையாளப்படவில்லை. அவர் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார், பல நூல்களை எழுதியிருக்கிறார், இஸ்லாத்தைப் பற்றிப் பல இடங்களில் பேசியிருக்கிறார். ஆனால் இவையனைத்திலும் அவருடைய அளவுகோள் அவருடைய சுய புத்தியும் தர்க்கவாதமும் ஆகும். 

றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு ஸஹாபாக்களுக்கு கொள்கையையும் சட்டங்களையும் கற்றுக் கொடுத்தார்களோ அவ்வாறான அளவுகோளில் விளக்கம் கொடுப்பவராக யூஸுப் அல் கர்ளாவி இல்லை. 

எனவேதான் அவர் இன்று உலகில் பெரியதொரு பிரச்சாரத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும் அவரை நாம் விமர்சிக்கிறோம். அவ்வாறு விமர்சிப்பதன் காரணம் அவர் எத்திவைக்கும் கல்வியை அவர் சரியான வழிமுறையில் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் ஆகும். சரியான வழியில் பெறவில்லையென்பதன் பொருள்; குர்ஆன் ஆயத்களுக்கும் ஹதீஸ்களுக்கும் அவர் விளக்கம் கொடுக்கத் தெரியாதவர் என்பதல்ல. மாறாக அவரது விளக்கங்கள் சுய புத்தியாகும்.


இந் வழிகேடுகளுடன் சேர்ந்த இவர் இமாம் பூ ஹனிபாவின் பெயரால் வெளியிட்ட பத்வா தான் " ஸ்லாமிய அமைப்பு இல்லாத (தாருல் ஹர்ப்) இடத்தில் " வட்டி ஹலால் ன்பது. இதோ கீழே அவரது பேட்டி >>>


கேள்வி: வட்டி சம்பந்தமாக தாங்கள் வெளியிட்ட பத்வாக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன. அந்தத் தீர்ப்புகளின் உண்மை நிலையை சற்று விளக்குவீர்களா?


பதில்:

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனது இஜ்திஹாத் மூலம் சிறிது வேறுபட்ட கருத்தைக் கண்டு கொண்டேன். இப்போதெல்லாம், இவ்விடயத்தில் இமாம் அபூஹனீபா அவர்களுடைய மத்ஹபின் பிரகாரமே பத்வா வழங்குகின்றேன். இஸ்லாமிய அமைப்பு இல்லாத (தாருல் ஹர்ப்) இடத்தில், முறையற்ற பணத்தைக் கையாளுவது கூடும் என்பது அவரது கருத்து.


இஸ்லாமிய அமைப்பு (தாருல் இஸ்லாம்) இல்லாத நிலையில் குப்ரிய்யத் அமைப்பு (தாருல் ஹர்ப்) காணப்படும். இங்கு வாழும் ஒரு முஸ்லிம், இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் முறையற்ற பணத்தைப் புழங்கலாம் என்கிறார் அபூஹனீபா. அந்நிபந்தனைகளாவன,


1. அதில் ஏமாற்று, மோசடி என்பன இருக்கக் கூடாது. அதாவது இவ்விடயத்தில் இஸ்லாமியப் பண்புகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.


2. அதில் முஸ்லிமுக்கு நற்பயன் இருத்தல் வேண்டும்.


இதை மிக அறிவுபூர்வமான கருத்தாகவே நான் கண்டேன். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவருக்கு வாரி வழங்கிவிட்டு, அதனால் நஷ்டமடைய வேண்டுமென இஸ்லாம் விரும்புவதாகக் கருதமுடியாது.


அமெரிக்காவில் வாழும் ஒரு சகோதரர் என்னிடம் வந்து அவரது நிலையைச் சொன்னார். நான் இங்கு வந்து தற்போது 25 வருடங்களாகின்றன. நான், அப்போதே வங்கியில் வட்டிக்குக் கடன் பெற்று வீடு வாங்கியிருந்தால், தற்போது எனக்கு சொந்தமாக வீடும் இருக்கும். இதுவரை நான் வாடகையாகச் செலவு செய்யும் பெருந்தொகையால் அக்கடனைச் செலுத்தியுமிருப்பேன் என்றார்.


ஒரு முஸ்லிமின் விவகாரத்தில் ஷரீஆவின் நோக்கத்தை நிறைவு செய்யக்கூடியதாகவே இமாம் அபூஹனீபாவின் பத்வாவை நான் கண்ணுற்றேன். இஸ்லாம் எப்போதும் மேலோங்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தின் மீது எதுவும் மேலோங்க முடியாது. இஸ்லாத்தின் பெயரால் ஒரு முஸ்லிம் கஷ்டப்பட, ஏனையோர் மட்டும் பயன்பெறுவது எப்படிச் சாத்தியமாகும்?


முஸ்லிம்களுக்கு பயன் என்ற கூறி வட்டியை ஹலால் என்று கூறுவதோடு அதனை இமாம் அபூ ஹனீபாவின் தலையில் வைத்து விட்டார். இப்படி தெட்டத் தெளிவாக ஹராத்தை ஹலால் ஆக்குவது மட்டுமின்றி இமாம்களின் பெயரில் பொய்யும் புரட்டும் செய்கிறார்.


இந்த அரைகுறை பக்கீஹ் தனது மார்க்கத் தீர்ப்புகளால் சமூகத்தினது அமைதியைக் கெடுத்தார்...இத்தகைய வழிகேடர்களால் ஏற்படும் அபாயம் பற்றி நாம் உம்மத்தை விழிப்படையச் செய்வது அவசியம். 

இவர்கள் அசட்டுத் தைரியத்தில் பத்வாக்களை வெளியிட முன்வருவதை உம்மத்திற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். பத்வாக் கொடுக்கும் அந்தஸ்திலும் சமூகத்தை வழிகாட்டும் அந்தஸ்திலும் தம்மை வைத்துக் கொண்டுள்ள இத்தகையோரிடமிருந்து சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆபத்திலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றி விழிப்புடன் செயற்படும் கடமை இருக்கிறது.