[முப்தி உமர் ஷெரிப் & அப்துல் பாசித் புகாரி]

  • ஷேக் அஸ்ஸைலானி - முப்தி உமர் ஷெரிப் காஸிமி இந்தியா , ஸலபி தஃவாவை வளர்க்கவா வீழ்த்தவா வந்தார் ?  ஆடியோ கிளிப் 

முப்தி உமர் ஷெரிப்

முப்தி உமர் ஷெரிப் என்று ஒருவர் அன்மைக் காலமாக தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பலரும் அறிந்திருக்கலாம். இவர் பி. ஜெ. யை விமர்சித்து பேசியதால் பலரும் இவரை ஸலபி என்று நினைக்கலாம்.


இன்னும், இவர் சுயமாக ஒரு கொள்கையை வாசித்து தெரிந்துக் கொண்டு அது ஸலபி கொள்கை என்று கருதுயீடு செய்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.


ஏனெனில், ஸலபி கொள்கையின் மிக முக்கியமான அடிப்படை தான் மார்கத்தை முறையாக ஸலபி உலமாக்களிடம் கற்று அவர்களின் அனுமதியுடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவது.


இவரை பொறுத்தவரை, இவர் ஸலபி கொள்கையை யாரிடம் கற்றார் என்றே தெரியாது. இவரிடம் பலரும் பலமுறை நேரடியாக கேட்டு விட்டாரகள். இன்று வரை பதில் இல்லை.


இன்னும், ஸலபி உலமாக்களுடன் நீங்கள் தொடர்ப்பு வைத்து உள்ளீர்களா என்று கேட்டால், நான், புஹாரி, முஸ்லிம், இப்னு தைமியாவுடன் தொடர்ப்பாக உள்ளேன். இவர்கள் ஸலபி உலமாக்கள் இல்லையா ? என்று கேள்விக் கணை தொடுக்கிறார் ?


வழி கேடர்களும் தான் புஹாரி, முஸ்லிம் , இப்னு தைமியாவுடன் தொடர்ப்பாக உள்ளார்கள் , அவர்களும் முப்தி உமர் ஷெரிப்பின் பார்வையில் ஸலபி ஆகி விடுவார்களா ? இப்படி முட்டாள் தனமாக பேசி, தனது நிலையை தற்காத்து வருபவர் தான் இந்த உமர் ஷெரிப்.

இந்த உமர் ஷெரிப் அவர்கள், சில காலம் சிங்கப்பூரிலே இருந்தார்கள். அங்கு இருக்கும் காலத்தில் தப்லிக் ஜமாத்தின் ஆதரவாளராக செயல்பட்டார். அப்படி இருந்துக் கொண்டே , தன்னிச்சையாக அரபி மொழி கற்று தருகிறேன் என்று சிங்கபூரின் பலஸ்தியர் வீதியின் அருகாமையில் உள்ள பாத்திமா பள்ளி வாசலில் அரபு மொழியும், பின்னர் சும்மா ஒரு மார்க்க விளக்க வகுப்பும் செய்து வந்தார்.


அத்தோடு, சிங்கபூரின் சிராங்கூன் வீதி அங்குலியா பள்ளிவாசலில் அமர்ந்து அங்கு வரும் சில இளைஞ்சர்களை குறி வைத்து பிடித்தார். 

அந்த காலக் கட்டத்தில், நான் அறிந்தவரும் , கேரளாவை சேர்ந்தவருமான ஒரு சகோதரர் இவருடன் தொடர்பு பட்டு , இவருக்கு இணையத்தள வழியாக ஸலபி உலமாக்களின் வகுப்புகளை செவிமடுக்க செய்தார்.


அப்போது , இந்த கொள்கையை கவனிக்க தொடங்கியவர் தான் இந்த உமர் ஷெரிப். பின்னர், அந்த கேரளா சகோதரரும் , சிங்கையை விட்டு செல்ல, சிறிது காலத்தின் பின்னர் தான் ஒரு ஸலபி கொள்கை பிரச்சாரகர் என்று தானே சொல்லிக் கொண்டு வெளிவந்தவர் தான் இந்த உமர் ஷெரிப்.


ஆரம்பத்தில் வழிகெட்ட காசிமி, தேவ்பந்த் போன்ற மதரசாக்களில் பட்டம் பெற்று வெளி வந்தவர் 
தான் இவர். இப்போது, இவரே, சுயமாக கேட்டு, விளங்கி , வாசித்து ஸலபி கொள்கை என்ற பெயரில் வழிகேடர் பி. ஜெ. யை விமர்சித்துக் கொண்டு , ஸலபி உலமாக்களின் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்துக் கொண்டு தடுமாறி வருகிறார்.


ஆனால், ஸலபி உலமாக்கள் இவரை அறிந்ததோ , அல்லது இவர் ஸலபி உலமாக்களிடம் முறையாக ஸலபி கொள்கையை பயின்றவரா என்பது இன்னும் அறியப்படவில்லை. பி. ஜெ. தன்னிச்சையாக தனக்கு சரி என்று கண்டதை பேசி வருவது போன்று , இவர் ஒன்றை சரி என்று கண்டு ஸலபி கொள்கை என்று சொல்லி பேசி வருகிறார்.


அவற்றில் ஒன்று தான் இன்னார் சொன்னார்கள், அன்னார்
சொன்னார்கள் என்று எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் கூறி வருகிறார். தனது இந்த செய்திக்கு எந்த விதமான ஒலிப்பதிவுகளோ, சாட்சியங்களோ இல்லாமல் பச்சை பொய்யை பச்சையாக கூறி அலைகிறார்.


நாம் அறிந்தவரை இவர் ஸலபி கொள்கையை முறையாக கற்கவில்லை. இதனை நாம், சுட்டிக் காட்டியதால், இப்போது எம்மை பற்றி பச்சை பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வருகிறார்.


எனவே, இவர் உண்மையாளர் என்றால், எம்மை பற்றி சொல்லும் அவதூறுகளுக்கு ஆதாரங்களை வைக்கட்டும்.
இன்னும், இவர் ஸலபி கொள்கையை முறையாக எங்கே கற்றார் என்ற ஆதாரங்களை வைக்கட்டும்.

ஏனெனில், இமாம் , கிபாருத் தாபியீன் அப்துல்லா இப்னு முபாரக் ரஹீமஹுல்லாஹ் கூறியது போல் , மார்க்கம் என்பது அறிவிப்பாளர் தொடர் கொண்டது. அது மட்டும் இல்லை என்றால் எவரும் எதனையும் கூறுவார்.


அல்லாஹ்வே மிக அறிந்தவன். 


Written by webadmin

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு .. , 

அப்துல் பாசித் புகாரி என்பவர் தற்போது தலையில் துண்டு, ஜுப்பா இன்னும் சில இடங்களில் "மிஸ்லா" எனும் ஜுப்பாவுக்கு மேல் அணியும் ஆடைக் கூட அணிந்து ஸலபி தோற்றத்தில் உலா வருகிறார். இது ஒரு ஏமாற்று தோற்றம் ஆகும். ஏனெனில், தோற்றம் தான் ஸலபி போர்வை தவிர இவரது கொள்கை வழிமுறை ஸலபி இல்லை. 

ஏனெனில், இவர் அடிப்படையாக பாடம் பயில சென்ற புகாரி மதரசாவும் ஸலபி இல்லை. இவர் தஃவா பணிபுரியும் கூட்டங்களும் ஸலபி கள் இல்லை. 

மாற்றமாக, புகாரி ஒரு சூபி மதரசாவும், இவர் சேர்ந்து பணிபுரியும் கூட்டங்கள் பி. ஜே. க்கு எதிர்ப்பாக அவரது பாணியில் பணிபுரியும் கூட்டங்களும் , சாகிர் நாயக் எனும் அடுத்த வழிகேடரை வளர்க்கும் கூட்டங்களும் இயக்கங்களும் ஆகும். 

இன்று ஸலபி கொள்கை என்பது மேலோங்கி விட்ட காரணத்தினால், அந்த போர்வையில் இவர்களும் களமிறங்கி ஸலபி போர்வையில் தடுமாறுகிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. 

ஏனெனில், உண்மையான ஸலபி கொள்கை சுமந்தவன் இந்த வழிகெட்ட தவ்ஹீத் ஜமாஅத் இயக்கங்கள் பின்னால் தஃவா செய்ய மாட்டான். 

ஆனால், இவரோ, வழிகெட்ட மல்லிக்காராம, திஹாரி , ஸ்கூல் லேன் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களுடன் சேர்ந்துக் கொண்டு தான் இலங்கையில் தஃவா பணியில் ஈடுபடுகிறார்.

இது ஸலபி கொள்கையை கொள்கையைக் கொள்கையாக கொண்டவர்களின் செயல்பாடுகள் இல்லை. மாற்றமாக, ஸலபி போர்வையில் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகளின் பாதையாகும். 

இன்னும், இவரது கல்வி வழிமுறை ஸலபி பாதையில் உள்ளது என்பது பற்றி உலமாக்களின் சிபாரிசுகளோ கல்வித் தகைமைகளோ நாமறிந்தவரையில் இல்லை.\

இதற்கு இன்னும் ஒரு சிறப்பான எடுத்துக் காட்டு தான் இவர் அல்லாஹ்வை அறிந்துக் கொள்வோம் என்று ஒரு உரையாற்றி இருக்கிறார். 

அந்த உரையில், அப்துல் பாசித் புகாரி அவர்கள், அல்லாஹ்வின் ருபிபியாவை பற்றி பேசி, அல்லாஹ்வை அறிந்துக் கொள்ளும் விடயத்தை விளக்கி செல்கிறார். 

ஆனால்,
அல்லாஹ்வை அறிந்துக் கொள்ளும் மிகப்பிரதான வழிமுறை அஸ்மா வ சிபாத் எனும் அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் ஆகும். உலமாவுஸ் சுன்னாஹ் என்று அறியப்பட்ட அனைத்து இமாம்களும் இதனையே விரிவாக விளக்கமாக சுட்டிக் காட்டி பேசுவார்கள். இதனையே அல்லாஹ்வை பற்றி நபியவர்களிடம் கேட்டகப்பட்ட போது அல்லாஹ்வின் பெயர் பண்புகள் அடங்கிய ஸூரதுல் இஃலாஸ் இறங்கியது. 

இப்படி இருக்க, 

இவைகள் இவரே சுத்தமாக அல்லாஹ்வை பற்றி அறியவில்லை என்பதன் எடுத்துக் காட்டுதல் ஆகும். எனவே, இவர் ஸலபி கொள்கை என்று கல்வி அடிப்படையில் பிரச்சாரம் செய்யமுடியாது, எனவே, தான் ஸலபி ஆடை அணிகலன்களை மட்டும் எடுத்து ஏமாற்றுகிறார். 

எனவே, மக்கள் இவர் விடயத்தில் ஸலபி என்று ஏமாற்றம் அடைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

written by webadmin