கோவை அய்யூப்

بسم الله الرحمن الرحيم 
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد


சஹாபாக்களை பின்பற்றுவது இன்னொரு மத்ஹபா என்ற தலைப்பில் கோவை அய்யூப் அவர்கள் பேசிய ஒரு வீடியோ பரப்பப்படுகிறது. இந்த வீடியோவில் மறுமையில் நீர் தடாகத்தில் துரத்தப்படுபவர்கள் பற்றிய ஹதீஸில் சஹாபி என்ற சொற்றொடருடன் வரும் ஹதீசுக்கு விளக்கம் சொல்ல முற்பட்டு சஹாபாக்களை தற்காத்து பேச முற்பட்டு சஹாபாக்கள் என்றால் யார் என்றே தெரியாமல் உளறிகொட்டி விட்டார் கோவை அய்யூப் அவர்கள். 

இதனால் தான் மார்கத்தை முறையாக படிக்காமல் தானாக வாசித்து , தானாக வாசித்ததை விளங்கி கொண்டதாக கருதிக் கொண்டு மார்க்க பிரச்சாரம் செய்ய முற்பட்டால், நிலைமை இப்படித்தான் மோசமாக இருக்கும். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். இத்துடன் இவர் இதனுடாக மறுப்பும் சொல்ல முந்திக் கொண்டால் , நிலைமை மிகவுமே மோசம் தான் என்பதை நல்ல முறையில் கண்டுக் கொள்ளலாம். 

அந்த வகையில், அருமை சஹாபாக்கள் என்பவர்கள் யார் என்ற வரைவிலக்கணமே தெரியாமல், சஹாபாக்களில் சிலர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் முர்தத் ஆகினர் என்கிறார். சஹாபாக்களில் சிலர் மார்கத்தை விட்டு வெளியேறினார்கள் அனைவரும் அல்ல என்றும் சொல்கிறார். பரிதாபம் தான் இவர் நிலை. 

அருமை நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணால் கண்டவர்கள் அனைவரும் சஹாபாக்கள் என்றும் சொல்கிறார். மேலும், நபிக்கே முனாபிக்குகள் யார் , சஹாபி யார் என்று தெரியாமல் இருந்தார்கள் என்றும் கூட சொல்லப்பார்க்கிறார். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். மார்கத்தை முறையாக கற்காமல் பிரச்சாரத்திற்கு களம் இறங்கினால் , நிலைமை இதை விட மோசமாக தான் இருக்கும். 

அந்த வகையில் தான் பி. ஜே. யும் மார்க்க பிரச்சாரம் என்ற பெயரில் பிரசாதம் கொடுக்க, அவரையும் பூஜித்துக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது. கோவை அய்யூபும் அவர்களும் அதே பாணியில் இறங்கி , அவரை போன்ற முறையாக கற்காமல் தஃவா களம் இறங்கிய பி. ஜே. யையும் விமர்சிக்க முற்பட்டு , தட்டு தடுமாறுகிறார். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 

நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்டு, ஈமான் கொண்டு , அந்த ஈமானுடன் மரணித்தவர்கள் தான் சஹாபாக்கள் என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் சிறப்பான முறையில் அருமை சஹாபாக்கள என்றால் யார் என்று வரைவிலக்கணம் படுத்தியுள்ளார்கள். 

எனவே, யாரெல்லாம் தடம் புரண்டார்களோ அவர்களை சஹாபாக்கள் என்று இந்த உம்மதுள் இஸ்லாமியா வின் நேர் வழி பெற்ற இமாம்கள் யாரும் சொன்னதில்லை. 

மேலும், அஸ்ஹாபி என்ற சொற்றொடருடன் ஹதீஸ் இருப்பது போல், முஸ்லிம் கிரந்தத்தில், உம்மதி உம்மதி என்ற சொற்றோடருடனும் அறிவிப்பு இருக்கிறது. 

எனவே, ஒரு அறிவிப்பை மற்றும் கருத்தில் கொண்டு தீர்ப்புக்கு முந்தாமல் அது சம்பந்தமாக உள்ள ஏனைய அறிவிப்புகளையும் கருத்தில் கொண்டு , மேலும் அருமை சஹாபாக்களை பற்றி அல்குர் ஆன் சொல்லும் விடயங்களையும் கருத்தில் கொண்டு, முரண்படாமல் தீர்ப்பு எடுப்பதே வழிமுறையாகும். 

இந்த அடிப்படையில், உலமா அஹுளுஸ் ஸுன்னதி வல் ஜமாஆ அருமை சஹாபாக்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குரியவர்கள் என்பதை உறுதியாக சொல்கிறார்கள். மேலும் , அல்லாஹ் சுபஹானஹுதாலா அவர்கள் அனைவரையும் ரலியல்லாஹு அன்ஹுவரலு அன்ஹு என்று கூறிவிட்டான். இந்த சாதாரண அடிப்படை கூட தெரியாமல் கோவை அய்யூப் போன்றவர்கள் மார்க்க பிரச்சாரம் செய்ய முனைந்தால் , விளைவு இன்னும் மோசமாகிக் கொண்டு தான் இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவை இல்லை. 

அருமை சஹாபாக்களை தற்காத்து பேசுகிறேன் என்று சொல்லி , அவரே அவர்களை அடிப்படையிலேயே பிழையாக சித்தரித்து விட்டார். 
இதனாலேயே, மார்கத்தை முறையாக படிக்காதவர்களின் பிரச்சாரத்தில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி நினவு ஊட்டப்படுகிறது. 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.