JAQH- ஜம்மியத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ்


பத்வா ஸெய்லாணி : 

கேள்வி : இந்தியாவின் தமிழ் நாட்டில் அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்ற JAQH ஜாக் என்று அழைக்கப்படும் ஜம்இய்யது அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பினர் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் உடைய கிதாபுத் தவ்ஹீத் என்ற நூலை தங்களின் சபைகளில் கற்பிக்கிறார்கள். 

இதன் மூலம் இவ்வமைப்பினர் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் உடைய அகீதாவை அடைந்தவர்களாக ஆகுவார்களா? 

 பதில் : இல்லை. அவ்வாறு ஆகமாட்டார்கள். ஏனென்றால் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ்  அவர்களோ அல்லது நஜ்த் ன் ஏனைய உலமாக்களோ ஜாக் அமைப்பினரைப் போன்று பித்அத்வாதிகளுடன் சேர்ந்து அழைப்புப் பணியைச் செய்தவர்களல்ல. 

மாறாக, அவ்வுலமாக்கள் மன்ஹஜில் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையிலேயே அல் குர்ஆனினதும் சுன்னாவினதும் விளக்கத்தைக் கையாள்பவர்கள். இந்த வழிமுறை ஜாக் அமைப்பில் இல்லை. 

ஜாக் அமைப்பினர் தங்களுக்குக் கூட்டத்தை அமைத்துக் கொள்வதற்கும் ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் இயக்கவாதிகளையும் தங்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள். 

இவர்கள் கிதாபுத் தவ்ஹீதைக் கற்றாலும், கற்றுக் கொடுத்தாலும் அந்நூல் வழிகாட்டுகின்ற தவ்ஹீதை தங்களில் நிலைநாட்டுபவர்களாக இல்லை. ஸஹாபாக்கள் சுமந்த கொள்கையை இவர்கள் சுமந்தவர்களல்ல. 

இன்னும், ஸஹாபாக்கள் அழைப்புப் பணியில் அதற்குத் தகுதியானவர்களை எவ்வாறு நியமித்தார்களோ அவ்வாறு இவ்வமைப்பினர் தங்களின் அழைப்புப் பணியில் தகுதியானவர்களை நியமிப்பதில்லை.