[ஜமாதுல் முஸ்லிமீன் பெயரும் தக்'பீர் ஜமாத்தும்]

துரத்தப்பட்ட கவாரிஜுகள் ( இலங்கை ஜமாத்துல் முஸ்லிமீன் )

இந்த கூட்டத்தின் தலைவர் உமர் அலி தனக்கு பைஅத் செய்யாதவர்களை காபிர் என கூறி வந்தார். தற்பொது சற்று மாறி ஜாஹிலியத்தில் உள்ளார்கள் என கூறிக் கொண்டிருக்கிறார்.. இன்னும் சற்று ஒரு படி மேலே போய் பின்வருமாறு கூறுகிறார் 
 
"
ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் இஸ்லாம் என்றாலே பைஅத் என்று ஆகிவிடுகின்றது. ஆகவே பைஅத் இல்லாமல் இஸ்லாம் இல்லை என்பதையும் கடந்து இஸ்லாம் என்றாலே பைஅத்துத்தான் என்று கூறினால் அந்தக் கூற்றில் எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்."

இந்த  அவர் உருவாக்கிய கொள்கையின் அடிப்படையில் தனக்கு (உமர் அலி ) பைஅத் செய்யாதவர்களை தன்னை  விட்டு நீக்கி கொண்டார். அவர்களுக்கு ஸலாம் சொல்வது தொடங்கி தொழுகையில் ‌பி‌ன் தொடர்வதிலிருந்து மைய்யத் வரை கலக்க மாட்டார். அதாவது காபிர் எ‌ன்ற வார்த்தை தான் இ‌ல்லை மற்றப்படி செயல்பாடுகள் அனைத்தும் அதனை நோக்கியே.....

உமர் அலியாரிடம் நீங்கள் கலிமா சொன்னவர்களை ஏன் காபிர் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டப்போது ( கேள்வி : 17) ,

" ஜமாஅதுல் முஸ்லிமீனின் அமீரிடத்தில் பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றார்கள் என்றும், அவர்கள் செல்லுமிடம் நரகம் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இந்த உண்மையை நாம் பகிரங்கமாகக் கூறுகின்றோம். அது தவிர ஜமாஅதுல் முஸ்லிமீனிலே இல்லாதவர்கள் காபிர்கள் என நாம் ஒருபோதும் கூறுவதில்லை."

என்று கூறிவிட்டு , அதே தொடரில் கேட்கப்பட்ட மற்றைய கேள்வியையும் அதன் பதிலையும்சற்று கவனித்து பார்த்தால் இவரது இரட்டை வேடம் தெளிவாக தெரியும். அதாவது அவரிடம் கேட்கப்பட்டது ( கேள்வி 18 ) 

" அதாவது தரீக்காக்கள், இயக்கங்கள் போன்றவற்றிலும் இந்த பைஅத் காணப்படுகின்றது. எனவே ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு வெளியிலுள்ள அமைப்புக்களும் சுவனம் நுழையும் என்றாகி விடுகின்றதே...? ஆனால் உங்களது அமைப்பைத் தவிர ஏனைய அமைப்புக்கள் சுவனம் செல்ல மாட்டாது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இது முரண்பாடல்லவா..........? 

இவரது பதிலின் இறுதி பகுதி யில் இவரது வார்த்தையை  கவனித்து பாருங்கள் , இதோ... 

" இதனை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்வதாக இருந்தால் பைஅத் எடுக்கக்கூடிய தரீக்காகக்ள், இயக்கங்களின் தலைவர்களிடம் சென்று உங்களிடம் பைஅத் செய்யாமல் தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்வோர் பற்றி உங்களது தீர்ப்பு என்ன எனக் கேட்டால் “அவர்களும் முஸ்லிம்களே” எனக் கூறுவார்கள். பைஅத்
செய்தவனும் முஸ்லிம், பைஅத் செய்யாதவனும் முஸ்லிம் என்றால் அந்த பைஅத் இஸ்லாத்திற்கான பைஅத் அல்ல என்பதனை நீங்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். "


நாம் பையத் செய்யாத யாரையும் காபிர் என்று கூறுவதில்லை என்று கூறிவிட்டு ,இங்கே கூறுகிறார்


 " // பைஅத் செய்தவனும் முஸ்லிம், பைஅத் செய்யாதவனும் முஸ்லிம் என்றால் அந்த பைஅத் இஸ்லாத்திற்கான பைஅத் அல்ல // " என்று. 


இதுஎப்படி என்றால் , காபிர் என்று சொல்ல மாட்டார் , ஆனால் முஸ்லிம் இல்லை என்று கூறுவார், இன்னும் குப்ர்க்கான பையத் என்று சொல்லமாட்டார் ஆனால் இஸ்லாத்திற்கான பைஅத் அல்ல என்று கூறுவார். என்னே இரட்டை வேடம் !, என்னே வார்த்தை ஜாலம்!.


இஸ்லாத்தின் மூலாதாரம் வஹியைத் தவிர வேறில்லை. அது அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகிய இரண்டைத் தவிரவேறு எந்த வடிவிலும் இல்லை. அவைகளை ஸஹாபாக்கள் விளங்கிய முறையில் விளங்குதல் எ‌ன்இந்த அடிப்படையை உடைத்துவிட்டால் மக்கள் இலகுவாக வழிகெடுக்கப்பட்டு விடுவார்கள். எனவேதான் நரகின்பால் அழைக்கும் ஒவ்வொரு பிரிவும் எப்படியாவது மக்களை இந்த அடிப்படையிலிருந்து அகற்றிவிட முயற்சிக்கின்றனர்....
எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! 
இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள்
இருக்கின்றன. அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும்.
எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.
சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது