[ஹுசைன்]

மில்குள் யமீன் என்ற வலது கரம் சொந்தமாக்கிய என்ற சாராரும் அது பற்றிய ஆதாரங்களும்அல் குர் ஆனை யார் பிரட்டினாலும் இந்த மில்குள் யமீன் என்ற வார்த்தையையும் சட்டத்தையும் அல் குர் ஆன் பேசுவதை யாரும் காணலாம்.

உம்மதுள் இஸ்லாமியாவில் மில்குள் யமீன் விடயத்தில் யாரும் கருத்து வேறுபாடு பட்டதில்லை. " மலக்கத் அய்மானுக்கும் " என்ற வாசகமும் அதே கருத்தில் வரும் வாசகங்களும் அல் குர் ஆனில் பல இடங்களில் வந்திருப்பதை யாரும் பார்க்கலாம். அதாவது " தம்முடைய வலது கரங்கள் சொந்தமாக்கிய " என்ற கருத்துள்ள வாசகங்களாகும்.

இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த மார்க்கமாகும். எனவே, அதனை ஒழித்து தான் இந்த வலது கரங்கள் சொந்தமாக்கிய என்ற வகையை இஸ்லாம் அறிமுகம் செய்தது.

இந்த வலது கரங்கள் சொந்தமாகிய என்ற பெண்களை திருமணம் செய்ய வேண்டியதில்லை. இன்னும் இவர்கள் யுத்தத்தால் மாத்திரம் பெறப்படுபவர்கள் மட்டும் இல்லை.

மாற்றமாக யாரும் அன்பளிப்பாகவும் ஒருவருக்கு கொடுக்கலாம். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி அன்பளிப்பாக பெற்றவர்கள் தான் மாரியதுல் கிப்தியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்களை முகவ்கிஸ் என்ற எகிப்திய கவர்னர் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார்.

இவ்வகையினரை பற்றி அல் குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது ...


 يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا 33:50. 


நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்;

அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்);

அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்;

மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.


இவ்வாறு தெளிவாக அல் குர் ஆனும் சுன்னாவும் பேசிய விடயங்களை தான் இன்று அறிவீனர்கள் மறுத்து பேசுகின்றனர் .

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

  • வலது கரம் பற்றிய குர் ஆனிய சட்டமும் அதனை இன்று நடைமுறை செய்ய முடியாது என்ற ஹுசைனின் உளறல்களும் Part 1  2


நான் மீண்டும் கூறுகிறேன் முஜாஹித் இப்னு ரஷீன்  ஒரு கள்வன். ஏனெனில், களவு எடுத்தது என்னுடைய நூலகத்தில் இருந்து தான். 80 இற்கு மேற்பட்ட கிதாபுகளை களவு எடுத்தான். இது ஜரஹ் வ தஃதீல் விடயத்தில் பதிந்தே வரும். அவன் திருந்தி தவ்பா செய்து திரும்பி வரும் வரை நான் இதை சொல்லியே வருவேன். 
    ஏன் என்னைப்பற்றி சில்மி நானா திருப்பி திருப்பி இப்படி சொல்லி வருகிறார் என்று முஜாஹித் கேட்கிறார். நீ செய்ததை தான் சொல்கிறேன்.நீ திருந்தும் வரை சொல்லியே தீருவேன். ஏனெனில், இன்று ஸலபுஸ் ஸாலிஹீன் பாதைக்கு எதிரியாக இருக்கிறான். 
ஊரில் மத்ரஸாவொன்று எழுப்பி எடுக்க தடுமாறுகிறான்.அதற்காக அசத்தியவாதிகள் அவனுடன் சேர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பானைக்கு மூடி கிடைத்து விட்டது என்பது போல் பித்அத்வாதிகள் கை கொடுக்கிறார்கள். 
    நீ சுத்தமாக மாறி விடு உன்னை விட்டு விடுகிறேன். நீ வழிகேட்டில் காலை வைத்து விட்டால், இதை சொல்லியே தீருவேன். இந்த கதை உலகமெல்லாம் பரவும் என்று அன்றே சொல்லி விட்டேன். ஆகையால் தான் இதனை திரும்ப திரும்ப சொல்கிறேன். ஏனெனில், ஆட்கள் ஆட்களை தெரிந்து இருக்க வேண்டும். இன்று இவர் ஊர் ஊர் ஆக சென்று பிரச்சாரம் செய்கிறார்.
    மேலும், இவரது தகப்பனார் கூறுகிறார், தனது மகன் கொண்டு வந்த கிதாபுகளை சில்மி அவரது நூலகத்தில் வைத்துக் கொண்டாராம் என்று. ? எப்படி கதை. 
இந்த முஜாஹீத் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து ஹதீஸ் ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள். அப்போது, முஜாஹித் எனக்கு அவர் உஸூலுல் ஹதீத் பற்றி தொகுத்த ஒரு கிதாபை தந்தார். அந்த கிதாபிற்கு ஒரு முன்னுரை எழுதி கேட்டார்.எனது முன்னுரையுடன் அதனை வெளியிடுவதற்கு, நான் அதனை பார்த்தேன். எல்லாம் குப்பைகள். எல்லாம் கொபி பேஸ்ட்.   
இதிலிருந்து இந்த பொய்யன் பெயர் வளர்க்க தடுமாறுகிறான் என்பதை புரிந்துக் கொண்டேன். ஆகையால் அதனை எடுத்து ஒரு பக்கமாக வைத்து விட்டேன். 
திரும்ப திரும்ப வந்து அது பற்றி என்னிடம் கேட்பான். நான் நேரம் இல்லை என்று கூறி விட்டேன். நேரம் இடம் அளித்தால் பார்ப்போம் என்று கூறி விட்டேன். அதனுடனேயே அல்லாஹ் அவனை எனக்கு அடையாளம் காட்டி விட்டான். 
                          --  ஷேக் அஸ் ஸைலானி 2012 - 04 - 07 --