[மௌதூதியின் தன்மைகளும் வழிகேட்டின் உண்மைகளும்]

மௌதூதியின் தன்மைகளும் வழிகேட்டின் உண்மைகளும்

1956 ஏப்ரல் 13ம்தேதி செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டது  “ஜமாஅத்தே இஸ்லாமி" என்ற இயக்கம்

மௌதூதி மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் பிரதானமானவற்றை பின்வருமாறு பட்டியல் இட்டுக் காண்பிக்க முடியும்.

 • ஸஹாபாக்களைக் குறைகாணுதல்.
 • ஸூன்னாவுக்கெதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருத்தல்.
 • அல்-குர்ஆனுக்கு சொந்த விளக்கம் கொடுத்தல்.
 • இஸ்லாத்திற்கு அரசியல் ரீதியான விளக்கம் கொடுத்தல்.
 • நபிமார்களின் இஸ்மத்தில் குறை காணுதல்.
 • தஜ்ஜாலின் வருகையை மறுத்தல்.
 • கழா,கத்ரை மறுத்தல்.
 • ஷரீஅத்துடைய பிரயோகங்கள் பலவற்றுக்குப் பிழையான விளக்கங்கள் கொடுத்துள்ளமை.
 • பகுத்தறிவுக்கும் ரசனைக்கும் ஏற்புடையதாக அமையாத ஆஹாதான ஹதீஸ்களை, அவை ஸஹீஹானவையாக அமைந்திருந்த போதிலும் அவற்றை நிராகரித்தல்.
 • அல்-குர்ஆனுடன் முரண்படும் மேற்குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.
 • வரலாற்று உண்மைகளுடன் முரண்படும் குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.
 • ஹதீஸ்களை ஸஹீஹானவையாக இருந்த போதிலும் அவை பரஸ்பரம் முரண்படும்போது அவற்றை நிராகரித்தல் வேண்டும்.
 • ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹூல் முஸ்லிம் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ள சில ஸஹீஹான ஹதீஸ்களையும் நிராகரித்துள்ளமை. 

மேலும் , மௌதூதியின் வழிகேடான கொள்கையான ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை மறுக்கும் போக்கை மற்றும் சஹாபாக்களை நிந்திக்கும் போக்கை அகார் முஹம்மத் அவர்கள் பின்வருமாறு தற்காத்து பேசுகிறார், வாசிக்கஎந்த விதத்திலும் என்னிடத்தில் களா-கத்ருடைய மஸ்அலா ஈமானின் பாகத்தை சேர்ந்ததல்ல. கூறியவர் - அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி) நூல் - மஸ்அலா ஜப்று - கத்ரு 09

இஸ்லாமிய பரிபாஷையில் எவர்களை மலக்குகள் என்று சொல்லுகின்றார்களோ அவர்கள் ஏறக்குறைய இந்தியா மற்ற நாடுகளில் உள்ள முஷ்ரிகீன்கள் அவர்களின் மதத்தில் தேவுகள், பிசாசுகள் என்று சொல்லுகின்றார்களோ அவைகள் தான்.
கூறியவர் - அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி)
நூல் - தஜ்தீது வஇஹ்யாயேதீன் - 14 
 • மௌதூதியின் தன்மைகளும் வழிகேட்டின் உண்மைகளும் கேட்க


ஜமாத்தே இஸ்லாமி இலங்கை

28-04-56 சனி பின்நேரம் இரவு 10 மணியிலிருந்து நடுநிசி 1.30 மணி வரை ஜமாத்தே இஸ்லாமி இலங்கை யின் ஓர் விசேஷக் கூட்டம் கொழும்பு பீர் ஸாயிபு தெருவிலுள்ள அல்ஜிஹாத் புக் ஸ்டாலில் கூடிற்று.அவ்வமயம் ஜனாப் பி.எம் யூசுப் ஸாஹிபவர்கள் தலைமை வகித்தார்கள்.
பாத்திஹா ஓதப் பட்டு கூட்டம் ஆரம்பமாயிற்று மவ்லவி யூ.எம் தாஸின் பாஸி,நத்வி அவர்கள் இன்றைய முஸ்லீம்களின் கடமையும்,அதில் முஸ்லீம்களின் பங்கும் எனும் மகுடத்தில் ஓர் சொற்பொழிவு நிகழ்த்தினார்
***********************************************************************