[ஹஸனுல் பன்னா]
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் எகிப்தில் ஹஸனுல் பன்னா என்பவரால் உருவாக்கப்பட்டது.

ஹஸனுல் பன்னா  சிறுபிராயத்திலேயே அக்காலத்தில் காணப்பட்ட தரீக்கா அமைப்புகள் சிலவற்றில் சேர்ந்து தன்னை ஒரு ஸூபியாக பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.வழிகெட்ட ஷாதுலிய்யா தரீக்காவின் உட்பிரிவுகளில் ஒன்றான ‘ஹஸ்ஸாபிய்யா தரீக்கா’வின் முக்கியமானவர்களான ‘ஷேக் ஷிப்லி முஹம்மத் அபூ ஷவ்ஷா, ஷேக் ஸெய்யித் உஸ்மான் அப்துல் முஹ்தால் போன்றோரின் நட்பும் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது.

அத‌னூடாக தரீக்காவின் த‌லைவர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது. தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களிடம் ‘பைஅத்’  பெற்றுக் கொண்டு  தரீக்காவில் இணைந்து ‘அல்ஜம்இய்யதுல் ஹஸ்ஸாபியா லில் பிர்’ ஹஸ்ஸாபியா'  எனும் ஸ்தாபனத்தை ஸ்தாபித்து மிகக் கடுமையாக உழைத்து அந்த ஸ்தாபனத்தின் செயலாளர் பதவியையும் அடைந்து கொண்டார்.

1928 இல்  ஹஸனுல் பன்னாவால் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமூன், அதே போன்று இந்திய துணைக்கண்டத்தில் 1940 இல்  மௌதூதியால்  உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி, இரண்டும் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட இயக்கம்.

ஹஸனுல் பன்னா , சைய்து குதுப் ,முஹம்மத் குதுப்,  மௌதூதி போன்றவர்கள் கோட்பாடுகளில் உ‌ள்ள  இயக்கங்கள்தான் இந்த இயக்கங்கள்.  இவர்களின் திட்டமிடல் , தொழிற்பாடு முற்றிலும் ஜனநாயக முறையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும்.

இவர்கள்  தேர்தல்களில் பங்கு கொள்வதையும் பாராளுமன்ற உறுப்புரிமைகளை பெற்றுகொள்வதையும் காணமுடியும்.

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் 2005 ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டது என்பது குறிப்பிடதக்கது. பங்களாதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் வரலாற்றில் 1986 இல் தேர்தலில் போட்டியிட்டது.


இந்த இயக்கத்தின் குஞ்சி தான் உஸ்தாத் மன்சூர்..........
இவர் ஜாமிஆ நளீமிய்யாவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர். மீள்பார்வையின் ஸ்தாபகர்களுள் ஒருவர். அதன் முன்னாள் பிரதம ஆசிரியர். 

இந்த இயக்கத்தின் குஞ்சி தான் மீள்பார்வை சஞ்சிகை ...........
இந்த இயக்கத்தின் குஞ்சி தான் வைகறை சீ டி  சஞ்சிகை.......
இந்த இயக்கத்தின் கோசம் தான் வேற்றுமையில் ஒற்றுமை..........
இந்த இயக்கத்தின் கோசம் தான் முரண்பாட்டில் உடன்பாடு.............

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  • இஹ்வானுள் முஸ்லிமீனும் அதன் இரட்டை முகமும் 1  2 
  • வேற்றுமையில் ஒற்றுமையா ? 1 2 
  • ஒற்றுமையில் நபிவழியும் அந்நிய வழிமுறைகளும் 1 2