[ஹிஸ் புத் தஹ்ரீர்]


ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டுதலின்படி செயல்படுவது என்பதனை புறந்தள்ளிவிட்டு 'கிலாபத் - இஸ்லாமிய ஆட்சியே தீர்வு' என்ற சுலோகத்தை முன் வைக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஷரீஅத் என்ற அடிப்படையில் இன்றிருக்கும் பிரச்னைகளை  அணுகுவதைக் காட்டிலும், கருத்தொற்றுமையின் அடிப்படையில்  பிரச்னைகளுக்கான தீர்வைக் காண வேண்டும் என்கின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரப் பாடுபடுவோம் , அல்லாஹ்வுக்கும் அவனது தீனுக்கும் என்ன ஆனாலும் பரவாயில்லை எ‌ன்ற கோஷமே இவர்களது கோஷம்.

ஷகீப் அர்ஸலான், ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மது அப்துஹு, ரஷீத் ரிழா,  என்போரின் ஊடாக வந்து, லிபியாவின் ஸனூஸியா இயக்கம், வட ஆப்பிரிக்காவின் மஹ்தி இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களாக வளர்ந்து, அல் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி, (ஹிஸ்புல் தஹ்ரீர்) துருக்கியின் ரபாஹ் இயக்கம் என்பவற்றில் நவீன இஸ்லாமிய எழுச்சி எ‌ன்ற பெயரில் அரசியல் போராட்டங்களாக வளர்ந்து வந்து நிற்கிறது. 


அரசியலை இஸ்லாத்தின் ஒரு தீர்வாக சித்தரித்து வைத்துள்ளனர். இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் தூண்டி முஸ்லிம் உலகெங்கும் நிலையற்ற நிலையை தோற்றுவிப்பதில் இந் இயக்கங்கள் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. குழப்பமான  நிலவரங்களையும், விகாரமான விளைவுகளையும் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 


பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், பொஸ்னியா, துருக்கி, அல்ஜீரியா, சூடான், செச்னியா, காஸ்மீர், ஈராக், பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், பாக்கிஸ்தான்; என்று தொடர்ந்து கொண்டே போகக்கூடிய படிப்பினைகளையும், வரலாறுகளையும் சுமக்கமுடியாத சோகச் சுமைகளாக சுமந்த நிலையிலும் தொடர்ந்து கண்கள் கட்டப்பட்ட கழுதைபோல் அதே பாதையில் பயணிப்பது என்பதுதான் முட்டாள் தனமானதும், ஜீரணிக்க முடியாததுமாகும். 


கிலாபத்தா ?? ஆபத்தா ?? 


மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக் கூடிய பொது விடயங்கiளுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்கொண்டு செல்ல வேண்டும். அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும்.வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்.


இந்த கோஷங்கள் கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் ஷரியத்தின்அடிப்படைக்கே முரணானதாகும்.இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான். 


தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் கிலாபத்தை அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை. மாறாக ஈமானுக்கெதிரான செயல்பாடுகளை கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி; அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்தவே நபிமார்களை அனுப்பி வைத்தான்.” வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை. ” என்றே எல்லா இறைத்தூதர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.


எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்ற வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக மக்கள் வாழ்கின்ற போது அகீதாவை பற்றியோ ஸுன்னாவைப் பற்றியோ பேசாமல், கிலாபத்தை பற்றி பேசவேண்டும் கிலாபத் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது, ஆபத்தானது .தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.

பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம். எதையும் எதிர்க்க மாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவும் செய்வோம். என்பதே இவர்களது கொள்கையாகும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் கொள்கை அதுவாக இருக்காது.


அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான். மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காக தெரிகிறதே தவிர அதற்குத்தான் கிலாபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதோ நிலைநாட்டுவதோ அல்ல. 


எனவே அகீதாவையும் தூய்மையான சுன்னாவையும் மக்கள் மத்தியில் வைத்து புனரமைக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கினால் கிலாபத் ஏற்படாவிட்டாலும் மார்க்கத்திற்கு ஆபத்து ஏற்படாது.. ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டு தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்;. தீனுக்கு ஆபத்து செய்யாமல் இருந்தால் அதுவே பெரிய கிலாபத்தாகும்.எனவே அகீதாவுக்கு முதலிடம் கொடுத்து நபி வழியில் பிரசாரப்பணியினை செய்வோமாக.


இவர்களுடைய இஸ்லாமிய கொள்கையில் {அகீதாவில்) உ‌ள்ள வழிகேடுகளையும்  கீழ்வரும் சிறிய நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا

அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும் அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லைஇ
 ( அல்கஹப் :5)

                   


HT demo lon
இவர்களது ‌மிக முக்கியமான வழிமுறைகளில்   ஒன்றுதான் ர்ப்பாட்டம்.. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வழிமுறைக்கு அல் குர் ஆன் சுன்னாவிலிருந்தோ ஸஹாபா தாபியீன் இம்மாம்களிலிடமிருந்தோ ஒரு ஆதாரமும் இ‌ல்லை. மாறாக காந்தி, லெனின் போன் குப்பார் வழிமுறையை பின்பற்றி ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் வீதியில் ஊர்வலம் கொண்டு செல்லுவதில் திறமையானவர்கள்