[Dr. Shukri]
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு

நீ யாரிடமிருந்து இல்மை பெற்றுக் கொள்கிறாய் என்பதை கவனித்துக் கொள்..
கிபாருத் தாபியீன் அப்துல்லா இப்னு முபாரக் >> இந்த மார்க்கம் அறிவிப்பாளர் தொடர் கொண்டது. அதுமட்டும் இல்லையெனில் எவரும் எதனையும் கூறுவார்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் போற்றி பதியப்பட வேண்டியவர் டாக்டர் சுக்ரி என்று பலரும் அங்கலாயிக்கின்றனர். இவர் உண்மையிலேயே போற்றி பதியப்பட வேண்டியவர் தானா என்பதை அவரது சுயசரிதையை சொல்லும் அகார் முகம்மதுவின் வார்த்தைகளே போதுமானதாகும் .

இந்த சுக்ரி , தனது ஆரம்ப பாடசாலையிலேயே தனக்கு வழிகாட்டியாக கந்தையா மாஸ்டரின் கையில் தான் வளர்த்து எடுக்கப்பட்டார் என்று பெருமிதமாக அகார் முஹம்மது சொல்கிறார். ஆரம்பமே , இறை மறுப்பாளரின் வழிகாட்டல் என்றால் இவரது மேல் பட்டப்படிப்பை பற்றி நாம் சொல்ல தேவை இல்லை. இந்த வழிகாட்டலில் வளர்ந்த சுக்ரி , இஸ்லாமிய பட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற தேர்ந்து எடுத்தது , பிரித்தானியாவின் பல்கலைகழகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அது மட்டுமில்லாமில், பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் என்ற கிறிஸ்தவ பாதிரியாக இருந்தவரின் வழி காட்டலில் தனது இஸ்லாமிய பட்டப் படிப்பை தொடர்ந்து , பட்டமும் பெற்று உள்ளார். இதனை பெருமிதத்துடன் அகார் முஹம்மத் சொல்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு முஸ்லிம், அதுவும் தனது இஸ்லாமிய பட்டப் படிப்பை , யூதர்கள் செறிந்து வாழும் நாட்டில் , கற்று அதுவும் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் வழிகாட்டலில் கற்று தேர்ந்தார் என்றால் இவரது இஸ்லாமிய கொள்கை பற்றி நாம் சொல்லியா தெரியவேண்டும்.

இப்படிப்பட்ட ஒருவரின் வழிகாட்டலில் , ஜாமியா நளிமியா என்று இஸ்லாமிய கலாசாலை வழி நடாத்தப்பட்டால் எப்படி இருக்கும் ? நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாக்களை நா கூசாமல் சில்லறை விடயங்கள் என்று ஒதுக்கி தள்ளுவதை இவர்களது பேச்சிலும் நடை உடை பாவனையிலும் காணலாம். இஸ்லாமிய தஃவா வை யூத நசாராக்களின் வழியில் எடுத்தது செயல் படுவதை காணலாம். இயல் இசை நாடகம் , படம் , பாட்டு , கண்காட்சி என்று யூத நசாராக்களின் வழி முறையில் தஃவா வை முன்னெடுத்து செல்வதை காணலாம். அல்குர் ஆனையும் ஸுன்னாவையும் தர்க்க வாத அடிப்படையில் கற்று கொடுப்பதோடு, அந்த அடிப்படையிலேயே
பின்பற்றுவதும் இவர்களது வழி முறையாகும்.

இதில், இன்னொரு வினோதமான விடயம் தான், இந்த மக்கள் யூத நசாராக்களை பகிஷ்கரிக்க வேண்டும், பாலஸ்தீனத்தை மீட்க வேண்டும் என்று கதறுவது. நம்பலாமா ? இவர்களது ஆடை முதல், தோற்றம் வரை யூத நசாராக்களின் வழியில் வைத்துக் கொண்டு, கிறிஸ்தவ பாதிரியாரிடம் கல்வி கற்றவரின் வழி காட்டலில் இந்த ஜாமியா வழி நடத்தப் படுகின்றது. இன்னும், இந்த கிறித்தவ பாதிரியாரிடம் கல்வி கற்றவரின் கையில் படித்து , எமது இளைஞ்சர்கள் வெளியாகினால் எப்படி இருக்கும். ?

இவரது உற்பத்திகள் தான் அகார் முஹம்மதும், உஸ்தாத் மன்சூரும் , மின்ஹாஜ் , ரவூப் செயின் என்று பலர் வெளியாகி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று எல்லா வழிகேடர்களுடனும் கை கோர்த்து செயல் படுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் , 72 கூட்டமும் நரகம் என்று சொல்ல , அந்த நரகம் செல்லும் பாதையில் உள்ள கூட்டங்களுடன் ஒற்றுமை பாராட்டினால் ஆச்சரியமா ?

பச்சை காபிர் , பாதிரியாரிடம் கல்வி பயின்ற தனது ஆசானை , புகழ்ந்து பேசும் அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டு வெளியாகி உள்ள இந்த மக்கள்,இதுவும் பேசுவார்கள் , இதற்கு மேலும் பேசுவார்கள் செய்வார்கள். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

இப்படி பட்ட டாக்டர் சுக்ரி அவர்களுக்கு ஒரு இணையத்தளமும் , அதற்கு புகழ் மாலையும் சூட்டி இந்த நளிமீகள் பெருமிதம் கொள்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பாதிரியின் கையில் வளர்ந்தவரின் கையில் வளர்ந்தவர்களை எம்முடைய சமுகம் போற்றி புகழ்கிறது என்றால் , எமது சமுகத்தை பற்றி என்ன தான் சொல்வது. இஸ்லாமும் அதனது நாகரீகமும் கொள்கையும் வழிமுறையும் செல்லா காசுக்குதான் மதித்து உள்ளார்கள். நகைப்புக் கிடமான விடயம் தான் , இவர்கள் இஸ்லாமிய நாகரீகம் பாரம்பரியம் என்று குரல் கொடுப்பது தான்.

முஸ்லிம் அறிந்ஜர்கள் என்று சொல்லக் கூடியவர்களிடம் படித்தே , மக்கள் வழிகேடாகி இருக்கும் போது, ஜஹம் இப்னு சப்வான் போன்று , யூத பரம்பரையில் படித்து ஜஹ்மியா என்ற வழிகெட்ட கூட்டத்தை உருவாக்கிய வழியில் இவரும் பயணித்துக் கொண்டு இருக்கிறார் . நளிமியா 
கலாபஈடம் என்று சொல்லி வழி கேடர்கள் செய்யது குதுப், ஹசனுள் பண்ண, யூசுப் அல் கர்ளாவி , கஸ்ஸாலி போன்றவர்களின் வழி கேடுகளை தான் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்.

அல்லாஹ் தான் அறிந்தவன்.