[Dr. Ashraff]

கவாரிஜ் கொள்கைக்கு டாக்டர் அஷ்ரபின் புதிய வரைவிலக்கணமும் அவரது இஹ்வானிய கொள்கையின் வெளிப்பாடும் 

இவரைப்பற்றி ஒரு அறிமுகம் ...

  • காத்தான்குடி குல்லியதுல் மனார் நிறுவனத்தின் ஸ்தாபகர் ..
  • காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்.....

நேர் வழியை விட்டு தடம் பிரண்ட இஹ்வானுள் முஸ்லிமீன் இயக்கத்தாருடன்  இணைந்து செயல் படுகிறார் என்பதனை அல் மனார் கல்லூரியின் முப்பெரும் விழாக்கள் என்ற நிகழ்வு தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 


இந்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், நாடகம் போன்ற ஷரியா அனுமதிக்காத விடயங்கள் என்பவற்றை தொடர்ந்து, இக்கலை நிகழ்வுகள் தொடர்பாக கருத்துரை வழங்க ஏற்பாட்டுக் குழுவினரால் அழைக்கப்பட்டிருந்க ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர் கருத்துரை வழங்கினார். 


அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:


" இதன் ஆதாரமாகத்தான் இன்றைய நிகழ்வுக்குக் கூட ஒரு நளீமி விஷேட அதிதியாக அழைக்கப்பட்டிருக்கின்றார். இலங்கையில் ஒரு நளீமிய்யா போதாது. ஒரு பேருவலை போதாது. இன்னொரு நளீமிய்யாவாக மாறும் வளம் இந்தக் கல்லூரியில் இருக்கிறது. இன்னொரு பேருவலையாக இக் காத்தான்குடியும் ஆக முடியும்." 


மேற்கூறிய விடயங்களை எமது பரிபாஷையில் கூறுவதென்றால் இஹ்வானின் இன்னொரு கோட்டையாக ஆக முடியும் என்பதாகும் . இந்த விடயங்களை பிரசுரிப்பத்தின் நோக்கம் என்னவெனில், இவரை தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் தவ்ஹீத் காரர் என்று எண்ணி கூட்டாக செயல்பட்டார்கள். சிலர் இன்னும் செயல் படுகிறார்கள்.  


இவரது அடிவருடியான ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ரயீசுத்தீன் என்பவரை தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்புக்கு தலைவராகவும் வைத்திருந்தார்கள். இவர் சில "மதனிகளை"  தன்னோடு வைத்திருப்பதும், அரேபிய நாட்டு பல்கலைகழகத்தில் பணிபுரிவதும் இவரது உண்மையான கொள்கை எது என்று அறியாமல் மறைக்கப்படுவதற்கு காரணாமாகும். 


வெளிநாட்டு  இஹ்வான்களால் நிதியுதவி செய்யப்படும், தவ்ஹீத் ஜமாஅத் மக்களோடு கூட்டாக செயல்படும்  IIRO என்ற அமைப்பும் இவரோடு சேர்ந்து காரியமாற்றுகிறார்கள். IIRO  இலங்கை  தலைவர்  இவரோடு  சேர்ந்து  செயல்படுவதின்  புகைப்படங்கள் இணையத்தளங்களில் காணப்படுகின்றன . 


இவ்வாறு இவரது  உண்மையான நிலைப்பாடு மறைக்கப்பட்டு இருக்கிறது.  


இன்னும் மாற்றுமத ஆண்களையும் பெண்களையும் இனைத்து வழங்கப்பட்ட அல் மனார்  இப்தார் நிகழ்வு இணைய தளங்களில் புகைப்படங்களுடன் காணப்படுகிறது.

  • கவாரிஜ் கொள்கைக்கு டாக்டர் அஷ்ரபின் புதிய வரைவிலக்கணமும் அவரது இஹ்வானிய கொள்கையின் வெளிப்பாடும் ஷேக் யஹ்யா சில்மி  

இவர் விடயத்தில் எமது முஸ்லிம் சமூகம் எச்சரிக்கையாக இருந்து மார்க்கத்தை சுத்தமாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக  இந்த விடயங்கள் பிரசுரிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்படுகிறது.