[தாருத் தவ்ஹீத் பறகஹதெனிய]

சத்தியம் எப்போதுமே தனித்ததாக மேலோங்கி நிற்கும். யாரினதும் தூற்றல்களையும் முரணான கருத்துக்களையும் ஒருபோதும் பொருட்படுத்தாது. 

அசத்தியம் தலை குனிந்து, முதுகெலும்பு இன்றி இருக்கும். தனது அசத்தியத்தை பலப்படுத்த ஏதாவது ஒரு கூட்டம் கிடைத்து விட்டால் அதனுடன் கைகோர்த்து விடும். 


இது சத்தியத்தினையும் அசத்தியத்தினையும் பிரித்தறியக் கூடிய இலேசான அடையாளமாகும். 

தன்னையே தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தட்டுத் தடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை வலுப்படுத்த வேண்டுமென ஜமாஅதுல் அன்ஸாரி சுன்னதுல் முஹம்மதியா (JASM ) குரல் கொடுப்பது  பொய் வாசமாகும். 

இவர்களின் உண்மை உதயம் என்ற சஞ்சிகை 2013 ஏப்ரல் மாதம் “இலங்கை முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யலாம்” என்ற தலைப்பில் இந்த பொய் வாசத்தை பரப்பியது.

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று அமானிதத்தை பாழ்படுத்துவதாகும். அதன் வழிமுறை தகுதியில்லாதவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதாகும்.ஜமாஅதுல் அன்ஸாரி சுன்னதுல் முஹம்மதியா இதனை உணர்ந்துக் கொள்ளட்டும்.


தர்க்கவாதத்தையும், தத்துவத்தையும் தன் கொள்கையாகக் கொண்ட பி.ஜேயை வளர்த்த JASM , அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை வளர்க்க முற்படுவது வியக்கத்தக்க விடயமல்ல. 


ஏனெனில், குவைத் நாட்டைச் சேர்ந்த இஹ்வானிகளின்   மஜல்லதுல் புர்கான் சஞ்சிகையை தம் கலாசாலையில் விநியோகிப்பதும், குவைத் நாட்டைச் சேர்ந்த இஹ்வானிக் கூட்டமான ஜம்இய்யது இஹ்யாஉ துராஸில் இஸ்லாமியின் அணுசரனையுடன் தஃவா விடயங்களை மேற்கொள்வதும் இவர்களின் தன்மையாகும். 

செய்யித் குத்ப், மௌதூதியுடன் அபுல் ஹஸன் நத்வியின் அரசியல் சிந்தனையை ஒப்பிட்டு ஆய்வு செய்ததிற்காக கலாநிதிப் பட்டம் பெற்ற அவர்களின் கலாசாலையைச் சேர்ந்த ஒருவருக்கு பொன்னாடை போர்த்தினார்கள். 

எல்லாம் அல்லாஹ் என்ற சூபித்துவக்கொள்கையையும் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கு படைக்கின்ற ஆற்றல் படைத்தவன் என்ற அஷ்அரிக் கொள்கையையும் மூஸா அலைஹிஸ்ஸலாம் தன் இணத்திற்காக ஒருபக்கம் சாய்ந்தவர் என முற்போக்கு வாதிகளின் கொள்கையையும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் மௌத்தாகி விட்டார் என்ற காதியானிக் கொள்கையையும் சுமந்தவர்தான் செய்யித் குத்ப்

அடுத்தவர் மௌதூதி - இவரின் பெயர் அபுல் அஃலா, இதன் அர்த்தம் மிக உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின் தந்தை என்பதாகும்,. இவ்வாறு தன் பெயரிலே குப்ரைச் சுமந்து கொள்கையிலும் குப்ரையே சுமந்தார். இவரின் சிந்தனையில் உறுவாகிய இயக்கம்தான் ஜமாதே இஸ்லாமியாகும்.

பொன்னாடை போர்த்துவது அந்நிய மதத்தின் கலாச்சாரம் என்பதைக் கூட தாருத் தவ்ஹீத் பரகஹதெனி அறியாமல் இருக்கிறது. தெற்காசியாவின் கலாச்சாரத்தை கட்டிக் காக்க வேணும் என்று சொல்பவர்களுக்கு அதனை காப்பதில் முதல்நிலை வகிப்பவர்களுக்கு இவை சர்வசாதாரணம். 

சூரியனையும் சந்திரனையும் பார்த்து எனது இரட்சகன் என ஏகத்துவத்தின் இமாமான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கூறியதன் மூலம் ஷிர்க் செய்து விட்டார் என றஸூல்மார்களின் மீது ஷிர்க்கைச் சுமத்தும் தாருத் தவ்ஹீத் பரகதெனிய ,  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் அனைத்து வழிகெட்ட கூட்டங்களின் ஷிர்க்கையும் குப்ரையும் எங்கே அடையாளம் காணப் போகிறார்கள்? 

தன் சமூகத்தின் மடமைத்தனத்தை உணர வைக்கவே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் இவ்வாறு கூறியதாக இமாம் இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது தப்ஸீருல் குர்ஆனில் அலீம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். 

பிரிவினைகளைப் பற்றி பேசி எழுதும் உண்மை உதயம்  என்ற JASM  இன் சஞ்சிகை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் உள்ள பிரேள்விகளையும் சூபிகளையும் தரீக்காக்களையும்  முஃதஸிலாக்களையும் தேவ்பந்திகளையும் சுட்டிக் காட்ட தைரியமில்லாமல் அதனோடு ஒன்றுபட்டு , இது அல்லாஹ் தந்துள்ள வாய்ப்பும் எனக் கூறுவது  தனக்குத் தானே முரண்படுகிறது என்பதன் நிதர்சன உண்மை. 

ஷீயா நாட்டின் தலைவர் அஹ்மத் நிஜாதை ஜம்இய்யதுல் உலமா வரவேற்றது. என்றாலும் வேடிக்கை என்னவெனில் JASM  இன் உண்மை உதயம் தன் சஞ்சிகையில் ஷீயாக்களை விமர்சித்து எழுதுகின்றது. இவர்களது பேச்சும் , நடவடிக்கைகளும் சஞ்சிகைக்கா? அல்லது வாழ்க்கைக்கா? என்ற கேள்வின்யின் விடை , ஊருக்கடி உபதேசம் எனக்கல்லடி கதைதான். 

காத்திரமான தீர்வுகள் பெறத்தேவை கலந்தாலோசனை “முதியவர்களோ இளைஞ் சர்களோ யாராயினும் அல்குர்ஆனை நன்கரிந்தவர்களே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்   அவையினர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.” இது உண்மை உதயத்தின் மே மாத சஞ்சிகையின் குரல். 

என்றாலும் ஜம்இய்யதுல் உலமாவின் மஜ்லிஸுஸ் ஷூராவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வழிகெட்டவர்கள் என்பதை உண்மை உதயத்தின் ஆசிரியர் சீர் தூக்கிப் பார்த்தாரா? 

இது சத்தியத்தை முடக்க வந்த ஷூரா சபை என்பதை ஜம்இய்யது அன்சாரி  ஸுன்னதி முஹம்மதிய்யா உணரட்டும். தென்னந் தோப்பு மாமரம் தேங்காய் காய்க்காது!! 

அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான் 


    وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ 


நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். ( 2 : 42 ) 


       أْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ 


நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? ( 2 : 44 )   


எந்த சந்தர்ப்பத்திலும்; சமூக ஒற்றுமையென்ற பெயரில் பிற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு இஸ்லாமிய வரம்புகளை மீறக் கூடாது என்று கூறுகின்ற உண்மை உதயம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மத நல்லிணக்கம் என்ற பெயரில்  எல்லை மீறி செய்த நடவடிக்கைகளை ஏன் கண்டு கொள்ளவில்லை ? அதற்கும் தவ்ஹீதின் சாயமா பூசப்படும்?  


காவிகளால் முஸ்லிம்களின் கல்விக்கு குறிவைக்கப்படுகின்றது என உண்மை உதயம் கவலைப்படுகிறது. ஆனால் ஜம்இய்யதுல் உலாமா மக்தப் எனும் பெயரில் தன் வழிகெட்ட சிந்தனையை நிலைநாட்டி தூய குர்ஆன் ஸுன்னாவின் கல்வியை அழிக்க முயற்ச்சி செய்வதை ஏன் கண்டுகொள்ளவில்லை. 

வட்டியிலான ஜம்இய்யதுல் உலமாவின் பொருளதாரக் கொள்கையை சரி கண்ட ஜம்இய்யது அன்சாரி  ஸுன்னதி முஹமதிய்யா குப்ர், ஷிர்க்கான கல்விக்கொள்கையை ஆதரிப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. 
எமது சமூகத்திலுள்ள அரசியல், சமய, சமூக துரோகிகளையும் முனாபிக்கு களையும் இப்பிரச்சினை மூலம்  JASM இனம் கண்டு கொள்ளாமை துர்ப்பாக்கியமாகும். 

அதிலும் மேலாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பகிரங்கமான துரோகியும் அந்நியவர்களின் ஏஜென்ட்டும் என்பதை இனம் காணத் தெரியாமல் இருப்பது அதை விடவும் மிகப் பெரும் துர்ப்பாக்கியமாகும். 

இதற்கான அடிப்படைக் காரணம் “உடன்பாட்டில் ஒத்துழைப்பும் முரண்பாட்டில் மன்னிப்பும்”என்ற இஹ்வானிகளின் தலைவரான ஹஸனுல் பன்னாவின் கோஷம் இவர்களின் கொஷமாகிவிட்டது. .

கஷ்டத்தில்தான் இலேசு உள்ளது என குர்ஆன் நபியின் அழைப்புப் பணிக்கு ஆறுதலாக எடுத்துக் கூற ஜம்இய்யதுல் உலமாவுடன் வழிகெட்ட அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட ஏங்குவதற்கு அதனை உதாரணமாகக் குறிப்பிடுவது இவர்களின் அப்பட்டமான மடமைத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது. 

மாற்றமாக, வழிகெட்ட கூட்டங்கள் ஒன்றிணைவதைப் பற்றி அல்லாஹ் அவனது குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : 

 
تَحْسَبُهُمْ جَمِيعًا وَقُلُوبُهُمْ شَتَّىٰ  ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ

நபியே! உம்மை (எதிர்க்கின்ற கூட்டங்களை) ஒன்றுபட்டதாகக் கருதுகின்றீர் (மாறாக) அவர்களுடைய இதயங்களோ சிதறிக் கிடக்கின்றன. அது நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களான சமூகத்தார் என்பதால் ஆகும். (அல் குர்ஆன் 59:14)

அன்புள்ள பொதுபலசேன என காபிர் சமூகத்தை விழித்து JASM கடிதம் எழுதுகிறது. இப்படி விழிப்பது தவ்ஹீதின் யதார்த்தமான அல்லாஹ்விற்காக நேசிப்பது, வெறுப்பது என்ற அடிப்படைக்கு முரணானது என்பதை உண்மை உதயத்தின் வாசகர்களே உணர்ந்துக் கொள்ளுங்கள். 

வழிகெட்ட ஜமாஅத்தே இஸ்லாமியின் அல்ஹஸனாத்தை (அஸ்ஸெய்யிஆத்) நேசப் பத்திரிகையாக வர்ணித்த உண்மை உதயத்தில் நபிவழிக்கு முரணான விடயங்கள் உதயமாகுவது ஆச்சரியமல்ல. சத்தியத்தை மறைக்கும் உண்மை உதயத்திற்கு என்ன பரிகாரம்?

உண்மை உதயமே என்பது உனக்குப் பொருத்தமான பெயரா ?? ஸுன்னத்திற்கு  வெற்றிக் கொடுக்கும் "அன்ஸார் ஸுன்னத்" என்பது உனக்கு பொருத்தமான பெயரா ??  

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.  


 ********************************************************

இஹ்வானிய கொள்கை சுமந்த குவைத்தின் பிரபல்யமான யஹ்யா துராஸ் இஸ்லாமியாவின் நிதி உதவி பெறும் இந்த தாருத் தவ்ஹீதின் தோற்றம், வளர்ச்சி, அதற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் குறித்துச் சில தகவல்கள். தாருத் தவ்ஹீத் என்ற போலி சலபி இயக்கத்தை பற்றி அவர்களது வார்த்தைகளினுடாகவே கீழே தரப்படுகிறது. 


இலங்கையில் இஸ்லாமியக் கற்கை நெறியைப் போதிக்கும் 150 க்கும் அதிகமான அறபு மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை எவ்வித அடிப்படை இலட்சியமுமின்றி ஆரம்பிக்கப்பட்டு நகர்ந்துகொண்டிருப்பதை அவதானிக்கலாம். இந்த அறபு மத்ரஸாக்களில் தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா என்ற பெயரில் சலபி கொள்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதில் தனித்துவ முத்திரை பதித்துத் தனித்து விளங்குவதைக் காணலாம்.


மார்க்கக் கல்வி,  குப்ர், ஷிர்க், பித்அத் கலந்த இலங்கை அரச பாடத் திட்டம் இரண்டையும் இணைத்துத் தனது பாடத்திட்டத்தை முன்னெடுத்த வழிபிரண்டு இருக்கும் அறபுக் கல்லூரிகளில் முன்னணி மத்ரஸாக்களில் இடம்பிடித்ததிலும் இதற்குத் தனிச் சிறப்பு இருக்கின்றது. அத்துடன் மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ச்சி கண்டு, பெரும் அளவில் பிரபலம் பெற்று இலங்கை இஸ்லாமியக் கல்லூரிகளில் ஜாமிஆ நளீமியாவுக்கு அடுத்த கட்டத்தை அடைந்த அதே கொள்கை அடிப்படையில் வளர்ந்த  மத்ரஸாவாக இது மிளிர்ந்தமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.


தாருத் தவ்ஹீத் நூலகம்:


நூலக வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் ஆரம்ப நூலகராகப் பணியாற்றிய முனாஸ் (நளீமி) அவர்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டி ஊக்கமளித்தவர்களில் மிஹ்லார் (நளீமி), போன்றோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். இஹ்வானிய கொள்கையில் ஊரிய நளிமீக்கள் தான் இவர்களது வாசிக சாலையை வளர்க்க , மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க பங்களிப்பு செய்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் !!??. 


தாருத் தவ்ஹீத் கற்றுத் தேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண் பெண் கலந்து உறவாடி படிக்கும் பல்கலைக் கழகங்களில் உள்வாரி மாணவர்களாகக் கல்வியைத் தொடர தகுதியைப் பெற்றிருக்கின்றனர். அத்துடன் குப்ர், ஷிர்க், பித்அத் கலந்த கல்விக் கல்லூரிகளிலும் கல்வியைத் தொடரத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.


அத்துடன் குப்ர், ஷிர்க், பித்அத் கலந்த மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகம், ஐக்கிய இராச்சிய வேல்ஸ் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பலரும் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர், தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.


தாருத் தவ்ஹீதின் முதல் பட்டதாரி வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவரான நபீல் (தாருத் தவ்ஹீத் ஸலபி) அவர்கள் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் Phd. பட்டம் பெற்று முதலாவது தாருத் தவ்ஹீத் சலபி கலாநிதி என்ற நிலையை அடைந்துள்ளார்.

 2003ம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘A Comparative Study on Nadwi’s Political Thought with particular reference to his Contempararies: Mawdudi and Qutb’ என்ற தலைப்பில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து தனது கலாநிதிப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இஹ்வானிய கொள்கைக்கு இவர் செய்த இந்தச் சேவையை இலங்கை இஹ்வானிய பத்திரிகை இவருடன் ஒரு நேர்காணல் செய்து பிரசுரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.  


எம்.ஏ.ஹபீழ் தாருத் தவ்ஹீத்  ஸலபி இவர் தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்று தற்போது குதர்க்க வாதி பி.ஜெ யைப் பற்றி அறிஞர் பி.ஜெ பண்முக ஆளுமையும்,தஃவாப் பணியும் என்ற தொடர் கட்டுரையை எழுதி வருகிறார்..


ஜஸீல் ( தாருத் தவ்ஹீத் ஸலபி ) குப்ர், ஷிர்க், பித்அத் கலந்த  மலேசியா பல்கலைக் கழகத்தில் Phd. கற்கை நெறியைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்.


இலங்கையில் தவ்ஹீத் என்ற பெயரில் பிழையான பிரச்சாரத்திலும், குதர்க்க வாதி, அஷாயிரா  பி. ஜெ. யை இலங்கையில் வளர்த்து விட்ட இந்த தாருத் தவ்ஹீத் ஸலபிகளின் பங்கு மகத்தானதாகும். 


நிதானம் என்ற பெயரிலும் , நடுநிலை என்ற பெயரிலும் , மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வராத விதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இஹ்வானிய அடிப்படையில் தாருத் தவ்ஹீத் ஸலபிகள் தஃவாப் பணியில் பணியாற்றி வருகின்றனர். 


போலி சலபி பெயரில் இயங்கும் இந்த இயக்கத்தை எமது மக்கள் இனங்கண்டு ஏமாந்து விடாமல் இருப்பதற்காக இவ்விடயங்கள் முன்வைக்கப்படுகிறது.