[ஜம்மியத்துல் உலமாவும் வான சாஸ்திரமும்]18.08.2013 வானசாஸ்திரத்தின் உண்மைகளும் அதனால் இஸ்லாத்திற்கு செய்யப்படும் அநியாயங்களும்

13.08.2013 கின்னியா பிறையில் ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களும் அதற்கு ஷேக் சைலானியின் மறுப்புக்களும் 

 ஈத் குத்பா 08.08.2013அல்லாஹ்வின் அருட்கொடை தான் பெருநாள் அது யாருக்கு

09.08.2013 1434 ஷவ்வால் பிறையும் ஜம்மியத்துல் உலமாவின் மறுக்கும் குழப்பங்களும்  
பிறை காணும் விடயத்தில் வானியல் நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிறையை தீர்மானிக்கும் வழிமுறையாக எடுத்து கொண்டுள்ள இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின்
போக்கை எமது மக்களுக்கு 
எச்சரிக்கிறோம். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாக தடை செய்துள்ள இந்த வழிமுறையை இலங்கை  ஜம்மியத்துல் உலமா சபை எடுத்து கையாள்கிறது என்ற 
உண்மையை அவர்களது பகிரங்கமான அறிவிப்பை ஆதாரமாக மேற்கோள் காட்டி கீழே விளக்கப்பட்டுள்ளது.   

கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைத் தீர்மானங்களின் தெளிவு குப்ரை நோக்கி  .............

அதவாது, தலைப்பிறையைத் தான் கண்டதாக ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2006.09.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமயகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் சார்பிலும் ஒன்று கூடிய மெளலவிகள் பிறை பார்த்தல் தொடர்பாக ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானங்கள் கடந்த வாரங்களில் தொடர்பூடகங்களுக்கூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. 

நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்;  விண் கலையையும் (வானவியல் கணக்குகளையும்) அறிய மாட்டோம் (நூல்: ஸஹீஹுல் புகாரி) என்று கூற , கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைப்பிறை பார்ப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம் பின்வருமாறு அமைகின்றது:


     ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றக்கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காணமுடியாத நாளாகக் கொள்ளப்படும்.

ஒரு குறிப்பிட்ட நாளில் பிறை வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என வானியல் கணிப்பீடுகள் உறுதி செய்யுமிடத்து கண்களால் பார்த்தவர்களின் சாட்சியம்  நிராகரிக்கப்படும் என்பது இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் தீர்ப்பாகும். வானியல் கணிப்பீடு என்பது உறுதியானது (கண்களால் பார்த்ததாகக் கூறும்) சாட்சியம் உறுதியற்றது உறுதியான ஒரு நிலைப்பாட்டுடன் உறுதியற்ற ஒரு நிலைப்பாடு முரண்பட முடியாது. என்கிறார் இமாம் ஸுப்கி (ரஹிமஹுல்லாஹ்).

குறைந்த பட்சம் பிறை கண்டதாக வரும் செய்தியை சரி காண்பதற்கு வானியலின் துணை நாடப்படலாம். இதன் பயனாக தப்பான நாளில் புதிய மாதம் ஆரம்பிக்கப்படுவது தவிர்க்கப்பட முடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். தற்காலத்தில் இக்கருத்தை பல மெளலவிகள் ஆதரிக்கின்றனர். மிகவும் பொருத்தமானதும், நடுநிலையாதனதுமான கருத்தாக இது கொள்ளப்படுகின்றது. புகழ்பூத்த இஸ்லாமிய சட்டத்துறை அறிஞரான இப்னு ஹஜர் அல்ஹைதமீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்தும் இதுவாகும்.

அதவாது, தலைப்பிறையைத் தான் கண்டதான ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆயினும் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறல் இருந்த போதும் எவராலும் தலைப்பிறை வெற்றுக்கண்களால் காணப்படவில்லையாயின் அவ்வாறு அது கருதப்பட்டு நடப்பு மாதம் 30 நாட்களாக பூரணப்படத்தப்படும்.
வானியல் கணிப்பீடுகளை நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்தல் வேண்டும் என்பது எமது தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விடயமாகும்.

பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ பெருநாள் கொண்டாடுவதற்கோ பிறரைத் தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.
 இந்த முடிவும் எமது சுய ஆய்வின் அடிப்படையில் பிறந்த ஒன்றல்ல. இது எமது ஆரம்ப கால அறிஞர்கள், இமாம்கள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வெளியிட்டுள்ள கருத்தாகும்.
இமாம்களின் கருத்துப்படி அவர்கள் தனிப்பட்ட முறையில் ரகசியமாக நோன்பு நோற்கலாம். பெருநாளையும் கொண்டாடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிறை தொடர்பாக ஏனைய கொள்கையைச் சுமந்தவர்கள் பொது மக்கள் மத்தியில் பலவாறான விளக்கங்களைப் பரப்பி வருகிறார்கள். அதில் முக்கியமாக ‘அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா’ என்ற அமைப்பு பிறை சம்பந்தமாக மார்க்கத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி விட்டது. எனது இந்த உரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் பிறை தொடர்பாக ஏனைய கருத்துகளைச் சுமந்தவர்களுக்கும் இன்னும் பிறை காணுதலில் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைத் தவிர்ந்து கொண்டு யாரெல்லாம் ஏனைய வழிமுறையைக் கையாள்கிறார்களோ  அத்தகையவர்களுக்கும் ஒரு பதிலாகவும் இருக்கும். ............தொடர்ந்து வாசிக்க


ரமளான் பிறை தென்பட்ட பிறகும் நாம் வகுத்துக் கொண்ட பூமியின் எல்லைக் கோடுகளை காரணம் காட்டி 'இது எங்களுக்குரிய பிறையல்ல" என்று ஒதுங்குவது மார்க்க அடிப்படையில் சரிதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.


ரமளான் பிறை அறிவிக்ப்பட்டு விட்ட பிறகும், வெட்கப்பட்டு கொண்டு அல்லது ஊரோடு ஒத்துபோவோம் என்ற பலவீனமான எண்ணத்தில் அல்லாஹ் அறிவித்த ரமளானை நாம் அலட்சியப்படுத்தினால் குற்றவாளியாகி விடுவோம். இந்த அலட்சியம் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் 

அவர்களின் எச்சரிக்கையையும் புறக்கணிக்க வைக்கும் என்பதை அஞ்சி தலைப்பிறைக் குறித்து முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.