[தென் இந்திய அபூ அப்துல்லா]

காதியானிகள் முஸ்லிம்கள் இல்லையா ? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதிய அபூ அப்துல்லாஹ் அவர்கள் , காதியானிகளை காபிர் என்று சொல்பவர்களை கீழ் கண்டவாறு கூறுகிறார். 

அதாவது " காதியானிகள் பொய் நபி மிர்சா குலாமை நபியாக நம்பிச் செயல்படுவது பெருத்த வழிகேடு என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை. குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் அவர்களது சுய விளக்கங்களைக் கொடுத்து அவர்களை நம்பியுள்ளவர்களை ஏமாற்றுவார்கள்; வழி கெடுப்பார்கள். இதுவே உண்மையாகும்.

சுன்னத் ஜமாஅத்தினர், பல இயக்கத்தினர், சலஃபிகள் என அனைத்து மவ்லவி வர்க்கமும் காதியானிகள் காஃபிர்கள் என்று கூறுவது போல், காதியானிகளும் மிர்சா குலாமை நபியாக ஏற்காதவர்களை முஸ்லிம்களாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் பின்னால் நின்று தொழமாட்டார்கள். அந்த வகையில் இந்த இரு சாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே; 21:92, 23:52 இறைவாக்குகளை நிராகரிப்பவர்களே! "


இவர் மேற்சொன்னவாறு காதியானிகளை காபிர் என்று சொல்பவர்களை சாடியது மட்டுமின்றி காதியானிகளை ஏனைய பிரிவுகளுடன் ஒப்பிட்டு சிறப்பும் காட்டுகிறார். அதாவது, 

" காதியானிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள்! 

மற்றபடி அவர்களது கலிமா “”அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூவரசூலுஹூ” இல்லை; “”லா இலாஹ இல்லல்லாஹ் குலாம் அஹமது நபியுல்லாஹ்” என்று சுன்னத் ஜமா அத்தினர் கூறி வருவது பொய்யாகும். இது போல் பல பொய்களைக் கூறி அப்பாவி பொது மக்கள் காதியானிகள் மீது வெறுப்பைக் கக்கவும், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை; காஃபிர்கள் என தவறாக எண்ணவும் வழி வகுக்கிறார்கள்.


மிர்சா குலாம் நபி, ஈசா(அலை) அவர்கள் அப்பொழுதே இறந்துவிட்டார்கள் என்ற இரண்டு விடயங்களிலும், அந்த இரண்டு சம்பந்தப் பட்ட செய்திகளிலும் தடம் புரண்டு பொய் வாதங்களை எடுத்து வைப்பார்களே அல்லாமல், அவை அல்லாத மற்ற விடயங்கள் அனைத்திலும் சுன்னத் ஜமாஅத்தினரைவிட அவர்கள் உயர் நிலையிலேயே இருக்கிறார்கள். என்று சொல்வதுதோடு  மட்டுமில்லாமல் , காதியானிகள் காபிர்கள் என்று தீர்மானம் எடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றும் கூறுகிறார். 

இவ்வாறு நபிக்கு பின் நபி என்று வாதாடும் கூட்டம் காபிர் இல்லை என்று வாதாடும் இவரைப் பற்றி ஷேக் யஹ்யா சில்மியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலையும் கீழ் வரும் லிங்கில் கேட்கலாம்.