[அன்சார் அக்கரைப்பற்று]


அல்குர் ஆன் சுன்னாவை சஹாபாக்களின் விளக்கத்தில் விளங்கி பின்பற்ற வேண்டும். ஏனெனில், அல்குர் ஆனை இறக்கி, அதனை விளக்க நபியை தேர்ந்து எடுத்து , அந்த விளக்கத்தை பெற்றுக் கொள்ளும் சமூகமாக சஹாபாக்களை அல்லாஹ் சுபஹானஹுதாலா தேர்ந்து எடுத்தான். இந்த அடிப்படையில், பல அல்குர் ஆன் வசனங்களும், நபி மொழிகளும் இந்த அல்குர் ஆன் சுன்னாவை சஹாபாக்களின் விளக்கத்தில் பின்பற்றும் படி ஏவுவதை காணலாம். 

முக்கியமாக இந்த மன்ஹஜுஸ் சலப், அதாவது சஹாபாக்களின் வழிமுறை பற்றியும், அல்லாஹ்வின் நம்பிக்கை விடயத்தில் அவர்களை போன்று ஈமான் கொள்வது பற்றியும் பல ஆக்கங்கள், எழுத்து மூலமாகவும், ஓடியோக்கள் மூலமாகவும் நாம் இந்த இணையத்தளத்தில் பதிந்து உள்ளோம். 

எமது ஆக்கங்களை நல்ல முறையில் பார்க்காமலும், கேட்காமலும் பொதுவாக இந்த மன்ஹஜுஸ் சலபியாவை விமர்சிக்க பலரும் கிளம்பி விட்டனர். 

அந்த வகையில், சொல்லப்படுகின்ற அவதூறுகள் தான் , அருமை சஹாபாக்களை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், அருமை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவும் மேலாக சஹாபாக்களை பின்பற்ற சொல்கிறார்கள், சஹாபாக்கள், இமாம்கள் மனிதன் என்ற ரீதியில் விட்ட தப்பு தவறுகளையும் பின்பற்ற சொல்கிறார்கள், கண்மூடித் தனமாக கிபாருள் உலமாக்களை தான் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் என்று பல அபாண்டங்களை எம்மீது சுமத்தி வருகிறார்கள். 

இவைகள் அனைத்தும் பச்சை பொய்களாகும். இவ்வாறு நாம் ஒரு போதும் சொன்னதில்லை. இவ்வாறு நாம் சொன்ன எந்தவொரு விடயத்தையும் இவர்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியதும் இல்லை. இத்தனை அபாண்டங்களையும் மொட்டையாக தான் கூறி வருகிறார்கள். 

இந்த வரிசையில், அடியெடுத்து வைத்துள்ளவர் தான் அன்சார் அக்கரைப்பற்று என்றும் சொல்லும் மௌலவி அன்சார் தப்லீகி. இவர் பல இடங்களில் இந்த மன்ஹஜுஸ் சலபியாவை பற்றி விமர்சித்தாலும் , இப்பொழுதுதான் இவரது விமர்சனம் வீடியோவாக வெளிவந்து உள்ளது. 

இவரது விமர்சனத்துக்கு முன்னர் இவரைப்பற்றி , இவரது மார்க்க கல்வி தகைமை பற்றி சில விடயங்களை பார்ப்போம்.

இவர் ஆரம்பத்தில், தப்லீக் என்ற வழிகேடான இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டு பின்னர் அது வழிகேடு என்று விளங்கி வெளியே வந்து அல்குர் ஆன் சுன்னா என்று கோஷம் போடும் மற்ற வழிகேடான ஜமா அத் ஆன பல தவ்ஹீத் ஜமா அத் அமைப்புகளில் சங்கமித்தார். 

தானாகவே விளங்கிய , தனக்கு சரியென பட்டதை பிரச்சாரமாகவும் இன்று வரை செய்துவருகிறார். எங்கும் யாரிடமும் முறையாக தவ்ஹீதையோ, அதன் கொள்கை வழிமுறைகளையோ படித்ததில்லை. இவர் மௌலவியாக இருப்பது இதற்கு நல்ல அனுகூலமாக ஆனது. 

இவரில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், இவரிடம் அரபி மற்றும் பாடங்களை கற்றவர் தான் அடுத்த வழிகேடர் ஆயுர் வேத மருத்துவர் ரயிசுத்தீன் ஆவார். 

இந்த மருத்துவர், இந்த சஹாபா விளக்கத்தை விமர்சிக்க முற்பட்டு, அருமை சஹாபாக்கள் மனிதன் ரீதியில் விட்ட தவறுகளை சேகரித்து கூறி திரிந்தார். 

இன்னும் இந்த மருத்துவரும் ஒரு பிரச்சாரகராக இன்றும் ஈடுபட்டு வருகிறார். இந்த ரயித்தீன் மருத்துவர் இஸ்லாமிய வரலாறில் நேர்வழி பெற்ற இமாம் என்று போற்றப்படுகின்ற இமாம் பர்பஹாரி போன்றவரை சஹாபாக்கள் விடயத்தில் எல்லை மீறியவர்கள் என்று விமர்சித்தார். இவர்கள் தான் இந்த சீடனும் குருவும். 

இந்த வகையில் , ரயிசுத்தீனின் குருவானா அன்சார் அக்கரைப்பற்று அண்மையில் , கிபாருள் உலமாக்களையும் சலபுகளையுமா பின்பற்ற வேண்டும் ? என்ற தலைப்பில் ஒரு உரையாற்றியுள்ளார். இந்த உரையில் , அவரது விமர்சனங்களை பின்வருமாறு சுருக்கமாக காணலாம். 
  • 1 வயதில் மூத்த உலமாக்களை தான் பின்பற்ற வேண்டும் என்று இந்த சலபி கொள்கை கொண்டவர்கள் கூறுகிறார்கள். 
  • 2 சஹாபாக்களை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். 
  • 3 மூத்த உலமாக்கள் மத்தியில் அநேக கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன . எனவே, யாரை பின்பற்றுவது ? 
  • 4 சஹாபாக்கள் மத்தியில் அனேக கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன . எனவே யாரை பின்பற்றுவது ? 
  • 5 அல்லாஹ் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தான் பின்பற்றும் படி கூறுகிறான். எனவே, யார் சரியானதை சொல்கிறார்களோ என்று நமது சிந்தனையால் விளங்கி சரியானதை பின்பற்ற வேண்டும். 
  • 6 எனவே, அல்லாஹ் நமக்கும் சரியானதை தெரிந்து எடுக்கும் அறிவை தந்து உள்ளான். அந்த அடிப்படையில் அல்குர் ஆன் சுன்னாவில் சரியானதை பின்பற்ற வேண்டும்.


பதில் ---- அக்கரைப்பற்று அன்சார் மௌலவியும் சலபி வழிமுறை பற்றி அவர் செய்த விமர்சனத்துக்கு பதிலும்