[ஹிஸ்பியூன் மஸ்ஜித் உத்மான்]
 இவர்களில் யாரும் ஸலபிகளின் பெயரில் தெளிவில் மயக்கத்தினை ஊற்றினாலும் நாம் அதனால் மாறிவிட முடியாது. ஸலபியின் பெயரை சுமந்த இவர்கள் வெறுமனே இயக்கவாதிகள்தான் என்பதை நாம் உறுதியாக கல்வியின் அடிப்படையில் கூறமுடியும். 

இவர்களின் இந்த மயக்கம்தான் இன்று மக்கள் மத்தியில் ஸலபி தஃவா தலைதூக்க முடியாமைக்காண காரணமாகும். இவர்கள் குழப்பமான கருத்துக்களை ஸலபி என்ற பெயரில் சமூகத்தினுல் வளர்க்கிறார்கள். 

இவர்களுடைய இந்த விளையாட்டு ஒரு பயங்கரமானதொரு விளையாட்டாகும்.  ஏனென்றால், இதில் சிக்குபவர்கள் அனேகமாக தூய்மையான மார்க்கத்தைத் தேடும் சகோதரர்கள்தான். ஏனென்றால், அவர்களின் பார்வையில் இவர்கள் ஸலபிகளாகத் தொன்றுவதால் இலகுவாகச் சிக்கிவிடுகிறார்கள். ஸலபியின் போர்வையில் செயற்படுபவர்களின் மயக்கமான வலையில் சத்தியத்தையும் தூய்மையான மார்க்கத்தையும் நேசிப்பவர்களும் தேடுபவர்களும் சிக்குவதென்பது சாத்தியமற்றது.  

 எனவேதான் ஸலபியின் பெயரில் ஆடுகின்ற இந்த ஆட்டம் மிகவும் பயங்கரமானதாகும். சத்தியத்தை நேசிப்பவர்களையும் தூய்மையான மார்க்கத்தைத் தேடுபவர்களையும் மயக்கத்திலிருந்கும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. இதுவே நான் உங்கள்முன் எத்திவைக்க விரும்பியதாகும்.  ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் சவூதி அரேபியாவில் வாழுகின்ற காலத்தில் இலங்கைக்கு இடை இடையே விஜயம் செய்வார்.  அந்த காலங்கள் தான் இலங்கையில் தூய்மையான  ஸலபி தஃவா வித்திட்ட காலங்கள் ஆகும். இந்த காலங்களில் ஷேக் யஹ்யா சில்மியின் பயான் நிகழ்ச்சிகளை தற்போதைய அல் ஹிதாயா நிறுவனத்தின் 

ஆரம்பகர்த்தாகலாக இருந்தவர்களுடைய வீடுகளில் ஏற்பாடு செய்தனர். 


ஷேக் யஹ்யா சில்மியின் ஆரம்ப தஃவா முயற்சிக்கு களம் அமைத்து கொடுத்தனர். ஷேக் யஹ்யா சில்மி அவர்களும் இவர்களிடம் நல்லதை எதிர் பார்த்தவராக இவர்களின் ஊடாக தனது சேவையை தொடர்ந்தார். 

இந்த ஸலபி தஃவாவை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு காரியாலயம் அவசியம் என உணர்ந்து அவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.


ஆனால் அவர்கள் அப்போது அதனை நிராகரித்தார்கள். ஷேக் யஹ்யா சில்மியோ அது தேவை என்பதை நன்கு உணர்ந்து இருந்தார்.  இப்படியிருக்கையில் அவருக்கு  தெரிய வந்தது ,  இவர்கள் ஒரு மவ்லவியை சம்பளத்திற்கு அமர்த்தி,  தஃவா காரியங்களை 

கொண்டு செல்ல ஒரு காரியாலம் அமைத்துக் கொண்டார்கள் என்பதாக. இன்னும் அந்த காரியாலயத்தில் ஷேக் யஹ்யா சில்மியின் பயான் நிகழ்ச்சியின் பதிவுகளும் , அவரது தஃவா  விடயங்களும் காட்சிப்படுத்தி வைத்திருந்தார்கள். இவர்களது இந்த செயற்பாடுகளை நல்லதாக கருதி ஸலபி தஃவாவை இன்னும் முன்னேற்றுவோம் என்ற எண்ணத்தில்  ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் தங்களது பங்களிப்பை இவர்களது காரியாலத்தின் ஊடாக மார்க்க விளக்க வகுப்புகளும் பயான் நிகழ்ச்சிகளும் நடாத்தி, செய்தார்கள். 


இப்படியிருக்கையில் , ஷேக் அவர்கள் பலகத்துரையில் தமிழிலில்  ஷஹீஹுல் புஹாரி வகுப்பெடுப்பதை அறிந்து , கொழும்பில் அவர்களது காரியாலயத்தில் ஆங்கிலத்தில்  எடுக்குமாறு இவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டு வகுப்பு நடாத்தப்பட்டது. வகுப்பு நல்ல முறையில் நடந்துக் கொண்டு செல்ல , நிறைய மக்கள் கலந்து பயன் பெற ஆரம்பித்தவுடன் இவர்களது காரியாலயம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய தொடங்கியது. 


அத்தோடு தஃவாவில் இவர்களது கை மேலோங்க ஆரம்பித்தது. இவர்களும் மக்களுக்கு தொலைபேசி மூலம் மார்க்க விடயங்களுக்கு பதில் அளிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஸலபி தஃவாவிற்கு நடக்கும் இந்த பாதிப்பை உணர்ந்த ஷேக் யஹ்யா அவர்கள், அவர்களுக்கு இந்த செயல்களில் ஈடுபட வேண்டாம் என உபதேசித்தார்கள். ஏனெனில் இந்த தஃவா , இல்மின் அடிப்படையில் எழுப்பப்பட்டதாகும். மார்க்கத்தை கற்காத, அரபி தெரியாத  இந்த மக்கள் தஃவா விடயங்களை  கையாள்வது இந்த தஃவாவிற்கு செய்யும் துரோகம் ஆகும்.. ......


இவ்வாறு அன்று இவர்கள் ஸலபி தஃவாவில் தான்தோன்றித் தனமாக நடக்க ஆரம்பித்து இன்றுவரை அதே பாதையில் நடை போடுகிறார்கள். தடவைக்கு  தடவை இவர்களுக்கு உபதேசங்கள் வைக்கப்பட்டன. எந்தப் பலனும் இல்லை. இன்னும் இன்னும் மும்முரமாக ஈடுபட தொடங்கியது மற்றுமின்றி ஷேக் யஹ்யா சில்மி மீதும் அவரது தஃவாவின் மீதும் அபாண்டங்களையும் பழிகளையும் சுமத்தி , எந்த எந்த வகையில் எல்லாம் அவரிடம் மக்கள் பயன் பெறுவதை தடுக்க முடியுமோ , அந்த அந்த வகையில் மக்கள் அவரிடம் செல்வதை தடுத்தார்கள். இலங்கையில் உள்ள பல வழிகெட்ட இயக்கங்களுடனும் அதன் தாயிகளுடனும் ஒன்றர கலந்து செயல்பட்டார்கள். 


பின்னர் , உலமாகளுடன் நாங்கள் தொடர்ப்பு கொண்டு செயல் படுகிறோம் என்று கூறி இன்னொரு வியாபாரியின் அனுசரணையில் ஒரு பள்ளிவாசலை பொறுப்பெடுத்து, கூலிக்கு அமர்த்திய மௌலவவிகளைக்  கொண்டு நடத்தினார்கள். அங்கே அந்த மிம்பரில் சில வழிகேடர்களை எச்சரிக்கை செய்ய, அந்த வழிகேடர்களின்  பக்தர்கள் இவர்களிடம் மறுத்து பேச , இவர்கள் பதில் சொல்ல முடியாமலும் , அவர்களை கையாள தெரியாமலும் திணற , பள்ளிவாசலை கொடுத்த அனுசரணை வியாபாரி தலையிட , பிரச்சனைகள் முற்றி பள்ளிவாயலை அந்த வழிகேடர்களின் கையில் விட்டு விட்டு வெளியேறி விட்டார்கள். இப்போது இவர்கள் மத்தியிலும் பிணக்குகள் ஏற்பட்டு பிரிந்து தனித் தனி குழுக்களாக செயல்படுகிறார்கள்.   • 28 Mar 2014  அல் இக்னா - ஷேக் முஹம்மத் பின் ஹாதி ஹபிதஹுல்லாஹ் வின் கிதாப் பின்பற்றுவதில் வகுப்பு  1   2   3  
  • 13 Apr 2014 அபூகதீஜா வின் பேச்சிக்கு ஒரு மறுப்பு  உலமாக்களை கண்ணியப்படுத்துவதும் அஹுளுள் ஹதீஸின் நடுநிலையான போக்கும்