[அகார் முஹம்மத்]


அகார் முஹம்மத் அவர்களின் ஆரம்ப பயிற்சிக் களமாக தப்லீக் ஜமாஅத் அமைந்தது. எனினும் சில வருடங்களுக்குப் பின் அதாவது 1970 களின் பிற்பகுதியில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் இயக்கமான ஜம்இய்யதுத் தலபாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளார் 


1980 களின் ஆரம்பம் முதல், வழிகேடர் மௌதூதி தோற்றுவித்த ஜமாஅத்தே இஸ்லாமியில் இணைந்தார். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் ஷுரா உறுப்பினராக இருக்கும் அவருக்கு  தப்லீக் ஜமாஅத்துடனும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. 


இஸ்லாத்தின் நடுநிலை சிந்தனையைக் கடைபிடிகிறேன் என்று வழிகெட்ட கொள்கைகளை கொண்ட எல்லா இயக்கங்களோடும், மக்களோடும் பணிபுரிவதையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகிறார்.


அல்லாஹ் சுபஹானஹுதாலா , அவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்று சொல்ல இவரோ சமரசம் என்ற பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது இஸ்லாத்தை ஒரு மதமாக அன்றி இன்றைய உலகுக்குத் தேவையான மாற்று நாகரிமாக அதனை நோக்குவது என்று அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு ஒரு புதிய குப்ரான வரைவிலக்கணம் கொடுக்கிறார்.
இன்னும் கூறுகிறார் " நம் மத்தியில்; நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர்கள் குறைவு. அதிலும் இஸ்லாமிய கலைஞர்கள் மிகவும் அரிது.  

இயல், இசை, நாடகம்,சினிமா, தொடர் நாடகம் போன்ற காட்சிப் படுத்தல் ஊடகங்களின் மூலம் இஸ்லாத்தின் போதனைகளை வரலாற்று நாயகர்களை காட்சிப் படுத்தி உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் 

என்றும் கூறுகிறார். 
இன்னும் கூறுகிறார் ஈரானிய சினிமா சற்று வித்தியாசமானது. சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் ஈரானிய சினிமா சகலரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. 
அது முஸ்லிம் கலைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரி என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. Runner, The children of Heaven, The color of Paradise  போன்ற ஈரானியத் திரைப்படங்களை இங்கு சிறப்பித்துக் கூற முடியும் " என்றும் கூறுகிறார். 

இவ்வாறு தஃவாவை கொச்சைப்படுத்தி யூத நசாராக்களின் வழிமுறைகளை மார்க்கத்தின் வழிமுறையாக , வழிகெட்ட ஷீயாக்களோடு ஒப்பிட்டு கையாளுமாறு அறிவுரை அளிக்கிறார். இஸ்லாமிய அழைப்புப்பணியை நபி வழியை விட்டும் திசை திருப்பி யூத கிறிஸ்தவ வழிமுறையாக்கி விட்டார்.  

மேலும் ,  மௌதூதியின் வழிகேடான கொள்கையான ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை மறுக்கும் போக்கை அகார் முஹம்மத் அவர்கள் பின்வருமாறு தற்காத்து பேசுகிறார்,


 " எனவே,  ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை மறுக்கும் போக்கு  தொடர்பான மௌதூதியின் நிலைப்பாடுகள் முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த முடிவுகளுக்கு முரணானதாக அமையவில்லை என்பது மாத்திரமல்ல அவரது கருத்துக்களுக்குப் பின்னால் முற்கால, பிற்கால அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதனையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது. 
இந்தவகையில் இத்துறையில் மௌலானாவின் அபிப்பிராயங்களை வைத்து அவரை நிராகரிப்பது ஒரு பெரும் அறிஞர் சமூகத்தையே புறக்கணிப்பதாக அமைந்துவிடும். "  
அதாவது 

 அகார் முஹம்மத் 

கூறுகிறார்
ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை மறுக்கும் போக்குக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் முன்வைக்காது வெறுமனே முற்கால பிற்கால இதே போன்ற அறிஞர்களும் இருப்பதால், மௌதூதியை புறக்கணிப்பதால் ஒரு பெரும் அறிஞர் சமூகத்தையே மறுத்ததாக அமையும் என்று இவர் கூறுவது எப்படியென்றால் வழிகேடுகளுக்கு முற்காலத்திலும் பிற்காலத்திலும் வழிகேடர்கள் இருந்துவிட்டால் இந்த வழிகேடர்களை புறகணிக்க முடியாததாகும் என்பதேயாகும்.
இன்னும், மௌதூதியின் வழிகேடான கொள்கையான ஸஹாபாக்களைச் சாடும் போக்கான  குறிப்பாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை இழிவுபடுத்தியது  போன்ற வழிகேடான கொள்கைக்கு அகார் முஹம்மத் அவர்கள் பின்வருமாறு தற்காத்து பேசுகிறார்,
" உண்மையில் மௌலானா எந்தவொரு ஸஹாபியையும் நபித்தோழர் என்ற வகையில் குறை கண்டதாகத் தெரியவில்லை. மாறாக ஒரு வரலாற்றாசிரியராக நின்று ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் என்ற வகையில் ஸஹாபாக்களில் சிலரை விமர்சித்துள்ளார் என்பதே உண்மையாகும். 
இவ்விடயத்தில் மௌலானா ஏனைய வரலாற்றாசிரியர்களிலிருந்து வேறுபடுபவராகவும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றை ஆராயப் புகுந்த பலரும் ஸஹாபாக்கள் பலரை விமர்சித்துள்ளதைக் காணலாம். 
உதாரணமாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான கலாநிதி அஹ்மத் ஷலபி, ஹஸன் இப்றாஹீம் முதலானோரின் நூல்களை எடுத்து நோக்கும்போது இவ்வுண்மையைப் பரிந்துகொள்ள முடியும். தமிழ் மொழியில் வெளிவந்துள்ள இஸ்லாமிய நாகரிகம், வரலாறு தொடர்பான நூல்களிலும் இக்கண்ணோட்டத்தில் பல ஸஹாபாக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும். மௌலானாவை இது விடயத்தில் குறைகூறும் பலர், விமர்சனத்தையும் அவமதித்தலையும் பிரித்து விளங்கிக்கொள்ளவில்லை என்றே கூறல் வேண்டும். " 

அதாவது 
மௌதூதியின் வழிகேடான கொள்கைக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் முன்வைக்காது வெறுமனே,  " இஸ்லாமிய வரலாற்றை ஆராயப் புகுந்த பலரும் ஸஹாபாக்கள் பலரை விமர்சித்துள்ளதைக் காணலாம்.  மௌலானா ஏனைய வரலாற்றாசிரியர்களிலிருந்து வேறுபடுபவராகவும் இல்லை.   பல ஸஹாபாக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும்." 
என்று இவர் கூறுவது எப்படியென்றால் "  பலரும் விமர்சித்துள்ளார்கள் எனவே மௌதூதியும் ஸஹாபாக்கள் பலரை விமர்சித்ததில் பிழையில்லை " என்ற இவரது கூற்று இவரது மார்க்க அறிவை கேள்விக்குறியாக்குகிறது?? 
ஷரியா ஸஹாபாக்களை விமர்சிப்பதை தடைசெய்துள்ளது. அல்லாஹ் பொருந்திக் கொண்டவர்களை , அல்லாஹ் புகழ்ந்தவர்களை மௌதூதி நிந்தித்ததை சரிகண்டு தற்காக்கிறார் என்றால் இவரது வழிகேடுகளுக்கு இதைவிடவும் மேலதிக ஆதாரங்ககள்  தேவை இல்லை.  
அன்சாரிகளை நேசிப்பது ஈமானின் ஒரு அம்சம் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறிய செய்தி புஹாரியில் பதியப்பட்டுள்ளது.. ஈமானில் முந்திவிட்ட சஹாபாக்களுக்காக துவா செய்யும் படி அல் குர் ஆன் ஏவுகிறது.  
இவ்வாறு அவர்களது சிறப்பும் மாண்பும் தெட்டத் தெளிவாக இருக்க , மௌதூதி விமர்சித்ததை வெட்கம் கூச்சம் இல்லாமல் அவமதிக்கவில்லை, விமர்சித்தார் என்று அகார் அவர்கள் கூறுவது, அவருக்கு மௌதூதி மீதிருக்கும் மோக வெறியை, இயக்க வெறியை படம் பிடித்துக்காட்டுகிறது. 
இவர் விடயத்தில் எமது சமூகம் எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.    
அப்படியாயின் நாம் அருமை சஹாபிகளை எவ்வாறு மதிப்பது? ஆம்! அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை  சொல்லும்போது, கேட்கும்போது, எழுதும்போது ‘ரழியல்லாஹு அன்ஹ்’ என்று கூறுவது சிறப்பாகும். 
அவர்களின் நேர்மையை நம்ப வேண்டும். இஸ்லாத்தில் அவர்கள் முந்தியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது சிறப்புக்களைப் பரப்ப வேண்டும். மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். 
அவர்களை வெறுப்பவர்கள், கோபிப்பவர்கள், நிந்திப்பவர்கள், குறைசொல்பவர்கள், நையாண்டிபண்ணுபவர்கள், விமர்சிப்பவர்கள், இழித்துப் பேசுபவர்கள், ஏசுபவர்கள், திட்டுபவர்கள், சபிப்பவர்கள், மட்டு மரியாதையற்ற முறையில் அவர்களைக் கையாளுபவர்கள் போன்றோரை விட்டு நீங்கி இருத்தல் வேண்டும். இவை அஹ்லுஸ் சுன்னா வல்- ஜமா அத்தினரின் நம்பிக்கைக் கோட்பாடான அகீதா  சார்ந்ததாகும்.


சிறப்புமிக்க நபித் தோழர்களை கண்ணியப்படுத்துவது நேசிப்பது என்பது சர்வ சாதாரணமான விடயமன்று. உண்மையில் அது முழுக்க முழுக்க அகீதாவுடன் பின்னிப்பிணைந்தது, இதில் ஏற்படுகின்ற கொஞ்சநஞ்ச அசைவும், ஆட்டமும், தளர்வும் கூட மிகப் பாரதூரமானது. 


ஏனெனில் சஹாபிகள் ஊடாகத்தான் குர்ஆனையும் ஸுன்னாவையும் அப்பழுக்கற்ற முறையில் அணு அணுவாக அப்படியே அல்லாஹ் பாதுகாத்து அடுத்தவர் கையில் தவழச் செய்தான். அவர்களின் முதன்மையில், நேர்மையில், மகிமையில் ஊறு ஏற்படுமென்றால் அது இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கே சந்தேகமின்றி பங்கம் ஏற்படுத்தும்.


கண்ணியமிக்க நபித் தோழர்களை ஏதோ நம்மைப் போன்று சாமானியர்களாக எண்ணுவது, நோக்குவது, கையாளுவது வளர்ந்து, முற்றி அவர்களை தரக்குறைவாக பேசவும், எழுதவும், வாய்க்கு வந்தவாறெல்லாம் தாறுமாறாக விமர்சிக்கவும் இன்று சமூகத்தில் சிலர் தலைப்பட்டுள்ளனர். இப்போக்கு இத்தகையோரது நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டம்காணச் செய்யும்.


சஹாபிகளை வெறுப்பவர் காஃபிர் என இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அறுதியாக, உறுதியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ் கவனத்துக்குரியது.


‘என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! எனக்குப் பின் அவர்களை நீங்கள் இலக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம்! 

எவர் அவர்களை நேசித்தாரோ என்னை நேசிப்பதன் நிமித்தம் அவர் அவர்களை நேசித்தார். மேலும் எவர் அவர்களை வெறுத்தாரோ என்னை வெறுப்பதன் நிமித்தம் அவர் அவர்களை வெறுத்தார். மேலும் எவர் அவர்களை துன்புறுத்தினாரோ திண்ணமாக அவர் என்னை துன்புறுத்தி விட்டார். என்னை எவர் துன்புறுத்தினாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துன்புறுத்தி விட்டார். எவர் அல்லாஹ்வை துன்புறுத்தினாரோ அல்லாஹ் அவரைப் பிடிப்பான்’ 

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்:திர்மிதி).


சஹாபிகளின் சிறப்பு, பெருமையை பறைசாற்றுகின்ற. குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அறிஞர் பெருமக்களின் கூற்றுக்களை அடிக்கடி எமக்கிடையே பிரஸ்தாபிக்க வேண்டும். இவ்வழியில் நம் உள்ளங்களில் அவர்களின் அன்பு பொங்கிப் பிரவகிக்கும், அவர்களின் நேசம் நிரம்பி வழியும். அருமை சஹாபாக்கள் மீதான அன்பை, மரியாதையை, அவர்களின் கண்ணியத்தை, அந்தஸ்தை நமது உள்ளங்களிலே ஊட்டி வளர்த்திட வேண்டும்.


தம்மை, தம்மிடமிருந்தவற்றை அப்படியே இஸ்லாத்துக்காக அர்ப்பணிப்பு செய்த நபித் தோழர்கள், யதார்த்தத்தில் தீனுல் இஸ்லாத்தின் பாதுகாப்பு அரண்கள் , இஸ்லாத்தின் தூண்கள் , அவர்களின் உதிரம் அதன் நீர், அவர்களின் தியாகம் அதன் உரம். மனமார ஏற்போம்! மதிப்போம்! போற்றுவோம்! கண்ணியப்படுத்துவோம்!


النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ.


‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் )


நபித் தோழர்கள், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். எனவேதான் அல்-குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித் தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.