[கூட்டங்களும் அழைப்பாளர்களும்]

முஸ்லிம்  சமுகத்தினுள் இருக்கும் இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைகளை சுமந்தவர்களை முஸ்லிம் சமூகத்தின் முன் 


الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد

வழிகேடுகள் , பொய் புரட்டுகள் பகிரங்கமாக பரப்பப்பட்டால் , அவை பகிரங்கமாவே மறுக்கப்பட்டு ,  பொது மக்களுக்கு  தெளிவை முன்வைப்பது அஹுளுஸ் சுன்னாஹ்வின் வழிமுறை. 

அந்த வகையில் ,ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இந்தியாவுக்கு பாடம் நடத்த சென்றிருந்த போது ,  ஷேக் அவர்களுடைய வகுப்பில் பங்கெடுத்தவர்களிடம் , ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல் மௌலா  அவர்கள் ஒரு ஆலிம் இல்லை. ஒரு மாணவர்தான் என்று ஷேக் அவர்களை பற்றி செய்தி பரப்பப்பட்டது. . 


அதாவது , ஷேக் அவர்களிடம் மக்கள் முனைப்பாக இல்ம் எடுப்பதை , மக்களிடம் ஷேக் அவர்களின் இல்மை கேள்விக் குறியாக்க , ஷேக் அவர்களின் மதிப்பை மக்கள் மத்தியில் குறைத்து , மக்களை ஷேக் அவர்களிடம் இல்ம் பெறுவதில் இருந்து தூரமாக்க இயக்கவாதிகள் வழிகேடர்கள் செய்துவரும் ஒரு தந்திரமாகும். 

இன்னும் இயக்கவாதிகள், இயக்கவாதிகளின் சதிவலையில் சிக்கியவர்கள், இயக்கவாதிகளுடன் தோழமை வைத்திருப்பவர்கள் இப்படியான காரியத்தில் ஈடுபடுவது ஒரு ஆச்சரியம் இல்லை.  

ஏனெனில், ஷேக் ரும்சான் அல் ஹாஜூரி ஹபிதஹுல்லாஹ் அண்மையில் இலங்கை வந்திருந்த போது ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களிடம் இல்ம் பெற வேண்டாம் என்று தம்மாஜ் ஹாஜூரியூன் சொல்வதாகவும் அது பற்றிய நிலைப்பாட்டை பற்றி கேட்கப்பட்டது. 

அப்போது , ஷேக் ரும்சான் அல் ஹாஜரி ஹபிதஹுல்லாஹ் கூறினார்கள்,  

தம்மாஜ் இல்  ஷேக் முக்பில் இப்னு ஹாதி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு பின் அங்கே ஆலிம்கள் இல்லை.  அங்கே மாணவர்கள் தான் இருக்கிறார்கள் மற்றும் ஹாஜூரியூன் களின் பேச்சிக்கு பெறுமதி இல்லை  என்பதையும் சொல்லி, ஷேக் யஹ்யா சில்மியிடம் இல்மை பெற்றுக் கொள்ளும் படியும் அடையாளம்  படுத்தினார். 

எனவே, ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ்விடம் இல்ம் பெறுவதில் , ஷேக் அவர்களின் இல்ம்  பரப்பப்படுவதில் இந்த இயக்கவாதிகளின் காழ்ப்புணர்ச்சி இருப்பதை வெளிப்படையாகவே நாம் அறிந்து இருக்கிறோம்.  

அந்த வகையில் தான் ஷேக் யஹ்யா சில்மி அவர்களை இழிவாக்க ஒரு முயற்சி செய்வது  அறியப்பட்டு, எங்கள் சகோதரர், அகில இந்திய ஸலப் கவுன்சில் தலைவர் அபூ உபைதா ஜலாலுத்தீன் யூசுப்  அவர்கள் , ஷேக் யஹ்யா அவர்கள் ஒரு ஆலிம் , இல்மை சுமந்தவர் என்பதை பற்றி உலமாக்கள் சொன்ன வார்த்தையின் ஊடாகவே விளக்குகிறார். அல்லாஹ் சகோதரர் ஜலால் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக.  

"ஹமலதுல் இல்ம்" என்று ஷேக் ரபி இப்னு ஹாதி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் ஷேக் யஹ்ய சில்மி  ஹபிதஹுல்லாஹ்வுக்கு சொல்வதும் , ஷேக் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல்  ஹபிதஹுல்லாஹ் அவர்கள் , ஷேக் யஹ்யா சில்மி அவர்களை " எங்கள் சகோதரர், ஷேக், யஹ்யா சில்மி ,  அஹுளுஸ் சுன்னாஹ் உலமாக்களில் ஒருவர்" என்று விளித்து சொல்வது இன்னும் ஏனைய உலமாக்கள்  ஷேக் யஹ்யா சில்மி அவர்களை பற்றி சொல்பவைகளை தொகுத்து விளக்குகிறார்.  கேட்க
இன்று பிரச்சாரப் பணியில களமிறங்கியிருக்கும் கூட்டங்களின் முறையற்ற  அனுகு முறையாலும்  அழைப்புப் பணியின்  பெயரில் செய்யப்படுகின்ற அநியாயங்களாலும் உண்மையான குர்ஆனின் வெளிச்சம் வெளிவரவில்லை.  அதேபோன்று உண்மையான ஸுன்னா நடவடிக்கைக்குக் கொண்டு வரப்படவுமில்லை.  

மாறாக  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் சொந்தக் கருத்துக்களும்  வழிகேடான  கொள்கைகளும் ஷிர்க்களும், குப்ர்களும், பித்அத்களும் பரவலாகப் பரந்திருப்பதை நாம்  காண்கிறோம்.  

எனவே, இந்தக் களங்கங்களைத் துடைக்க வேண்டுமென்ற  நோக்கத்துடனும் இன்னும் யாரெல்லாம் சத்தியமான மார்க்கத்தை விளங்கி அதற்குக் கைகொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு  வழிகாட்டுவதற்கென்றும் அழைப்புப் பணியில் நபிமார்களின்  வழிமுறைகளை முன்வைக்க நாம் ஆசைப்படுகிறோம்.  

இதனை மக்கள் புரிந்து கொள்வதன் மூலம் அதனடிப்படையில் செயற்படும் மக்களாக மாறி, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த நபிமார்களின் அழைப்புப் பணிக்காக தோழர்களாக மாறுவதற்கு  முயற்சி செய்ய வேண்டுமென்றும் நாம் ஆசைப்படுகிறோம்..மேலும்.

கிரேக்க தர்க்ககலை, தத்துவவியல் முஸ்லிம்களிடம் நுழைய ஆரம்பித்தபோது இஸ்லாமியக் கொள்கைகளை கிரேக்கத் தத்துவங்களோடு ஒப்பிட ஆரம்பித்தார்கள். இதனால் முஸ்லிம்களுக்கிடையில் பல பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. 

இது இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கொள்கையை நிலை நாட்டுவதற்காக விவாதங்கள் புரிந்தார்கள். தூய்மையான இஸ்லாமியக் கொள்கையில் களங்கம் ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு பிரிவினரும் குர்ஆன், ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்றபோது, தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். அகீதா தொடர்பான பல அம்சங்களை மறுத்தும், விமர்சித்தும் பல குழுக்கள் தோற்றம் பெற்றன.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய முக்கிய பிரிவுகள்

ஷீயா --- அப்துல்லாஹ் பின் ஷபா. இவன் யெமன் நாட்டைச் சேர்ந்த யூதனாவான். இவன் தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், நபி சல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை மிகவும் நேசிக்கக்கூடியவனென்றும். நபி சல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு தகுதியானவர் அலிரலியல்லாஹு அன்ஹு தான் என தவ்ராத்தில் இருப்பதாகக் கூறி சமுதாயத்தில் பிளவை, குழப்பத்தை உண்டு பண்ணினான். பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹு  அவர்களையே நபி என்றும் மேலும், அவர்களையே அல்லாஹ் என்றும் கூறினான்.


வாரிஜ் ---  பெரும் பாவம் செய்பவர் காஃபிர் ஆவார், அவருடைய உயிரும், உடமையும் ஹலால் ஆகும். 

முஃதஸிலா --- அல்லாஹ்வின் பெயர் பண்புகளில் பெயர்களை ஏற்று பண்புகளை றுப்பவர்கள். மார்க்கத்தில் அறிவிப்பை ‌விட புத்திக்கே முதலிடம் கொடுப்பார்கள். பெரும்பாவம் செய்தவன் மூஃமினும் இல்லை, காஃபிரும் இல்லை. மாறாக இரண்டுக்கும் நடுவில் இருக்கிறான். சஹபாக்களில் ஒரு பிரிவினர் பாவிகள் என்று கூறினார்கள்.குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் 

கூறினார்கள் 

கதரிய்யா --- விதியை மறுப்பவர்கள் ஒரு செயல் நடப்பதற்கு முன் அல்லாஹ் அதுபற்றி அறியமுடியாது. மனிதன் அனைத்து செயல்களையும் சுயமாகவே செய்கிறான்(விதி ஏதும் இல்லை)

ஜஹமிய்யா --- ஜஹம் பின் ஸஃப்வான் (கொள்கை). அல்லாஹ்வின் பெயர் பண்புகளை றுப்பவர்கள்.

முர்ஜியா ---
ஈமான் என்பது அல்லாஹ்வை அறிவதுமட்டுமே. ஈமானுக்கும், செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~