[உசூளுஸ் ஸுன்னா,ஷேக் நாஸர் பகீஹ்]
தமிழ் மொழியில் இமாம் அஹமத் இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ்வின் கிதாப் உசூளுஸ் ஸுன்னா முன் வைக்கப்படுகிறது.

இமாம் அஹமத் இப்னு ஹன்பல் அஷ் ஷெய்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்களின் சிறு நூல் உசூளுஸ் ஸுன்னா, ஸுன்னா என்றால் என்ன என்ற வரைவிலக்கனத்துடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதால் இந்த சிறு நூல் உசூளுஸ் ஸுன்னா என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.


இதற்கு உள்ள இன்னுமொரு பெயர் தான் ரிசாலது அப்தூஸ் இப்னு மாலிக் அல் அத்தார். ஏனெனில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான அப்தூஸ் இப்னு மாலில் அல் அத்தார் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் இமாம் அஹமத் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் இருந்து நேரடியாக கேட்டு அறிவிக்கிறார்.


இதனாலேயே இந்த சிறு நூலுக்கு ரிசாலது அப்தூஸ் இப்னு மாலிக் அல் அத்தார் என்ற பெயரை கொண்டு அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஆ அழைக்கிறார்கள். இந்த நூல் வெவ்வேறான மூன்று அறிவிப்பாளர் தொடருடன் மூன்று பிரதிகளாக கிதாபுகளில் பதியப்பட்டு உள்ளது.


அவையாவன 

  • 1 . இமாம் அபுல் காசிம் ஹிபதுல்லாஹ் அல் லாலக்காயி ரஹீமஹுல்லாஹ் அவர்களின் கிதாப் ஷரஹ் உசூல் இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ.
  • 2 . இமாம் அபூ யஹ்லா ரஹீமஹுல்லாஹ் அவர்களின் கிதாப் தபகாதுள் ஹனாபிலா
  • 3 . இமாம் நாசிருத்தின் அல் பானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் லாஹிரியா புராதன நூற்களை கொண்ட வாசிக சாலையில் இருந்து இன்னுமொரு அறிவிப்பாளர் தொடரில் அறிவித்து உள்ளார்கள் .

இந்த கிதாபின் முதல் பாடமே எமது
பிரச்சாரத்தின் கொள்கையை எடுத்து வைக்கிறது. அதாவது, எவ்வாறு முஸ்லிம்கள் அவர்களது மார்கத்தை பின்பற்றும் பொது நடந்துக் கொள்ள வேண்டும் இன்னும்,ஆதாரங்களுடன் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், குர் ஆன் ஸுன்னா ஆகியவற்றுடன் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படைகளை , அஸ்திவாரங்களை இமாம் அஹ்மத் ரஹீமஹுல்லாஹ் ஆரம்பமாகவே எடுத்துக் காட்டுகிறார்.


இந்த அடிப்படைகளை எல்லா காலங்களிலும் வாழ்ந்த இமாம்கள் தெளிவு காட்டியதாகவே இருக்கிறது. ஏனெனில், முஸ்லிம் சமுகம் ஆதாரங்களை தவறாக பின்பற்றாமல் இருப்பதற்கும் , மாற்றமாக தரமாக பின்பற்ற
வேண்டும் என்பதற்காகவே ஆகும்.


ஏனெனில், குர் ஆனின் ஆயத்துக்களையும் ஹதீசுகளையும் ஒரு மனிதன் எடுத்து செயல்படும் போது , எந்த ஆயத்தை எந்த ஆயத்துடன் சம்பந்தமாக்கி விளங்க வேண்டும் என்பதனையும், எந்த ஹதீஸை மற்ற எந்த ஹதீசுகளுடன் சேர்த்து விளங்க வேண்டும் என்பதனையும், எந்த ஆயத்தை எந்த ஹதீசுடன் சம்பந்தமாக்கி விளங்க வேண்டும் என்பதனையும் விளங்கி வைத்து இருப்பது கல்வியின் ஒரு அடிப்படையாகும்.


மாற்றமாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வழி முறையை கையாண்டு விட்டான் என்றால் அதே குர் ஆனிலும் சுன்னாவிலும்
பல வழி முறைகளை கையாள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.


இஸ்லாமிய உம்மத் ஆயத்துகளையும் ஹதீசுகளையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாகளும் செயல்
படுத்தி பின்பற்றிய பிரகாரம் பின்பற்றினார்களே அப்போதெல்லாம் அவர்களின் கொள்கை ஒன்றாக இருந்தது. இன்னும், அதன் சட்டங்கள் ஒன்றாக இருந்தது. இன்னும், அவர்களுடைய நம்பிக்கைகள் ஒன்றாக இருந்தது. மக்களுக்கு ஒற்றுமையும், வெற்றியும் அல்லாஹ்வின் உதவியும் வந்தடைவதற்கு தகுதியானதாக இருந்தது.


ஏனென்றால் எல்லோரும் ஒரே ஆயத்தை ஒரே நோக்கத்துடன் தான்
பின்பற்றினார்கள். ஒரே விளக்கத்துடன் முன்வைத்தார்கள். ஒரே ஹதீசுகளை ஒரே விளக்கத்துடனும் நோக்கத்துடனும் பின்பற்றினார்கள்.


இவ்வாறு ஆயத்துககளையும் ஹதீசுகளையும் எவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் சம்பந்தம் ஆக்கினார்களே அதே வழி முறையில் சம்பந்தமாக்கி இருந்ததனால் இஸ்லாமிய கொள்கையில் வேறுபாடு இருக்க வில்லை.
விளக்கங்களில் வேறுபாடு இருக்க வில்லை. வழிமுறையில் வேறுபாடு இருக்கவில்லை. நம்பிக்கையில் ,எந்த பாடங்களை எடுத்தாலும் ஒரே நம்பிக்கையில் இஸ்லாமிய உம்மத் இருந்தது.


எப்போது ஆதாரங்கள் விடயத்தில், அதாவது ஆயத்துகளையும் ஹதீசுகளையும் சம்பந்தமாக்கும் விடயத்தில் ஒவ்வொருவரும்
தனக்கு தேவை மாதிரி கையாள ஆரம்பித்து விட்டார்களே அப்போது நம்பிக்கைகள் மாறிவிட்டது. கொள்கைகள் மாறி விட்டது. அல்லாஹ்வுடைய குர் ஆனின் விளக்கங்கள் மாறிவிட்டது. நபி மொழிகளின் விளக்கங்கள் மாறி விட்டது. ஒவ்வொருவருக்கு தெரிந்ததும் , சரியென பட்டதும், கருதியதும் தான் மார்கமானதே தவிர இறக்கப்பட்ட மார்க்கம் எந்த அடிப்படையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும் சஹாபாக்களும் பின்பற்றினார்களே அந்த அடிச்சுவடுகளை மறந்து விட்டார்கள்.


ஒவ்வொருவரும் தனக்கு பட்டதை பேச வந்து விட்டான். தான் தெரிந்ததை சொல்ல வந்து விட்டான். அதனால் ஆதாரங்களை நிரூபிப்பதில் அவனது கெட்டித்தனங்களை காட்டினான். இதனால், தர்கத்தை முன்வைத்தான். வாதத்தை முன் வைத்தான். அவனுடைய எல்லா குதர்க்க வாதங்களையும் முன்வைத்து இது தான் தரமான
மார்க்க ஆதாரம் என்று நூற்களை எழுதினான் விளக்கங்களை சுமந்தான்.


ஆனால்,ஆரம்பகால வரலாறை எடுத்து பார்ப்போமானால் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹி இறங்குகிறது ,
அதாவது ஏழு வானத்தின் மேலிருந்து வஹி இறங்குகிறது. இதனை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூமியில் நிலை நாட்டுகிறார்கள்.


அதன்போது, எந்த சஹாபாக்களும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளக்கத்திற்கு முரணாக விளக்கம் சுமந்ததே கிடையாது. மாறாக நபியின் அதே விளக்கங்களை செயல் படுத்தினார்கள். 


அதே போன்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும் கருத்துக்களில் சஹாபாகளில் யாரும் கூட்டங்களாக , பிரிவுகளாக பிரிந்து இருக்கவில்லை.


மாறாக ஒரே கொள்கை , ஒரே வழி முறை , ஒரு பிஃஹ் சட்டம் என்று ஒரே இஸ்லாமிய வாழ்க்கை வாழ்ந்ததாக இஸ்லாமிய உம்மத் இருந்தது.  • வகுப்பு 1 2 3 4 5 6 7 8 9 10 11   மீட்டல் 1 2 

  • வகுப்பு தொடர்ச்சி மேலதிக விளக்கங்கள் 1 2 3
  • மீட்டல் வகுப்பு தொடர்ச்சி மேலதிக விளக்கங்கள் 1 2 3நடைபெற்ற வகுப்பு 
  1  2  3  4  5  6  7
டிசம்பர் 27 முதல் 31
வரை
 8 9 10 11 12 13  14
உஸூலுஸ் ஸுன்னாஹ் பெப்ரவரி 2013 வகுப்பு

வகுப்பு 1 சஹாபாக்கள் விடயத்தில் உள்ளத்தையும் நாவையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளல்.
வகுப்பு 2 நபிக்கு பின்னால் வந்த சிறப்பான மக்களும்  அவர்களுக்கு பின்னால் வரும்  சஹாபாக்கள் அல்லாத  மக்கள்  பற்றிய கூலிகளும் அதுபற்றிய தவறானா  புரிதல்களும் தெளிவுகளும்
வகுப்பு 3 ஸஹாபி என்பதன் வரைவிலக்கணமும்  அவர்கள் விளக்கம் ,செயல்பாடுகள், தீர்ப்புகள் சம்பந்தமான விளக்கங்களும் தெளிவுகளும்
வகுப்பு 4 ஆட்சியாளர் அதிகாரம் பெற்றவர்கள் பொறுப்பானவர்களுக்கு செவி தாழ்த்துவதும் கீழ் படிவதும் ஷேக் ரபீ அவர்களின் கிதாபில் இருந்து விளக்கங்கள்
வகுப்பு 5 ஆட்சியாளரிற்கும் அதிகாரம் பெற்றவர்களின் தவறுகளில் , முரண்பாடுகளில் நடந்துக் கொள்ளும் முறைகள் , குப்ர் நாட்டில் இஸ்லாமிய அதிகாரத்தை செயல்படுத்த கையாள வேண்டிய வழிமுறைகளும்
வகுப்பு 6 ஆட்சியாளர்களுக்கும் பொறுப்பானவர்களுக்கும் உபதேசங்களும் திருத்தல் நடவடிக்கையின்  வழிமுறைகளும்உஸூலுஸ் ஸுன்னாஹ் மார்ச் 2013 வகுப்பு

ஜிஹாத் என்றால் என்ன என்பதும் அதன் வகைகளும் அது பற்றிய சரியான வியாக்கியானங்களும் நப்ஸுடன் போராடுவது தான்  முதன்மையானது என்பதும்
ஜிஹாதின் வகைகளும், அதன் படித்தரங்களும்  அதுபற்றிய இஸ்லாமிய சட்டங்களும்
ஜிஹாதும் அதனை நிலை நாட்டும் வழிமுறைகளும் அதன் தெளிவான விளக்கங்களும்


உஸூலுஸ் ஸுன்னாஹ் வகுப்பு May 24 - 29
அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படிவது வகுப்பு 1
அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படிவது வகுப்பு 2
அதிகாரம் பெற்றவர்களின் உரிமைகளும் அதன் எல்லைகளும் பொது மக்களின் கடமைகளும் வகுப்பு 3
பலாத்காரமாகவோ , அங்கிகரிக்கப்பட்ட விதத்திலோ ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாளர்க்கு கட்டுப்படுதல் வகுப்பு 4
பலாத்காரமாகவோ , அங்கிகரிக்கப்பட்ட விதத்திலோ ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாளர்க்கு கட்டுப்படுதல் தொடர் வகுப்பு 5
ஒருவரின் உயிர் உடமை சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும் அதன் எல்லைகளும் விளக்கங்களும்  வகுப்பு 6
ஒருவரை நல்லவர் கெட்டவர் சொர்க்கவாசி நரகவாசி என்று உலகத்தில் தீர்ப்பு சொல்ல முடியாது என்பதும் அது பற்றிய விளக்கங்களும் வகுப்பு 7
நிபாஃ தன்மைகளும் அதன் விளக்கங்களும் வகுப்பு 8
நிபாஃ தன்மைகளும் அதன் விளக்கங்களும் மேலதிக விளக்கங்களும் வகுப்பு 9
தனி நபர் மீது தீர்ப்பு சொல்வதில் கவாரிஜ் மற்றும் முர்ஜியாவின் தீவிர போக்கும் அஹுலுஸ் ஸுன்னாஹ்வின் நடுத்தர போக்கும் வகுப்பு 10
முஸ்லிம்களின் ஜனாசா தொழுகையில் பங்குபற்றுவதும் சிலரின் ஜனாசா தொழுகையில் தவிர்ந்துக் கொள்வதின் விளக்கங்களும் (கடைசி பாடம் முற்றும்) வகுப்பு 11


நடுநிலையான பாதையும் தீவிர போக்கை நிராகரிப்பதும்14 Dec 2014 ஷேக் அலி நாஸர் அல் பகீஹ் அவர்களின் கிதாப் நடுநிலையான பாதையும் தீவிர போக்கை நிராகரிப்பதும் "உலமாக்களின் கல்வி சபைகளின் அமர்வு ஒருவனின் மார்க்கத்தை பாதுகாக்கும் 

07 Dec 2014 ஷேக் அலி நாஸர் அல் பகீஹ் அவர்களின் கிதாப் நடுநிலையான பாதையும் தீவிர போக்கை நிராகரிப்பதும் - கவாரிஜ் கொள்கையும் அந்த தாக்கத்தில் சிக்குண்டுள்ள இயக்கங்களும்

30 Nov 2014 ஷேக் அலி நாஸர் அல் பகீஹ் அவர்களின் கிதாப்
நடுநிலையான பாதையும் தீவிர போக்கை நிராகரிப்பதும் - அல்லாஹ்வின் அஸ்மா வ ஸிபாத் விடயத்தில் வழிகெட்ட கூட்டங்களும் , அந்த கொள்கையில் இன்றும் கானப்படும் இஸ்லாமிய இயக்கங்களும்"

23-11-2014 வகுப்பு ஷேக் அலி நாஸர் அல் பகீஹ் அவர்களின் கிதாப்
நடுநிலையான பாதையும் தீவிர போக்கை நிராகரிப்பதும் - அல்லாஹ்வின் பெயர் பண்புகள் விடயத்தில் வழிகெட்ட கூட்டங்கள் வழிகெட்ட விதங்களும் வகைகளும் அதில் அஹ்லுஸ் ஸுன்னாவின் பாதுகாப்பான 
நடு நிலை தமையும்