[ஆதாப் ஸிபாப்,புலூகுல் மராம் ]

இமாம் நாசீருத்தின் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்களின் கிதாப்

நபி யின் வழிகாட்டலில் இருந்து திருமணத்தின் சுத்தமான ஒழுக்கங்கள் ( ஆதாப் ஸிபாப் )பெரும்பான்மையான முஸ்லிம்கள் சிறு குழந்தைகள் மாதிரி தான் நடந்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் திசை திருப்பப்படுவது போன்று இவர்களும் திசை திருப்பப் படுகிறார்கள். அதாவது குழந்தைகள் பொருட்களினால் ஆசை காட்டப்பட்டு திசை திருப்பப் படுவது போன்று இவர்களும் திசை திரும்புகிறார்கள். சிறு சிறு பொருட்களுக்கும் , விளையாட்டுக்களும் விடயங்களுக்கும் சிறுவர்களை திசை திருப்புவது போன்று நல்ல பாதையில் இருந்தும் சத்தியமான நோக்கங்களில் இருந்தும், பெரியவர்களும் திசை திருப்பப்படுகிறார்கள்.


எந்தளவுக்கு என்றால் இஸ்லாமிய வழிமுறைகளை அவனுடைய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் எதிர்ப்பார்க்கிறான். இதனால் , அவனை இச்சைகளில் இருந்தும். இழிவான பழக்க வழக்கங்களில் இருந்தும், உலக அலங்காரங்களில் இருந்தும் முழுமையாக தூரமாக்கி வைக்க வேண்டும்.


அப்பொழுதான் அவன் அல்லாஹ்வின் பால் திரும்புவான். அப்பொழுதான் அவனுடைய புத்தியும் பாதுகாக்கப்படும். அப்போது அவனுடைய நேரங்களிலும், செயல் பாடுகளிலும் , உணர்ச்சிகளிலும் அல்லாஹ்வின் பரகத் காணப்படும். இதனால் தான் அவனுடைய முன்னேற்றமும், சக்தியும் தாரளாமாக அமையும்.


எனவே, பிரயோசனமான் விடயங்களில் செயல்படுவதற்கு முந்திக் கொள்வான். இதானல் அவனது மரியாதை பாதுக்காக்கப்படும். அவனது நிர்வகிக்கும் அதிகாரத் தன்மை உயரும்.


-------------------------------------------------------------------------------------------------