[எமது இணைய தளம் பற்றி]

உம்மத்தின் கரங்களுக்கு நபி வழி 


 


இமாம் நாஸீருத்தின் அல்பானி கூ‌றியது போன்று கூறுகிறோம்  : 

عاهدت الله أن لا أقول قولا إلا فقد سبقني إليه سلف

 " நா‌ன் அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி எடுத்துள்ளேன் ஸல‌பி‌ன் முன்மாதிரி இல்லாமல் இந்த மார்க்கத்தில் ஒரு விடயமும் கூற மாட்டேன் என்று "


நீ யாரிடமிருந்து இல்மை பெற்றுக் கொள்கிறாய் என்பதை கவனித்துக் கொள்... 

عن عبد الله بن المبارك يقول الإسناد من الدين ولولا الإسناد لقال من شاء ما شاء

கிபாருத் தாபியீன் அப்துல்லா இப்னு முபாரக். "இந்த மார்க்கம் அறிவிப்பாளர் தொடர் கொண்டது. அதுமட்டும் இல்லையெனில் எவரும் எதனையும் கூறுவார்."


எமது தளத்தில் உ‌ள்ள ஒலிப்பதிவுகள் ஆக்கங்கள் அனைத்தும் எமது ஷேக் அபுஅப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி அவர்களுடையதும் அவரிடம் கல்வியில் பயன்பெறும் சகோதரர் அபு அப்துல்லாஹ் அஷ்ரப் அலி அவர்களுடையதும் ஆகும்.

ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் ப‌ஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர். 
இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார். 

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் 
அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.

           
1.ஷேக் ரபி இப்னு ஹாதி 2.ஷேக் இஸ்தன்பூலி 3.ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல்