[ஒசாமா பின் லாடனும் அவனை பின் தொடர்பவர்களும்]

no to osamaஒசாமா பின் லாடனும் அவனை பின் தொடர்பவர்களும் 

 
ஷேக் ஸாலிஹ் அல் பவ்சான் அவர்களிடம் கேட்கப்பட்டது >> 


ஒசாமா பின் லாடனும் அவனை பின் தொடர்பவர்களும் , அவனுடைய கொள்கையை ஊக்குவிப்பவர்களும், கவாரிஜ் என்ற வழிகெட்ட பிரிவை சேர்ந்தவர்களா ?


ஷேக் ஹபிதஹுல்லாஹ் பதிலளித்தார்கள் >>


மிகவுமே பிரபல்யமான அடிப்படை தான் , ஆட்சி அதிகாரம் பெற்றவர்களுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் இந்த வழிகெட்ட கவாரிஜ் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் ,


இன்னும் இது பின் லாடனோ , அவனைப் போன்ற யாராக இருந்தாலும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் செய்து கிளம்பிவிட்டார்கள் என்றால் இந்த வழிகெட்ட காவாரிஜ் பிரிவில் அடங்கிவிடுவார்கள். 


ஷேக் ரபிய் இப்ன் ஹாதி அவர்களிடம் கேட்கப்பட்டது >> 


" கவாரிஜ் என்பவர்கள் நீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் செய்து கிளர்ந்து எழும்புவர்கள் மட்டுமே, அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழும்புவர்கள் கவாரிஜ் என்ற பிரிவை சேரமாட்டார்கள் என்று சொல்லப்படுவதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ? " 


பதில் >> அப்துல் மலிக் பின் மர்வான் என்பவன் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். அவன் அப்துல்லாஹ் இப்ன் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று அவரது தளபதியையும் கொன்று கஹ்பாவையும் அழித்தான். 


இதன் பிறகும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனுக்கு பையத் செய்தார்கள். இன்னும் அன்று இருந்த சஹாபா ரலியல்லாஹு அன்ஹு அனைவரும் அவனுக்கு பையத் செய்தார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். அல்லாஹ் அவன் மீது ரஹ்மத் செய்யட்டும், அவனிடம் சில நன்மைகளும் சில சிறப்புகளும் இருந்தன.

அவன் முஸ்லிம்களுக்காக சில நிலங்களை கைப்பற்றியதோடு சில ஜிஹாதுகளும் செய்தான் . இருப்பினும் அவன் ஒரு கொடிய கொடுங்கோல் ஆட்சியாளன்.

இருப்பினும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கற்று தந்தார்கள் , கற்று தந்தார்கள் , கற்று தந்தார்கள், இது ஸஹிஹ் புஹாரியிலும் ஸஹிஹ் முஸ்லிமிலும் இன்னும் ஏனைய கிரந்தங்களிலும்  காணப்படுகிறது. 


" அவர்கள்  உங்கள் மத்தியில்  தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு  கீழ்படியுங்கள்.  அவர்களிடம் நீங்கள் விரும்பியது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நீங்கள் கீழ்படியுங்கள். 

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " அவர்கள்  உங்கள் மத்தியில்  தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு  கீழ்படியுங்கள். "

அப்போது சஹாபாக்கள் கூறினார்கள் " நாங்கள் அவர்களுக்கு எதிராக எங்கள் வாட்களை கொண்டு  போராட்டம் செய்யக் கூடாதா ? 

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " இல்லை , அந்த கொடுங்கோல் ஆட்சியாளன்,  உங்கள் மத்தியில்  தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு  கீழ்படியுங்கள்."  

இவ்வாறெல்லாம் இருந்தும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு பொறுமையாக இருக்க சொன்னார்கள், கலகம் செய்து கிளர்ந்து எழும்ப அனுமதி கொடுக்கவில்லை.

இன்னும் யார் ஆட்சியாளனுக்கு எதிராக  கலகம் செய்து கிளர்த்து எழுந்து விட்டார்களோ அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கலகம் செய்து கிளர்த்து எழுந்து விட்டார்கள். மேலும் அவர்கள் அநீதியான ஆட்சியாளனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தாலும் அந்த கிளர்ந்து எழுந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் . 


கவாரிஜ்களின் விளக்கம் என்னவென்றால் நீதியான ஆட்சியாளனுக்கு எதிராக  கலகம் செய்து கிளர்ந்து எழுந்தாலே ஒழிய ஒருவன் கவாரிஜ் ஆக கருதப்பட மாட்டான்.  

அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அநீதியான 

ஆட்சியாளராகவும், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அநீதியான ஆட்சியாளராகவும்  கருதி கொண்டிருக்கிறார்கள்.

யாரெல்லாம் செய்யது குதுப்பின் அபிப்பிராயத்தை ஆதரிக்கிறார்களோ அவர்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அநீதியான ஆட்சியாளராக கருதிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் மறைத்தாலும் சரியே.

இது அவ்வாறு இல்லையெனில் , உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நிந்தனை செய்யும் செய்யது குதுபை அவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் ? அவன் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமைத்துவத்தை செல்லுபடியற்றதாக்குகிறான்.  குப்ர் இருந்தாலே தவிர தலைமைத்துவம் செல்லுபடியற்றதாக ஆக்கப்படாது.

ஏனெனில் செய்யது குதுப் ஒரு தக்பீரியி. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவன் தக்பீர் (takfeer) செய்ததை பகிரங்கமாக அவனால் சொல்ல முடியவில்லை. இன்னும் செய்யது குதுப் கவாரிஜ் இனதும் ரவாபிலாவினதும் சேர்க்கையான கொள்கைகளை கொண்டவன். இன்னும் அவன் கவாரிஜ், ரவாபில் மற்றும் ஏனைய வழிகெட்ட கொள்கைகளை தூக்கி பிடித்தவன்.

இந்த எல்லா வழிகெட்ட கொள்கைகளை  சேர்க்கையாக அவன் கொண்டிருந்ததினால் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அநீதியாளர் ஆக கருதி அவர்களுக்கு எதிராக நாங்கள் கலகம்  செய்து கிளர்ந்து எழுவதை ஆகுமாக்கினான்.  

அதே போன்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் அநீதியாலராக கருதி அவர்களுக்கு எதிராக நாங்கள் கலகம்  செய்து கிளர்ந்து எழுவதை ஆகுமாக்கினான். 

இதே போன்றுதான் துல் குவைசிரா எவ்வாறு நபி சள்ளல்லாஹு  அலைஹி வசல்லம் அவர்களின் நீதத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினான் என்பதை நீங்கள் கண்டீர்கள் . 


எனவே, ஆட்சியாளருக்கு எதிராக கலகம்  செய்து கிளர்ந்து எழுகின்றவர்களிடம் , யார் நீதியாளர்கள் , யார் அநீதியாளர்கள் என்பதற்கு  எந்தவொரு முறையான அடிப்படைகளும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. 


ஆகவே, தீர்வு  இதுதான்.
 ஆட்சியாளர்கள் இஸ்லாமிய  வட்டத்துக்குள் இருந்து விட்டார்கள் என்றால், மேலும் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சிறப்பாக வரையறுத்தது போன்று , ஆட்சியாளன் கெட்டவனாகவும் , கொடுங்கோலனாகவும் இருந்து இஸ்லாமிய வட்டத்துக்குள் இருந்துவிட்டான், தொழுகையையும் நிலைநாட்டி விட்டான் , என்றால் அவனுக்கு எதிராக கலகம்  செய்து கிளர்ந்து எழுவது அனுமதிக்கப்பட்டது அல்ல .  

இதை விளங்கி விட்டாயா ? இது தான் 

அல்லாஹ்வினதும் அவனது தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களினதும் தீர்ப்பாகும் . . மடையர்களின் தீர்ப்பு  அல்ல .  


http://www.rabee.net/show_fatwa.aspx?id=160 )