[ஆர்பாட்ட பேரணிகளும் உலமாக்களின் தீர்ப்பும்]

ஆர்பாட்ட பேரணிகளும் உலமாக்களின் தீர்ப்பும்

கேள்வி : இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஆர்ப்பாட்ட பேரணிகளை உருவாக்குவது தஃவா வழிமுறையை சார்ந்ததா ?

பதில் : எங்களுடைய மார்க்கம் குழப்பமானது அல்ல . எங்களுடைய மார்க்கம் ஒழுக்கமானது, ஒழுங்கானது, சாந்தமானது, அமைதியானது. இந்த பேரண ஆர்பாட்ட ஊர்வலங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை சேர்ந்தது அல்ல.இன்னும், முஸ்லிம்கள் அதற்கு பரீட்சியமானவர்களும் அல்ல.

எனவே, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், கருணையான மார்க்கம், ஒழுக்கமான மார்க்கம். குழப்பமான , ஒழுங்கில்லாத , பித்னாக்களை உண்டு பண்ணக் கூடிய மார்க்கம் அல்ல . அது தான் இஸ்லாம். உரிமைகள் , ஷரியாவில் சொல்லித்தரப்பட்ட, அனுமதித்த வழிமுறையில் கேட்டு பெறப்படும். இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல.


ஷேக் ஸாலிஹ் அல் பவுஸான் ஹபிதஹுல்லாஹ்.

மஜ்மூ ' பதாவா வ ரசா 'இல் பாகம் 2 , இலக்கம் 141, 143, 146