[ஆட்சியாளருக்கு கீழ்படிவதும் கிளர்சிகளுக்கு ஷரியத்தின் தடையும்]

பெரும்பாலான குழுக்கள் , ஆட்சியாளர்கள் மீது தங்கள் விரல்களை சுட்டிக்காட்டி மக்களின் கவனம் , உணர்வுகள் மற்றும் ஆதரவை பெறும் முயற்சி ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு தஃவா செய்கின்றன. அவர்களின் இந்த செயலினால் உம்மத் இன்னும் வீழ்ச்சிதான் அடைகிறது. அனைத்து சீற்றம், தீமைகளின் அழுக்கையும் மற்றும் ஏனையோரின் தவறுகளையும் ஆட்சியாளர் மீது சுமத்தி , அவர் மீது கிளர்ச்சி செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறார்கள். பின்னர் புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகள் மூலம் அரசாங்கங்களின் வீழ்ச்சியை மற்றும் ஆட்சியாளர்களை மாற்றுவதை கொண்டு ,  அவர்களின் வழிகெட்ட வழிமுறைகளை உருவாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.  


இந்த அனைத்து வழிகெட்ட நடவடிக்கைகளுக்கும் காரணம் அல்லாஹ்வை பற்றிய இல்ம் , ஷரியாவின் கல்வி போன்ற அனைத்து விடயத்திலும் அறியாமை அடிப்படையில் செயல்படுவதால் ஆகும். இன்னும் வழிகேடர்களின் சூழ்சிகளில் வீழ்ந்ததும் ஆகும்.