[யார் இந்த யஹ்யா சில்மி , யார் இந்த பி. ஜெ. யை பூஜிப்பவர்கள்]

யார் இந்த யஹ்யா சில்மி , யார் இந்த பி. ஜெ. யை பூஜிப்பவர்கள்

மேலே , உள்ள யார் இந்த யஹ்யா சில்மி என்ற கதையை பார்த்தாலே புரியும் , பி. ஜெ. யும் அவரது ஆதரவாளர்களும் இந்த தளத்தில் பி. ஜெ. யின் கொள்கை கோட்பாடுகள் பற்றிய விமர்சனங்களை , எதிர் கொள்ள முடியாமல் செய்வதறியாது இப்படியான சாட்டு போக்கு விடயங்களை சொல்லி திரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதன் அத்தாட்சி . 

இவர்களது இந்த கதைகளுக்கு, ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன் . பி. ஜெ. யின் தர்ஜுமா பற்றி சொற்பொழிவு நடக்கிறது, இவர்கள் வந்து சாவு மணி அடித்தேன் என்கிறார்கள். அதுவும் என்ன சாவு மணி, பி. ஜெ. க்கும் ஷேக் யஹ்யா சில்மிக்கும் இடையில் நடந்த அத்துணை விடயங்களையும் மக்கள் முன் எடுத்து வைத்தேன் என்கிறார்கள். சாவு மணி என்று இவர்கள் அடித்த பெல் லும் பி. ஜெ. க்கும் யஹ்யா சில்மிக்கும் இடையில் நடந்த விடயங்கள் தான் ஒழிய, விமர்சிக்கப்பட்ட தர்ஜுமா வில் உள்ள பி. ஜெ. யின் வழிகேடுகள் பற்றி அல்ல . 

ஷேக் யஹ்யா சில்மி தான் ஒலிப்பதிவுகளை அழித்து விடுகிறார் என்கிறீர்கள்,சரி., அந்த ஒலிப்பதிவை பி. ஜெ. யை பூஜிப்பவர்கள் பதியலாமே. முகத்திரையை கிழிக்க என்று நோக்கி வருகிறீர்கள் , இப்படி தெரிந்துக் கொண்டு, எந்த ரெக்கார்டும் இல்லாமலா பேசி விட்டு சென்றீர்கள்? இது தான் இவர்களது கதை. பச்சை பொய்கள். 

இவ்வாறு, மார்க்கத்தில் பி. ஜெ. விடும் வழிகேடுகளை சுட்டிக் காட்டினால், அதனை இன்று வரை முறையாக எழுதி மறுத்ததில்லை. மாற்றமாக, BAKAR போன்று தான், பஸ்ஸில் சென்றார், சொத்தை திருடினார் என்று இவர்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் தனிப்பட்ட விடயங்களை கொண்டு பேசி சண்டை செய்வார்கள். நாங்கள் , இன்று வரை, பி. ஜெ. யின் வழிகேடுகள் என்று பட்டியலிட்டு இந்த இணையத்தளத்தில் வைத்திருக்கிறோம். அதில், இப்படி எந்த தனிப்பட்ட விடயங்களையும் பற்றி நாம் அலட்டுவதில்லை. பி. ஜெ. யின் தனிப்பட்ட விடயங்கள் எமக்கு தெரியாமல் இல்லை. இருந்தும், நாம் அவற்றை அலட்டிக் கொள்வதில்லை. 

ஏனெனில், அது எமக்கு தேவையான விடயமோ பிரச்சனையோ அல்ல. நாம் பேசுவதெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வின் மார்க்கத்தில் இந்த பி. ஜெ. விளையாடுகிறார் , அதனை சுட்டிக் காட்டினால், யஹ்யா சில்மி ஓட்டம் எடுத்தார், அந்த ரிகாடை அழித்தார், என்று சும்மா கதைகள் தான் இவர்களிடம் இருந்து பதில் . நீ , சரியான கொள்கையில் இருந்தால், பி. ஜெ.சம்பந்தமாக வைக்கப்பட்டுள்ள அவரது வழிகேடுகளை மறுத்து ஒரு பதிலை வெளியிடலாமே ? 

எனவே, செய்வதறியாது கதைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அதுவும் ஒரு சிறு பையன் , அவனுக்கு அரபியும் தெரியாது, அவன் ஒரு சாதாரண மௌலவியும் அல்ல . உலக கல்வி சரி பத்தாம் தரம் தாண்டி இருப்பானா என்று கூட எங்களுக்கு தெரியாது. இப்படி பட்ட ஒரு பையன் வந்து , சபையில் கேள்வி கேட்டு முகத்திரை கிழித்தேன், சாவு மணி அடித்தேன் என்றால், எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவானா ? அண்ணனே வெட்கம் இல்லாமல் நான் எங்குமே முறையாக படித்ததில்லை என்று சொல்லும் பொது, அவரிடம் இப்படிப்பட்ட பையன்கள் தான் இருக்க முடியும் .

இந்த பையனின், கதையை ஒரு மறுப்பு என்று கருதி அதனையும் பி. ஜெ. வெப்சைட் பதிந்து பரப்புகின்றது என்றால் பாத்துக் கொள்ளுங்கள். பரிதாபமான நிலை தான். 

ஏனென்றால், இவர்களது அப்துல் நாசரும் , சம்சுல் லுஹாவும் கூட ஒரு மறுப்புக்கு எத்தனித்தார்கள். அவர்களது மறுப்புக்களுக்கு மறுப்பளிக்கப்பட்டவுடன் , இன்று வரை வாய் பொத்தி இருக்கிறார்கள். இப்படி இருந்துக் கொண்டு தான் , விவாதம் செய்வோம். ஓட்டம் எடுத்தார். என்று கதை விடுகின்றனர். என்ன செய்வது., இவர்களது முகத் திரை கிழியும் பொது ஏதாவது சாட்டு சொல்ல வேண்டாமா ?, அதற்கு தான் இந்த விவாத பந்தா . 

ஷேக் யஹ்யா சில்மி தான், விவாதம் செய்ய மாட்டார். நீ, அவரது மறுப்புக்களுக்கு ஒரு மறுப்பு எழுதலாமே. நீ , விவாதத்தில் பேசி மறுப்பதை, எழுதி மறுத்து விடலாமே. ? இப்பொழுது புரிகிறதா இவர்கள் சாட்டும் போக்கும். இதற்கு தான் நாம் சொல்வது போலி சாட்டுகளும் தப்பி ஓட்டங்களும். 
பரிதாபமான நிலை தான் இந்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வாதிகள் நிலை. வெட்க உணர்வு இல்லாத மக்கள் போன்று தான் தெரிகிறது. பச்சை ஷிர்கை இப்படி தெளிவாக தற்காத்து வருகிறார்கள். 
ஷிர்கை தற்காத்து பேசும் இவர்கள் , நேரத்தை வீணடித்து, அசிங்கமாக பேசும் , தப்பிக்க வழி தேடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதும் இயற்கையே . ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பி. ஜெ. வாதிகள்.

இதில் இன்னும் வேடிக்கையானா விடயம்தான், இந்த பையன் இவர்களுடன் சேர்ந்து இருக்க முடியாமல், பிரிந்து , ......!!!!>>>>.... தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு இயங்கி கொண்டு இருக்கிறான். இவர்கள் மத்தியிலேயே இவனுடன் பிரச்சனை. 

இவனது மறுப்பை தூக்கி பிடித்து தடுமாறுகிறார்கள் என்றால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜமாஅத், பி. ஜெ. போன்றோரின் நிலையை நினைத்துப் பாருங்கள்.