[சுய இன்பம் - தர்க்க சாஸ்திர விளக்கங்களும் பி. ஜெ. கும்பலின் வழிமுறைகளும்]

தர்க்க சாஸ்திர விளக்கங்களும் பி. ஜெ. கும்பலின் வழிகெட்ட வழிமுறைகளும் 

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம், அல்ஹம்துலில்லாஹ், 

வஸ் ஸலாத்து வஸ் ஸலாம் அலன் நபிய் அமா பஃத் 


இது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அனுமதியும், தாவுஸ் இப்னு கைஸான் போன்ற தாபியீன்களின் கருத்தும் இது தான் என்று ஓடியோவில் கூறி இருக்க, 

இவர்களும் இது இமாம் அஹ்மத் போன்ற பெரும் பெரிய இமாமின் தீர்ப்பு என்று அவர்களே  சொல்லிக் கொண்டு , இந்த பத்வாவை கேடு கெட்ட பத்வா என்று இவர்கள் கூறுவது , இவர்கள் தெளிவான் பி. ஜெ. அண்ணனின் வழியில் பி. ஜெ. கொள்கைக்கு உட்பட்டவர்கள் என்பதன் சான்றுகளாகும். 

ஏனெனில், அருமை சஹாபாக்களை கிரிமினல் என்று விமர்சிப்பதில் அண்ணன் பின் வாங்கியவர் அல்ல . எனவே, அண்ணன் வழியில் இந்த தம்பிகள் மார்க்க தீர்ப்புகளை இப்னு அப்பாஸ்  ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் கூறினாலும் அது கேடு கெட்டது என்று சொல்வதில் ஆச்சரியப் படத்தேவையில்லை. 
யஹ்யா ஸில்மியின் அடுத்த சில்மிசம் பதிலுக்கு(?) பதில் என்று பி. ஜெ. கொள்கைக்கு உட்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஒரு பிரச்சாரகர் அவருடைய விமர்சனத்தை பின்வருமாறு ஆரம்பிக்கிறார். 
அதாவது " சுய இன்பத்தை(?) ஹலாழாக்கிய யெஹ்யா சில்மியின் கேடு கெட்ட பத்வா " என்று மார்க்கத்தின் ஒரு பிஃஹ் விடயத்தின் தீர்ப்பை சாடுகிறார். இது ஷேக் யஹ்யா சில்மியின் தனிப்பட்ட ஆராச்சியில் வெளிவந்த ஒரு விடயமா ?. மாற்றமாக இப்னு அப்பாஸ்  ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் கூறினாலும் அது கேடு கெட்டது என்று இவர்கள் சொல்வதில் ஆச்சரியப் படத்தேவையில்லை. 

அடுத்ததாக , ஏற்கனவே, நாம் ஓடியோவில் கூறிய ஆதாரங்களை பார்க்காமல் , கேட்காமல் எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் மொட்டையாக எமது இந்த கட்டுரையை பாருங்கள் என்று ஒரு லிங்கை கொடுத்தார்கள். 


எனவே, இவர்கள் இப்படி மொட்டையாக விமர்சித்தார்கள் என்று நாம் சுட்டிக் காட்டி, இவர்களது இந்த விடயத்தின் அடிப்படையான குர் ஆன் வசனத்தில் இவர்களது கோளாறை சுட்டிக் காட்டி , இந்த கோளாறின் அடிப்படையில் வந்த ஏனைய கோளாறுகளுக்கு இதுவே போதும் என்ற அடிப்படையில் விமர்சனத்தை முன் வைக்க , 


இவர்களோ " சலபி கும்பல் பதில் தர முடியாமல் தலையில் துண்டை போட்டுள்ளது " என்றும், இவர்கள் ஒரு குர் ஆன் வசனத்துடன் மட்டும் நின்று விட்டார்கள் ஏன் என்று வாசகர்கள் புரிந்திரிப்பீர்கள் என்றும் வீர வசனம் பேசுகிறார்கள். 


இந்த விடயத்தின் ஆணி வேர்  இந்த குர் ஆன் வசனம் , இந்த வசனத்தை , சஹாபியின் வார்த்தையுடன் சேர்த்து விளங்க தெரியாமல் , தான் தோன்றித் தனமாக தனது சுய விளக்கத்தில் விளக்கம் சொல்லி, இந்த சுய விளக்கத்துக்கு வலு சேர்க்க சம்பந்தமே இல்லாத ஹதீதுகளை சேர்த்துக் கொண்டு இவர்கள் தடுமாறுவதை அவதானித்து தான் , மூலத்தில் இவர்கள் விட்ட கோளாறை சுட்டிக் காட்டி சுருக்கமாக விமர்சனம் செய்யப்பட்டது. 


இதனை விளங்காத இந்த பத்தாம் பசலிகள் துண்டை போட்டார்கள், சட்டியில் இருந்தால் தானே ... என்றெல்லாம் வீர வசனம் பேசி தனது மடமையை மறைக்க பார்க்கிறார்கள். இவர்களது மடத்தனத்தை கீழே பார்க்கலாம். 


(நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7) 

மேலே, குர் ஆன் வசனத்தில் வெட்கத்தலங்களை என்ற சொல்லுக்கு இவர்கள் கற்பு என்று தமிழாக்கம் செய்த்திருப்பதை சுட்டிக் காட்டி ஷேக் இக்பால் மதனியின் தர்ஜுமாவை பார்க்க சொன்னால், இதை விளங்காத , அல்லது விளங்க தெரியாத இந்த பி. ஜெ. கும்பல், நாம் அதே வசனத்தில் வரும் பிந்திய வார்த்தைகளை தந்திரமாக மறைக்கும் தன்மை கொண்டவர்கள் என்று பல்டி அடித்து அவர்களது இருட்டடிப்பு கைங் கரியங்களை எமது தலையில் சுமத்த பார்க்கிறார்கள். இது தான் இவர்களது சாட்டையடி கைங்கரியங்கள். பார்த்துக் கொள்ளுங்கள். 


மேலும், இவர்கள் மொழியாக்கம் செய்த கற்பு என்ற சொல்லின் அர்த்தத்தில் மொழி ரீதியாக கூட சுய இன்பம் கற்பை இல்லாது செய்துவிடும் , அல்லது கற்பை இழந்தவர் ஆகி விடுவார் என்று கருத்து இல்லை என்பதை தான் கற்பு இல்லை என்றால் என்ன என்று மொழி ரீதியாக விளங்க படுத்தப் பட்டது. 

அத்தோடு, இதனால் தான் இவர்களுக்கு உலகறிவும் கிடையாது மார்க்க அறிவும் கிடையாது என்று சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு ஒரு பல்டி அடித்து , செய்வதறியாது, " மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமாக 
நபி(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள் " என்று கூறி அஹ்மதில் வரக் கூடிய ஒரு ஹதீதை பதிந்துள்ளார்கள். 


இது இவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இட்டுக் கட்டுவதாகும். ஏனெனில், மேற்கண்ட ஆயத்துக்கு இந்த ஹதீஸை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ள செய்தி என்று இவர்களுக்கு யார் சொன்னது ? ஆதாரம் தருவார்களா ? இந்த ஆயத்துக்கு விளக்கமாக தான் 

இந்த ஹதீஸ் என்று இவர்களுக்கு அறிவித்து கொடுத்தது யார் ? சஹாபியா ? 


இது தான் இவர்களது விளையாட்டு, ஒரு ஆயத்தை இவர்கள் விரும்பும் ஒரு ஹதீசுடன் சேர்ப்பார்கள். அல்லது ஒரு ஆயத்தை இவர்கள் தேர்ந்து எடுக்கும் இன்னொரு ஆயத்துடன் சேர்ப்பார்கள். இவ்வாறு தனது கருத்தை ஆயத்தின் விளக்கமாக , ஹதீஸின் விளக்கமாக கூறுவார்கள். 


இதன் காரணத்தால் தான் நாம் சஹாபாக்கள் ஒரு தீர்ப்பு சொன்னால் அதனோடு நின்று கொள்வது. ஏனெனில், அவர்களுக்கு தான் தெரியும் எந்த ஆயத்தை எந்த ஆயத்துடன் சம்பந்தமாக்குவது, எந்த ஹதீஸை எந்த ஆயத்துடன், வேறெந்த ஹதீசுடன் சம்பந்தமாக்குவது எல்லாம் அறிந்தவர்கள். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கற்றவர்கள். அவர்கள் மார்க்கத்தில் தன் இஷ்டத்துக்கு , தன் வெறுப்புக்கு பேச மாட்டார்கள். அவர்களது இல்ம் உறுதி செய்யப்பட்ட , உத்தரவாதம் அளிக்கப்பட இல்ம். 

இவ்வாறு நபியின் தர்பியத்தில் வளர்ந்த இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, இந்த சுய இன்ப விடயத்திற்கு அனுமதி அளிக்கிறார்கள். இந்த அறிவிப்பை பல்வேறு சஹாபாக்களிடம் கல்வி பெற்றுக்கொண்ட தாபியீன், தபஉத் தாபியீனுக்கு அறிவிக்கிறார்கள் . இந்த அறிவிப்பை பல்வேறு தாபியீன்களிடம் கல்வி பயின்ற ஏனையோர் அறிவிக்கின்றனர். இந்த அறிவிப்பு மார்க்கத்திற்கு முரணாக இருந்தால் ஏனையோர் மறுக்காமல் இருக்க மாட்டார்கள். 

ஏனெனில் , இந்த தாபியீன்கள் ஏனைய சஹாபாக்களிடம் இதற்கு மாற்றமான அறிவிப்புக்களை அறிவிக்காத வரையில் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு மறுக்கப்படாது. இது தான் மார்க்கத்தில் சலபுஸ் சாலிஹீன்களின் வழிமுறை. 

இந்த வழி முறைகளை தூக்கி எறிந்து விட்டு, தான் தோன்றித் தனமாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸை இந்த ஆயத்திற்கு விளக்கமாக இவர்கள் தேர்ந்து எடுத்து காட்டுகிறார்கள்.

இந்த பி. ஜெ. கும்பலின் மடத்தனத்திற்கு அளவே இல்லையா ? 


மேலும், "ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!" என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார். (புகாரி)

இப்னு அபி ஷைபா அவர்கள் அமர் பின் ஹரிம் இடமிருந்து அறிவிக்கிறார்கள் ,ஜாபிர் இப்ன் ஜைத் அவர்களிடம் ஒரு மனிதரை பற்றி கேட்கப்பட்டது " அவர் ரமளானுடைய காலத்தில் தனது மனைவியை இச்சையுடன் பார்த்து அவள் மேலுள்ள மோகத்தால் விந்தை வெளியேற்றி விட்டார் , அவர் கட்டாயம் நோன்பை முறிக்க வேண்டுமா என்று " என்று கேட்கப்பட்ட பொது. இல்லை , நிச்சயமாக அவர் நோன்பை தொடரலாம் என பதிலளித்தார்.


இந்த சம்பவங்களுக்கு இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். மேலும் இவர்கள் தேர்ந்து பொறுக்கிய ஹதீஸில், கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்று உள்ளது. இரண்டு கால்களும் விபச்சாரம் செய்கின்றன என்று உள்ளது. 

சுய இன்பத்தில் கண்கள் செய்த விபச்சாரம் என்ன ?, கால்கள் செய்த விபச்சாரம் என்ன? என்று இவர்கள் கூறுவார்களா ? மேலும் மர்ம உறுப்பு அதனை மெய் படுத்தும் அல்லது பொய்படுத்தும் என்றும் உள்ளது. மர்ம உறுப்பு எவ்வாறு பொய்ப்படுத்தும் என்று இவர்கள் விளக்குவார்களா ? 

இப்படி எந்த விளக்கமும் சொல்லாமல், ஹதீஸில் இடை நடுவில் ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்கம் சொல்கிறார்கள். இப்படி ஹதீஸின் இடை நடுவில் ஒரு துண்டை / ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு விளக்கம் சொல்வது சொல்வது சரியா ? அல்லது ஹதீஸின் முழுவதையும் எடுத்து விளக்கம் சொல்வது சரியா ? இப்படி மடத்தனமான குளறுபடிகளை தான் இவர்கள் செய்துள்ளார்கள். 


மேலும், " வேறு வழியில் " என்ற குர் ஆனிய வாசகத்துக்கு இவர்களாக கருதியீடு செய்து புகுத்தியது தான் சுய இன்பம். வேறு வழி என்ற வாசகத்துக்கு விளக்கம் சுய இன்பமும் அடங்கும் என்று நபியும் சொல்லவில்லை ஏனைய சஹாபாக்களும் சொல்லவில்லை. 


சுய இன்பமும் அதன் விடயங்களும் அந்த காலத்தில் இல்லாத ஒன்றா ? அந்த வார்த்தை அந்த காலத்தில் அறியப்படாத ஒன்றா ? நேரடியாக சொல்ல தெரியாமல் மறைமுகமாக " வேறு வழி என்று " சொல்ல, இவர்கள் வந்து தேடி பிடித்து தருவதற்கு. 

குர் ஆன் விரிவுரையாளர்களில் எல்லாம் சிறப்பானவர் தான் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அவர்களுக்கு இந்த வேறு வழியில் என்ற வாசகத்துக்கு விளக்கம் தெரியாமல் , அல்லது இந்த வசனம் அவர் அறியாதவர் என்று சொல்லப் போகிறார்களா ? இவர்களை பொறுத்த வரை, சஹாபியின் கூற்றை விட இவர்களின் கருதியீடு தான் சரியானது. 
ஏனெனில், இவர்களே, நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஆயத்துக்கு விளக்கமாக இந்த ஹதீஸை சொன்னார்கள் என்று ஹதீஸின் ஒரு இடை நடுத் துண்டை மட்டும் சொல்பவர்கள் தானே !!. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 
இவ்வாறு தான், ஹதீசுகளை குர் ஆனுக்கு முரணாக காண்கிறார்கள். சஹாபா விளக்கங்களை அல் குர் ஆனுக்கு சுன்னாவுக்கு முரணாக காண்கிறார்கள். இது தான் இவர்கள் கூறும் சாட்டையடி. கசையடி படும் வரை திருந்த மாட்டார்கள் போலும்.

இதில் வேடிக்கையான விடயம் தான் சுய இன்பம் என்பது " விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை,"  என்று நபித் தோழர்கள் மீது தனது கருதியீடால் / கற்பனையால் ஒரு அபாண்டம் இந்த பி. ஜெ. கும்பல் வைத்துள்ளது. 


ஏன், இது தடையானது அல்ல என்று தெரிந்து அதனை செய்துக் கொள்ளலாமா என்று கேட்காமல் விட்டார்கள் என்று கருத முடியாதா? 

இவர்களுக்கு தேவை என்றால் சஹாபாக்களையும் ஆதாரமாக எடுப்பார்கள் . அதுவும் அவர்கள் மீது அபாண்டங்களை சுமத்தி எடுத்து சொல்கிறார்கள். ஆனால் , மாற்றமாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அனுமதி செய்தி பதியப்பட்டுள்ளது. 
இவ்வாறான அபாண்டங்களை ஆதாரமாக சுமத்தி சாட்டையடி என்று வீர வசனம் பேசுகிறார்கள். இவர்களுக்கு தேவை படும் போது சஹாபாக்களை ஆதாரமாக எடுப்பார்கள் , தேவை இல்லா விட்டால் தூக்கி எறிவார்கள். 

இவர்களது ஏனைய மேற்கோள்கள் அனைத்தும், சுய இன்பன் விபச்சாரம் என்று கருதி , மார்க்கத்தில் விபச்சாரம் பற்றி வந்த விடயங்களை மேற்கோளாக எடுத்து தொடர்கிறார்கள். 
எனவே, இவர்களது கருதியீட்டின் கற்பனையால் அடிப்படையான விடயங்களின் ஆதாரமில்லாத் தன்மைகளையும், ஆதாரம் என்று இவர்கள் இட்டு கட்டியவைகளையும் , சுமத்திய அபாண்டங்களையும், எடுத்துக் காட்டியுள்ளோம். 

ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும்.

எனவே நாம் இந்த இல்மை முறையாக பயின்று கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 

மேலும், உழ்ஹிய்யா விடயத்தில் மறுக்கப்பட்ட நாசரின் மறுப்பை திரும்ப திரும்ப ஆதாரமாக எடுத்துக் காட்டி தடுமாறுவதையும் இதே விமர்சன தொடரில் எடுத்துக் காட்டியுள்ளோம். அது பற்றி எந்த பேச்சும் இல்லை. அந்த விமர்சனத்துக்கு எப்போது தான் பதில் தருவார்களோ ?? இவர்களது தொய்ந்து போன சாட்டையை எப்போது கையில் எடுப்பார்களோ ? 
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


பி.ஜெ. கொள்கைக்கு உட்பட்ட SLTJ யின் மொட்டை விமர்சனம் 2