[தனி நபர் மானமா? மார்க்கத்தின் பாதுகாப்பா?]

தனி நபர் மானமா? மார்க்கத்தின் பாதுகாப்பா? 


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

kutubathul haja image


அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சுத்தமாக மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் 
என்ற நோக்கில் , மார்க்க பிரச்சாரத்தில் இருப்பவர்களை அவர்களது கொள்கை 
கோட்பாடுகளை சொல்லி விமர்சனம் செய்வது, தனி நபர் புறம் பேசுவதாகவோ,  தனி நபர் மானம் மரியாதையை தாக்குவதாகவோ அமையாது. 

ஏனெனில், முதலில் குறிப்பிட்ட தனி நபரின் தவறான பிரச்சாரத்தில் இருந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாக்க வேண்டும். மேலும், பெயர் குறிப்பிடாமல் , பொதுவாக சொல்லப்பட்டால், யார் என அடையாளம் காண முடியாமல் , மக்கள் அன்னாரையும் இன்னாரையும் கணிப்பெடுத்து , சம்பந்தம் இல்லாதவர்களையும் பற்றி தவறாக கணிப்பெடுத்து விடுவார்கள். எனவே, குறிப்பிட்ட நபரை பெயர் பட்டங்களுடன் அடையாளம் காட்டி விட்டால் , மக்களும் அவரில் இருந்து பாதுகாப்பு பெற்று விடுவார்கள், சம்பந்தம் படாதவர்களும் தப்பி விடுவார்கள். 

இந்த அடிப்படையில் இமாம்கள் வழிகேடர்களையும் அவர்களது நூற்களையும் எங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள். அத்தோடு, இது இல்மை சுமந்தவர்களின் கடமையெனவும் அறிவிக்கின்றார்கள். இதனை இமாம் பர்பஹாரி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் அவர்களது கிதாப் ஷரஹ் ஸுன்னாவில், ஐந்தாவது குறிப்பில் சொல்கிறார்கள். யாரை பற்றி புறம் பேசுவது, யாரை பற்றி புறம் பேசக் கூடாது என்று ஒரு நூலையே இமாம் ஷவுக்காணி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் எழுதி வைத்து விட்டார்கள். யாரு மீது புறம் பேசுவது கூடும் என்று ஒரு தலைப்பே வைத்து இமாம் நவவி அவர்கள் , தங்களுடைய ரியாளுஸ் சாலிஹீன் என்ற கிதாபில் எழுதி வைத்து விட்டார்கள். 

அபு அமர் என்பவரிடத்தில் நீங்கள் ஹதீசுகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று ஸஹிஹ் முஸ்லிமின் முன்னுரையில் இமாம் முஸ்லிம் அவர்கள் பெயரை குறிப்பிட்டு எச்சரித்து வைக்கிறார்கள். அவன் சலபுகளுக்கு ( அருமை சஹாபாக்களுக்கு ) எதிர்ப்பானவன் என்று காரணமும் சொல்லி வைக்கின்றார்கள். சலபுகளை எதிர்ப்பவன், குறை காண்பவன், திட்டுபவன் போன்றவர்கள் இடத்தில் இல்மை பெறக் கூடாது என்பது சலபுகளின் அடிப்படை. இதனாலேயே, இமாம் முஸ்லிம் குறிப்பிட்டு சொல்கிறார்கள். 

மாற்றமாக எம்முடைய சமுதாயத்தில், இன்று அருமை சஹாபாக்களின் செயல்பாடுகள் எனக்கு அருவருப்பாக தெரிந்தது ,எனவே விமர்சனம் செய்தேன் , அது மார்க்க அடிப்படையில் சரியானது தான் என்று பி. ஜெ. போன்றவர்கள் கூச்சம் இல்லாமல் சொல்கின்றார்கள். 


இவர்களை அடையாளம் காட்டுவதை , தனி நபர் மானத்தை வாங்குவதாக அமையும் , பொறாமையால் செயல் படுவதாக அமையும் என்றெல்லாம் பழி சுமத்தப்படுக்கிறது. இதனால் , மார்க்கத்துக்கு அநியாயம் செய்பவர்களை அடையாளம் காட்டுவது சிலருக்கு ஒரு கூச்சமான செயலாக மாறி விட்டது. 


இதனால், அநியாயக்காரர்களின் அநியாயங்கள் அதிகரித்து விட்டன. மார்க்கத்திற்கு அநியாயம் செய்பவர்களை அடியாளம் காட்டாமல் ஒற்றுமை கோஷம் போடுவது இஹ்வானுள் முஸ்லிமீனின் கொள்கையாகும். அவர்கள் 

தான் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள். இதே கொள்கையை ஆதரிப்பவர்கள் தான் ஜாமாத்தே இஸ்லாமியின் கொள்கையும் ஆகும். 

மானம் காப்பதும் மக்களை சேர்ப்பதும் வழி கெட்ட கூட்டங்களின் வழி முறைகள் ஆகும். இந்த இயக்கங்களின் கொள்கைகளை பலரும் அறிந்தும் அறியாமலும் பின்பற்றுகின்றனர். இவைகள் சலபுகளின் பாதையும் அல்ல. மாற்றமாக பித் அத் வாதிகளின் அடிப்படைகளாகும். வழி கெட்ட கூட்டங்களின் வழிமுறைகள் ஆகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன். 

இது சகோதரர் அபு அப்துல்லாஹ் அஷ்ரப் அலி அவர்களின் கேள்வி பதில் நிகழ்சியியின் எழுத்து வடிவம் .