[பி.ஜே. கும்பலால் பரிகசிக்கப்படும் ஆதாரப் பூர்வமான ஹதீத்]

பி.ஜே. கும்பலால் பரிகசிக்கப்படும் ஆதாரப் பூர்வமான ஹதீத்


சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். 

அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதற்கு தீர்வு, வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான். அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதற்குத் தீர்வு என்ன? 
அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட 
வேண்டும், 
இவ்வாறு பால் 
கொடுப்பதன் மூலம் மஹ்ரம் ஆக்கிவிடலாம் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் 
தீர்ப்பளித்திருக்கின்றார். 
சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் 
ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் 
கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் ஸாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த செய்தி தாள் செய்தியை வைத்துக்கொண்டு பி.ஜே. கும்பல் ஆதாரப்பூர்வமான ஹதீதை பின்வருமாறு பரிகசித்தது..


அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களா?

இந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களா?

இவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும், பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களா? ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டு அறிஞர்கள்.


பி.ஜே. சொன்னால் தான் தப்பு. அரபு நாட்டுக்காரன் சொன்னால் தப்பில்லை என்பது தான் இவர்களது கொள்கை. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.


அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் மோதாமல் இருக்க வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை அறிவித்ததால் தான் இந்த ஜமாஅத் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஹதீஸை மறுப்பவர்கள் என்ற முத்திரையும் இதன் மீது குத்தப்படுகின்றது. இதற்கெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை. சாலிமுடைய இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். 

அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் 
கருத்து 
சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது.
 
இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் (
பி.ஜே.) 
கொண்டிருக்கின்றது. 
தெளிவு
ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவரின் பத்வா எ‌ன்று செய்தி தாள்கள் வெளியிட இத‌ன் உண்மை நிலைப்பாடு என்ன, எது எ‌ன்று பாராமல் ஆதாரப்பூர்வமான ஹதீதையும், சவுதி உலமாக்களையும் பரிகசித்து தனது வழிகேடான கோரப் பற்களை வெளிக்காட்டினர்.. 

ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் அவர்கள் தனது அதிகாரப் பூர்வ வெப் தளத்தில் இந்த செய்தியின் உண்மை நிலைப்பாட்டை கூறுகையில்,


இந்த சஹாபி சாலிம் சம்பந்தமான எனது பத்வா பழமையானது .. 

இதில் நான் எங்கேயும் டிரைவர் என்றோ, வேலையாள் என்றோ அல்லது அது சம்பந்தமான ஒரு வார்த்தையோ சொல்லவில்லை. இன்னும் தாய்ப்பாலை கோப்பையில் எடுத்து கொடுக்க வேண்டும்..

 

இந்த மீடியாக்கள் எனது வார்த்தையை திரித்து கூறிவிட்டன...

இது அவர்கள் உலமாக்களை மட்டம் தட்ட செய்த வேலையாகும் எனக் கூறினார்கள் ... 


இந்த ஹதீத் ஆதாரப் பூர்வமானது .. 


இதனை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா வும், அலி ரழியல்லாஹு அன்ஹுவும் , இன்னும் சஹாபாக்களும் நடைமுறை செய்துள்ளனர்.. 

மேலும் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இமாம் இப்னுல் கையும் ,இமாம் சித்தீக் ஹசன் கான் , இமாம் இப்னு தைய்மியாஹ் போன்றவர்கள் ஆதாரமாக எடுத்துள்ளார்கள்... மேலும் அவர்கள் , இந்த ஹதீத் இந்த சூழ் நிலையில் உள்ள வளர்ப்பு பிள்ளைகளுக்கு பொருந்தும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.   


இன்னும் யமன் நாட்டில் வாழும் மூத்த அறிஞ்சர், ஷேக் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் வஸ்ஸாபி அவர்கள் இந்த ஹதீதுக்கு ஒரு தனி நூலே எழுதியுள்ளார்கள்..


இவற்றையெல்லாம் அறியாத பி.ஜே. கும்பல் , சகட்டுமேனிக்கு வாயில் வந்தவைகளை எல்லாம் உளறிவிட்டு தனது வழிகேடான,பரிகசிக்கும் கொள்கையான, ஆதாரபூர்வமான ஹதீதை மறுக்கும் நிலைப்பாடே பி.ஜே. யின் நிலைப்பாடும் என நா கூசாமல் கூறுகின்றனர்.. 

 

உலகில் என்ன நடக்கிறது என்று அறியாத கிணற்று தவளைகள் இவர்கள்.... என்ன பரிதாபம்.. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.... 


ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் அவர்களது முழுமையான் விளக்கமான பதிலை ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹயா சில்மி அவர்கள் அரபி மூலத்துடன் விளக்குவதை கேட்கலாம்...