[" ஹராம் " இன் பக்கம் அழைக்கும் P. J. கும்பலான SLTJ க்கு ஒரு மறுப்பு]
                     


அல் குர்ஆன் ஸுன்னாவின் தூய வடிவமான ஸஹாபா விளக்கத்தை நாம் நடைமுறை செய்து தெளிவாக எடுத்துச் சொல்லி வருவது உலகறிந்த உண்மை. இதன் அடிப்படையில் அசத்தியங்களையும் அசத்திய வாதிகளையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் ஏவலான தீமையை தடுங்கள் என்ற கட்டளைக்கு ஏற்ப இவ்வழிகேடர்களையும் அவர்களது வழிகெட்ட கொள்கையையும் மக்களுக்கு எச்சரித்தும் உபதேசித்தும் வருகிறோம். 


இவ்வகையில் தவ்ஹீதின் பெயரில் ஷிர்கையும் குப்ரையும் பித்அத்களையும் வளர்ப்பதோடு, அருமை ஸஹாபாக்களை திட்டியும் நையாண்டி செய்து கொண்டும், இது தான் தவ்ஹீத் கொள்கை என்று சவால் விட்டுக் கொண்டு இருக்கும் இந்த மௌட்டீக கும்பலான பீ. ஜே. யின் கூட்டங்களையும் அவர்களின் வழிகெட்ட கொள்கை வழிமுறைகளையும் எடுத்துக்காட்டும் போது இவற்றை நபி வழியில் முறையாக கையாளத்தெரியாமல் தவிக்கிறார்கள். 


தமது கூட்டங்களையும் கௌரவத்தையும் பாதுகாக்க இந்த பீ. ஜே. அண்ணனும்; அவரது தம்பிகளும் குஞ்சுகளும் மார்க்கத்தின் ஹராமாக்கப்பட்ட வழிமுறையான விவாத சவடால் விடும் போக்கை கூறிக் கூறி முறையான மறுப்புக்களை கொடுக்காமல் தப்பித் தப்பி ஒடுகின்றனர். 

இதன் அடிப்படையில் மீண்டும் அண்மையில் (ரபியுல் ஆகிர் 1432ஹி) நாம் இவர்களது வழிகெட்ட கொள்கை கோட்பாடுகளை ஆதரங்களுடன் தெளிவு காட்டினோம் இதற்கு மறுப்பு எழுத திரானியில்லாமல், மீண்டும் அதே விவாத சவடால் விடுக்கிறது இந்த கும்பல். 

இவ்வழிகெட்ட கும்பல்களின் இப்போக்கை அல் குர்ஆன் ஸ்ஸுன்னாவின் ஆதாரங்களுடன் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளோம். இன்னும் இவர்கள் பூஜிக்கும் அண்ணன் பீ. ஜே. விவாதம் செய்வது கூடும் என்று வெளியிட்ட போலி ஆதாரங்களுக்கு விளக்கமான பதிலையும் ஆதாரங்களையும், மின்னஞ்சலிலும், இணையத்தளத்திளும் (http://tamilsalafi.edicypages.com) வெளியிட்டோம். 


இவை அனைத்திற்கும் முறையான மறுப்பு ஏதும் எழுதாமல், ஹராமான விவாத சவடால் விடுவதும், அம்பலத்திற்கு ஆடவா? நேருக்கு நேர் வா? என்று மார்க்கத்தை நாடக மேடையாக்கி மக்களை மடையர்களாக்கி கொண்டிருக்கின்றனர்

இவர்கள் நாம் விவாதம் செய்வதில்லை என்பதை நன்றாக அறிந்துக் கொண்டு தப்பித்து கொள்வதற்காக இந்த ஹராமான செயலை செய்ய அழைகின்றனர். 


இவர்களது கூற்றில் உண்மையாளராக இருந்தால், எமது கொள்கை கோட்பாடுகளை எழுத்துமூலமாக மறுக்கட்டும். இதுவே ஆதாரத்தை வைத்திருப்பவன் அதை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். ஆதாரம் இல்லாதவன் தான், இவ்வாறான தடுமாற்றத்தில் இருப்பான். 


எந்தளவுக்கு என்றால் இவர்களது அண்ணனுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்புக்கொண்டும், பதிலில்லாமல் வாய் பொத்திவிட்டார். 


மேலும் செய்வதறியாது எமது சில பிக்ஹ் விடயங்களை அலட்டிக் கொண்டு தடுமாறினர். அதற்கும் எமது மறுப்புக்களை வெளியிட்டதும் தமது கௌரவுத்தையும் கூட்டத்தையும் பாதுகாக்க எமது மறுப்புக்களை மறைத்து அவர்களது மறுக்கப்பட்ட மறுப்பை மீண்டும் மீண்டும் வெளியிடுகன்றனர். இது தான் இவர்களது பரிதாபமான நிலை.


எனவே எமது நேரங்களை வீணடிக்காமலும் ஹராமை செய்ய அழைக்காமலும் , முடிந்தால் எமது மறுப்புக்களுக்கு முறையக ஒரு மறுப்பை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அபு யஹ்யா இஸாம் பின் அப்துல் காதிர் அஸ் ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி. webadmin • தினகரன் பத்திரிகையில் வெளியிட்ட மறுப்பு 
 • விவாதம் செய்வது ஹராமா? பி.ஜெ.
 • சஹாபாக்கள் மீது P . J .  யின் அவதூறுகளும் அதனை நியாயப்படுத்தி பேசும் அவரது வார்த்தைகளும் வாசிக்க
 • பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு அது பற்றிய எச்சரிக்கையும் உபதேசமும்
 • தவ்ஹீதின் பெயரால் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும்
 • விவாதம் செய்வது ஹராம் என்பதை மேலதிகமாக விளக்க , அஹ்லுஸ் 

  ஸுன்னா இமாம்கள் கூறிய கூற்றுக்களை கீழே தருகிறோம் . 


  1 . இமாம் ஆஜுரி ரஹீமஹுல்லாஹ் (ஹி 360 ) அவர்கள் , தங்களுடைய 
  கிதாப் , கிதாபுஸ் ஷரியா வில் 13 வது பாடத்தில் பின்வருமாறு ஒரு 
  தலைப்பே இட்டுள்ளார்கள். " மார்க்கத்தில் தர்க்கம் , விவாதம் செய்வதன் இழிவு " 


  2 . இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் கூற்று : 
  மார்க்க விடயத்தில் தர்க்கங்களை விட்டு விடுவது ஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்றாகும். ஆதாரம் கிதாப் உஸுளுஸ் ஸுன்னா 

  3 . இமாம் லாலக்காயி ( ஹி 418 ) அவர்கள் தங்களுடைய ஷரஹ் இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ என்ற கிதாபில் ஒரு பாடத்திற்கு பின்வருமாறு தலைப்பிட்டுள்ளார்கள்.
  " தர்க்கமும் வாதமும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்த வந்துள்ள அறிவிப்புகள் " 

  4 . இமாம் இப்னு பத்தால் அல் அக்பரி ( ஹி 387 ) அவர்கள் , அல் இபானதுள் குப்ரா என்ற அவர்களுடைய கிதாபில் பின்வருமாறு தலைப்பிட்டுள்ளார்கள். 
  " மார்க்க விடயத்தில் தர்க்கம் , விவாதம் புரிவதின் இழிவும் , தர்க்க வாதிகளில் 
  இருந்து எச்சரிக்கையும் "