[சுய இன்பம் - குழம்பிய பி. ஜெ. கும்பலும் மொட்டை மறுப்புக்களும்]

குழம்பிய பி. ஜெ. கும்பலும் மொட்டை மறுப்புக்களும்

சுய இன்பமும் சலபி நிலைப்பாடும் என்று நாம் வெளியிட்ட பதிவுக்கு , அந்த பதிவில் சொல்லப்பட்ட ஆதாரங்களின் தன்மைகள் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் மொட்டையாக ஒரு விமர்சனத்தை பி. ஜெ. கொள்கைக்கு உட்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இல் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு உறுப்பினர் தனது இணையத் தளத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார்.

இந்த மொட்டை விமர்சனத்தின் ஆரம்பமே இருட்டடிப்புடன் தான். அதாவது 

" //அண்மையில் கூட்டுக் குர்பானி பற்றி ஒரு விளக்கத்தை கொடுத்ததும் அதில் அவா்கள் செய்த மடமைத்தனத்தை சகோதரர் பி.ஜெயின் இணையதளம் போட்டு உடைத்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.// " 

என்று கூறியுள்ளார்கள். இது மட்டுமில்லாமல் இந்த பி. ஜெ. கும்பல் தங்களுடைய அழைப்பு என்ற " தர்க்கத்தின் வார்ப்பான " பத்திரிக்கையிலும் இதே காரியத்தை செய்துள்ளார்கள். இவர்கள் கூறும் இவர்களது மடத்தனமான மறுப்புக்கு


 " ஆய்வு என்று குழப்புவர்களும் பித் அத்களை வளர்ப்பவர்களும் " 


என்ற தலைப்பில், டிசெம்பர் 5 ம் திகதி வெளியிட்ட மறுப்பை, கண்டு கொள்ளாதவர்கள் போன்று இருக்கிறார்கள். இன்னும், அந்த மடத்தனமான அவர்களது பழைய மறுப்பை சுட்டிக் காட்டிக் கொண்டு அலைகிறார்கள். 


இவ்வாறு தங்களுடைய மடத்தனத்தை மற்றும் இமேஜை தற்காத்துக் கொள்ள செய்வதறியாது தடுமாறுகிறார்கள். சரி, இனியாவது எங்களுடைய மறுப்புக்கு ஒரு மறுப்பு தருகிறார்களா என்று காத்திருக்கிறோம். 


அடுத்து , மேலே சுட்டிக்காட்டியவாறு, சுய இன்பம் பற்றி நாம் வைத்த ஆதாரங்களை மறுக்காமல், மழுப்பி , தங்களுடைய ஒரு கட்டுரையை பார்வை இடும் படி கூறி மொட்டையாக முடித்துக் கொண்டார்கள். இது இவர்கள் சலபி விளக்கங்களுக்கு மறுப்பு சொல்ல தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

பரவாயில்லை, நாம் இவர்கள் சுட்டிக் காட்டிய அந்த கட்டுரையில் உள்ள விடயங்களின் ஆதாரமில்லாத தன்மைகளையும் , ஆதாரம் என்று குழப்பிய ஆய்வுகளையும் கீழே தெளிவு படுத்துகிறோம். இவர்களால் முடிந்தால் , எமது இந்த விமர்சனத்தையாவது முறையாக விமர்சிக்கட்டும். 

சுய இன்பம் ஹராம் என்பதற்கு, கீழே வரும் வசனத்தை போட்டுள்ளார்கள். 


" // (நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7 ) // " 


இந்த வசனத்தில் , வெட்கத் தலங்களை ( மர்ம ஸ்தானங்களை ) பாதுகாத்து கொள்வார்கள் என்று தான் உள்ளது. பார்க்க ஷேக் இக்பால் மதனி தர்ஜுமா. 


சரி, இவர்கள் வாதப்படியே பார்த்தாலும் , இங்கே அல்லாஹ் சுபஹானஹு தாலா கற்பை பாதுகாப்பார்கள் என்று கூறியுள்லானே தவிர சுய இன்பம் பற்றிய பேச்சே இல்லை.

இன்னும் வேறு வழியில் கற்பை இழந்தால் வரம்பு மீறியவர்கள் ஆகிவிடும் என்பது தான் ஆயத்தின் கருத்து. சுய இன்பம் கற்பை இழக்க செய்யுமா ? இவர்களுக்கு இவர்கள் கொடுத்த கற்பு என்ற மொழிபெயர்ப்புக்கு இவர்களுக்கே அர்த்தம் என்ன வென்றே தெரியாது. 

" கற்பு இல்லை" என்பதன விளக்கம் , பெண் என்றால், தனது கணவன் தவிர்ந்து மற்றவர்களுடன் பாலியல் தொடர்ப்பு வைப்பது, ஆண் என்றால் மனைவி , மற்றும் அடிமைகள் அல்லது வலது கரங்கள் சொந்தமாக்கப்பட்ட பெண்களை தவிர ஏனைய பெண்களுடன் பாலியல் தொடர்ப்பு வைப்பது. 


எனவே, இங்கே அல்லாஹ் சுபஹானஹு தாலா பாலியல் தொடர்ப்புக்கு ஹலால் ஆன ஆண் பெண் தவிர்ந்து ஏனையோரிடம் தனது பாலியல் தேவையை தீர்ப்பதை தான் குறிப்பிடுகின்றான் என்பதை கற்பு என்றால் என்ன என்று அறிந்தவர்கள் இலகுவாக புரிந்துக் கொள்வார்கள். 


ஆனால் இந்த கும்பல் சுய இன்பத்தையும் கற்பை இழக்கச் செய்யும் ஒரு காரியமாக்கி விட்டார்கள். என்ன செய்வது, இவர்களுக்கு உலக அறிவுமில்லை ... மார்க்க அறிவுமில்லை. இவர்கள் மொழிபெயர்த்த கற்பு என்ற வார்த்தைக்கு இவர்களுக்கே அர்த்தம் தெரியவில்லை.


இவ்வாறு இந்த குர் ஆன் ஆயத்தை தலைகீழ் ஆக விளங்கி இந்த அடிப்படையிலேயே தனது மடத்தனத்தை தொடருகின்றார்கள். 


எனவே, முதல் கோணல் முற்றும் கோணல் என்ற அடிப்படையில் இவர்களது அடிப்படையான கோணல் சுட்டிக் காட்டப்பட்டுவிட்டது. 

அல்லாஹ்வுக்கு பயப்படுகிறவர்களாக இருந்தால் , மொட்டையாக இல்லாமல் முறையாக எமது விமர்சனங்களை விமர்சிக்கட்டும். சத்தியத்தை குழப்பாமல் , சத்தியம் நிரூபிக்கப்பட்டால் ஏற்பவர்களாக இருக்கட்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.