[சஹாபாக்கள் மீது P.J. யின் அவதூறுகளும் அதனை நியாயப்படுத்தி பேசும் அவரது வார்த்தைகளும்]


கேள்வி :அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணன் பி.ஜே. அவர்களுக்கு நீங்கள் சகாபாக்களை கிரிமினல் என்று சொன்னதாகவும் மேலும் அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும் போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகின்றார்களே இது உண்மையா?


பதில் : va alaikumus salaam. அந்த 72 கூட்டம் என்ற உரை இணைய தளத்தில் உள்ளது. அதை முழுமையாகக் கேளுங்கள். உண்மையை நீங்களே உணர்வீர்கள். அலீ ரலி அவர்களுக்கும் முஆவியா ரலி அவர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் சமாதானத்தில் முடிந்தது. இருவர் சார்பிலும் தலா ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டனர். அலீ ரலி அவர்களின் சார்பில் நடுவராக இருந்த அபூ மூஸா நேர்மையாக வெளிப்படையாக நடந்து கொண்டார். ஆனால் முஆவியா ரலி சார்பில் நடுவராக இருந்த அம்ர் பின் ஆஸ் அப்படி நடக்கவில்லை. நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், மோசடி ஆகியன மார்க்கத்தில் தெளிவாகத் தடுக்கப்பட்டிருந்தும் அதை அவர் செய்தார். அபூ மூஸா அப்பாவியாக நடந்து கொண்டார். ஆனால் அம்ர் பின் ஆஸ் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் நடந்து கொண்டார். கிரிமினலாகச் சிந்தித்தார் என்ற கருத்தில் நான் பேசினேன். இவ்வாறு நடந்து கொண்ட நபரைக் கவனத்தில் கொண்டவர்கள் சஹாபியை இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கின்றனர். நடந்து கொண்ட செயலைக் கவனிப்பவர்கள் இந்தச் செயலை இந்த வார்த்தையால் வர்ணிப்பது சரிதான் என்று புரிந்து கொண்டனர். அம்ர் பின் ஆஸ் செய்தது போன்ற செயலை இன்றைக்கு ஒருவர் செய்தால் அதை எந்த வார்த்தையால் விமர்சிப்பார்கள்? அவர் நடந்து கொண்டது போல் இப்போது ஒருவர் நடந்து கொண்டால் அது அனுமதிக்கப்பட்டது என்று கூறுவார்களா? என்னுடைய பார்வையில் நன் செய்த விமர்சனத்தில் மார்க்க அடிப்படையில் எந்தத் தவ்றும் இல்லை. அது போல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கும் போது அவ்ரகளின் குடும்பத்து நபித்தோழர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பற்றி இரகசிய ஆலோசனை நடத்தியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நபிகள் நாயகம் மரணித்து விட்டால் ஆட்சிப் பொறுப்பை நம்மிடம் தர மாட்டார்கள். நபிகள் நாயகம் மரணப் படுக்கையில் கிடக்கும் போதே அதை நமக்காக கேட்போம் என்று பேசியது எனக்கு அருவருப்பாகவே தெரிகிறது. திண்னை எப்பொது காலியாகும் என்ற மனப்பான்மை இதில் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது என் விமர்சனத்தில் தவறும் இல்லை. நபிகள் நாயம மரணப் படுக்கையில் கிடக்கும் போது இப்படி நட்க்கலாமா என்று நபியை நேசிப்பவர்கள் எண்ணுவார்கள். நபியை விட அதிகமாக நபித் தோழரை நேசிப்பவ்ர்கள் எப்படி சஹாபியை விமர்சிக்கலாம் என்பார்கள். எனது இந்த விமர்சனத்தை உரிய முறையில் கவனிக்காதவர்களுக்காக நான் எனக்கு சரி என்று பட்டதை மாற்றிக் கொள்ள முடியாது. உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு மார்க்க ஆதாரத்துடன் எனது விமர்சனம் தவறு என்று சுட்டிக் காட்டினால் அது சரியாகவும் இருந்தால் நான் மாற்றிக் கொள்வேன்.


சஹாபாக்கள் மீது P . J .  யின் அவதூறுகளும் 

அதனை நியாயப்படுத்தி பேசும் அவரது வார்த்தைகளும் 


அருமை சஹாபாக்களை நா கூசாமல் விமர்சித்து விட்டு , நபியை நேசிப்பவர்கள்

நபித் தோழர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்களா என்று கேட்பார்கள் ? என்று கேட்கிறார். ந'வூதுபில்லாஹ்  .

இந்த பூமியில், அருமை சஹாபாக்களை விடவும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசித்தவர்கள் உண்டா ?  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்  , ஈமானில் முந்திக்கொண்டவர்களுக்காக துஆ செய்யுங்கள் என்று ஏவப்பட்டவர்கள் , என்னுடைய தோழர்களை திட்டாதீர்கள் என்று தடுக்கப்பட்டவர்கள். இவர்களது 

விடயத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவிய பின் , விமர்சிக்கலாமா ? குறை கூறலாமா ? நபியை நேசிப்பதில் அவர்கள், அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும் என்று நடந்து கொண்டார்கள் என்று கூறலாமா ? இது அருமை சஹாபாக்களை நிந்திப்பதில் அடங்காதா ? அல்லது, இவர் அருமை சஹாபாக்களை விடவும் நபியை நேசிப்பவராக தன்னை சித்தரிக்க முனைகிறாரா ?  

இவர் நிந்திக்கின்ற  மாதிரிதான் இமாம்களான புஹாரி முஸ்லிம் போன்றோர் விமர்சிக்கிறார்களா ? இவர் அருமை சஹாபாக்களை பழித்துவிட்டு இமாம்கள் மீதும் வெட்கம் கூச்சம் இல்லாமல் பழி சுமத்தலாமா ? இவரது இந்த கொள்கைக்கும் ஷீயா கொள்கைக்கும் வித்தியாசம் இருக்கிறதா ? எனது விமர்சனத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்  கொள்வேன் என்று கூச்சம் இல்லாமல் கூறி அருமை சஹாபாக்களை விமர்சித்தேன் என்று ஏற்றுக்கொள்வாரா ? 

அருமை சஹாபாக்கள் மீது பொய்யையும்  புரட்டையும் இட்டுக் கட்டப்பட்ட வரலாற்று 

விடயங்களை ஆதாரமாகக் கொண்டு , ஷரியத்தின் எல்லைகளையும் மீறி அருமை 

சஹாபாக்களை கிரிமினலாகவும் , பதவி பேராசை பிடித்தவர்கள் என்றும் கூறும் இவரை விட ஒரு கிரிமினலும், பேருக்காகவும் புகழுக்காவும் தடுமாறும் ஒரு மனிதன் உண்டா ? 

  • சஹாபாக்கள் மீது பொய்யான அவதூறுகளும் வரலாற்று உண்மைகளும் ஆடியோ

ஆம்! அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை  சொல்லும்போது, கேட்கும்போது, எழுதும்போது ‘ரழியல்லாஹு அன்ஹ்’ என்று கூறுவது சிறப்பாகும். அவர்களின் நேர்மையை நம்ப வேண்டும். இஸ்லாத்தில் அவர்கள் முந்தியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது சிறப்புக்களைப் பரப்ப வேண்டும். மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். அவர்களை வெறுப்பவர்கள், கோபிப்பவர்கள், நிந்திப்பவர்கள், குறைசொல்பவர்கள், நையாண்டிபண்ணுபவர்கள், விமர்சிப்பவர்கள், இழித்துப் பேசுபவர்கள், ஏசுபவர்கள், திட்டுபவர்கள், சபிப்பவர்கள், மட்டு மரியாதையற்ற முறையில் அவர்களைக் கையாளுபவர்கள் போன்றோரை விட்டு நீங்கி இருத்தல் வேண்டும். இவை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமா அத்தினரின் நம்பிக்கைக் கோட்பாடான அகீதா  சார்ந்ததாகும்.

சிறப்புமிக்க நபித் தோழர்களை கண்ணியப்படுத்துவது நேசிப்பது என்பது சர்வ சாதாரணமான விடயமன்று. உண்மையில் அது முழுக்க முழுக்க அகீதாவுடன் பின்னிப்பிணைந்தது, இதில் ஏற்படுகின்ற கொஞ்சநஞ்ச அசைவும், ஆட்டமும், தளர்வும்கூட மிகப் பாரதூரமானது. ஏனெனில் சஹாபாக்கள் ஊடாகத்தான் குர்ஆனையும் ஸுன்னாவையும் அப்பழுக்கற்ற முறையில் அணு அணுவாக அப்படியே அல்லாஹ் பாதுகாத்து அடுத்தவர் கையில் தவழச் செய்தான். அவர்களின் முதன்மையில், நேர்மையில், மகிமையில் ஊறு ஏற்படுமென்றால் அது இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கே சந்தேகமின்றி பங்கம் ஏற்படுத்தும்.

கண்ணியமிக்க நபித் தோழர்களை ஏதோ நம்மைப் போன்று சாமானியர்களாக எண்ணுவது, நோக்குவது, கையாளுவது, வளர்ந்து முற்றி அவர்களை தரக்குறைவாக பேசவும், எழுதவும், வாய்க்கு வந்தவாறெல்லாம் தாறுமாறாக விமர்சிக்கவும் இன்று சமூகத்தில் இவர்கள் தலைப்பட்டுள்ளனர். இப்போக்கு இத்தகையோரது நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டம்காணச் செய்யும். சஹாபாக்களை வெறுப்பவர் காஃபிர் என இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அறுதியாக, உறுதியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 


பின்வரும் ஹதீஸ் கவனத்துக்குரியது.

‘என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! எனக்குப் பின் அவர்களை நீங்கள் இலக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம்! எவர் அவர்களை நேசித்தாரோ என்னை நேசிப்பதன் நிமித்தம் அவர் அவர்களை நேசித்தார். மேலும் எவர் அவர்களை வெறுத்தாரோ என்னை வெறுப்பதன் நிமித்தம் அவர் அவர்களை வெறுத்தார். மேலும் எவர் அவர்களை துன்புறுத்தினாரோ திண்ணமாக அவர் என்னை துன்புறுத்தி விட்டார். என்னை எவர் துன்புறுத்தினாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துன்புறுத்தி விட்டார். எவர் அல்லாஹ்வை துன்புறுத்தினாரோ அல்லாஹ் அவரைப் பிடிப்பான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்:திர்மிதி).


தம்மை, தம்மிடமிருந்தவற்றை அப்படியே இஸ்லாத்துக்காக அர்ப்பணிப்பு செய்த நபித் தோழர்கள், யதார்த்தத்தில் தீனுல் இஸ்லாத்தின் பாதுகாப்பு அரண்கள் , இஸ்லாத்தின் தூண்கள் , அவர்களின் உதிரம் அதன் நீர், அவர்களின் தியாகம் அதன் உரம். மனமார ஏற்போம்! மதிப்போம்! போற்றுவோம்! கண்ணியப்படுத்துவோம்!

அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தில் விளங்க முயற்சிபோம் . சஹாபிகளின் சிறப்பு, பெருமையை பின்பற்ற வேண்டும் என்பதை  பறைசாற்றுகின்ற. குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அறிஞர் பெருமக்களின் கூற்றுக்களை அடிக்கடி எமக்கிடையே பிரஸ்தாபிக்க வேண்டும். இவ்வழியில் நம் உள்ளங்களில் அவர்களின் அன்பு பொங்கிப் பிரவகிக்கும், அவர்களின் நேசம் நிரம்பி வழியும். அருமை சஹாபாக்கள் மீதான அன்பை, மரியாதையை, அவர்களின் கண்ணியத்தை, அந்தஸ்தை நமது உள்ளங்களிலே ஊட்டி வளர்த்திட வேண்டும்.


ஆக, அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமாக.