[கூட்டுக் குர்பானி -- ஆய்வு என்று குழப்புவர்களும் ,பித் -அத்களை வளர்ப்பவர்களும்]

ஆய்வு என்று குழப்புவர்களும் ,பித் -அத்களை வளர்ப்பவர்களும்

பி.ஜெ. யின் வெப்தளத்தில் உள்ள குழப்பத்திற்கு ஒரு விமர்சனம் பி. ஜெ . பற்றி பல விடயங்கள் ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் பேசி இருக்க , அவைகளுக்கு பதில் எழுத திராணியில்லாத இவர்கள் , ஷேக் யஹ்யா அவர்களின் ஒரு பத்வாவை பிடித்துக் கொண்டு , அவரை முழுமையாக மட்டம் தட்ட எத்தனிப்பது போல் தான் தோன்றுகிறது. அல்லாஹ் தான் அறிவான். 


இருந்தாலும், அந்த பத்வாவில், பிழை முறையாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. ஆரம்பமே, பொய்யும் புரட்டும். இதோ கிழே ....


பி. ஜெ . கோஷ்டியின் ஆரம்ப கூற்று ...>>>. 


ஆணவம் தலைக்கேறி பிற அறிஞ்சர்களையும் அவர்களது ஆய்வுகளையும் மிகவும் மட்டமாக நினைக்கும் .......


பதில் >> மேலே குறிப்பிட்டவாறு கூறி, ஷேக் யஹ்யா அவர்கள் கூறிய வார்த்தைகளை பிரசுரித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் நன்றி. இவர்கள் கூறுவது போன்று ஷேக் யஹ்யா அவர்கள் பிற அறிஞ்சர்களை மட்டமாக நினைப்பவராக இருந்தால் கீழ் கண்டவாறு கூறுவாரா ? 


// ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். // 


உலமாக்கள் , அறிஞ்சர்கள் எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள் என்பதுவே போதும் அவர் அறிஞ்சர்களையும் அவர்களது ஆய்வுகளையும் எவ்வளவு எவ்வளவு மதிக்கிறார் என்பதற்கு. முதலில் அடிப்படைகளை அறிஞ்சர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதோடு , அறிஞ்சர்கலான இமாம் மாலிக்கின் பத்வாவையும் , இமாம் இப்னு அப்துல் பர் அவர்களின் விளக்கங்களை தான் இந்த உழ்ஹிய்யா விடயத்தில் எடுத்து வைக்கிறார். 

இப்படி இருக்க , பட்டப் பகலில் கொள்ளை என்பது போல் , ஆணவம் தலைக்கேறி பிற அறிஞ்சர்களையும் அவர்களது ஆய்வுகளையும் மிகவும் மட்டமாக நினைக்கும் என்று பச்சை பொய்யை கூறுகிறார்கள். ஆரம்பமே பொய்யுடன் ......மற்றவைகளை பற்றி சொல்லவும் வேண்டுமா ? 


2 . இவர்களது முதலாவது வாதம் என்னவென்றால் , ஹுதைபியாவில் உம்ராவுக்காக சென்றபோது தான் தடுக்கப்பட்டார்கள் , ஆனால் ஷேக் யஹ்யா அவர்கள் , ஹஜ்ஜுக்காக சென்றபோது தான் தடுக்கப்பட்டார்கள் என்று தனது அரை குறை ஆய்வை முன்வைக்கிறார் என்று கூறிவிட்டு, இருப்பினும் ஷேக் யஹ்யா அவர்கள் ஹஜ்ஜை, உம்ரா என்று பிழையாக விளங்கி குறிப்பிட்டாலும், ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸை ஆதாரமாக கொள்ளலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று வேறு கூறுகிறார்கள்.


இது எப்படி என்றால் , உம்ராவை ஹஜ் என்று, தனது அரை குறை ஆய்வின் மூலம் மாற்றினாலும் ஆதாரத்திற்கு அந்த ஹதீஸை எடுக்கலாம் என்று இவர்கள் கூறுவதே போதும் ஆதாரத்தில் பிழை இல்லை , வார்த்தையில் தான் பிழை இருக்கிறது என்பதற்கு. 


சரி இவர்கள் கூறுவது போன்று வார்த்தையிலும் பிழை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அல்லாஹ் குர் ஆனில் இது பற்றி கூறும்போது கூறுகிறான்


" وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ " ,


{2:196 }


அதாவது ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; " 


ஹஜ் சம்பந்தப்பட்ட விடயம் பற்றி பேச எடுத்துக் கொண்டதாலும், அல்லாஹ் பொதுவாக ஹஜ் உம்ரா என்று பாவித்து இருப்பதாலும் , ஏனைய ரிவாயத்துக்களில் ஹஜ் என்றும் உள்ளது , உம்ரா என்றும் உள்ளது. அத்தோடு இரண்டுக்குமே அந்த ஹதீஸை ஆதாரமாக எடுக்கலாம் என்பதாலும் ஹஜ் என்று குறிப்பிட்டு, விடயத்தை தொடர்ந்து செல்வது தவறில்லை. 


இவர்களோ பிழை தேடுவதற்கு ஒன்றும் இல்லாமல் இதனை தூக்கி பிடித்து இதோ பாருங்கள் , உம்ராவின் செயலை ஹஜ் என்று கூறுகிறார், இதுவா ஆய்வு செய்யும் லட்சணம் என்று கூறுகிறார்கள். இது இவர்களது மடத்தனத்தின் இன்னொரு வெளிப்பாடு. 


ஹஜ்ஜுப் பெருநாளில் கூட்டாக உழ்ஹிய்யா கொடுக்கலாம் என்பதற்கு தெளிவான ஆதாரம் உள்ளது என்று கூறி இவர்கள் வைக்கும் ஹதீஸை பாருங்கள்.


“நாம் நபியவர்களுடன் ஒரு பிரயாணத்திலிருந்தபொழுது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது.மாட்டில் ஏழு நபர்களும் ஒட்டகத்தில் பத்து நபர்களும் பங்கெடுத்தோம்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ் அன்ஹ் ஆதாரம்: திர்மிதீ 


மேலே உள்ள ஹதீதில் , ஹஜ்ஜுப் பெருநாள் என்று தெளிவாக உள்ளது , எனவே, சஹாபாக்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் கூட்டு சேர்ந்து கொடுத்துள்ளார்கள் என்று தெளிவாகி விட்டது என்று அப்துல் நாசர் கூறுகிறார். 


அத்தோடு இது ஹாஜிகள் அல்லாதவர்கள் கூட்டு சேர்வதற்கு தெளிவான ஆதாரம் என்று இவர் கூறுவதும், இன்னும் அதை தொடர்ந்து இந்த ஹதீதை அடிப்படையாக கொண்டு ஏனைய சம்பந்தம் இல்லாத பேச்சுகளையும் இவர் தொடர்ந்துக் கொண்டு செல்வதாலும், இவருக்கு சுருக்கமாக பதிலளிக்க ஆசைப்படுகிறேன். 


உழ்ஹிய்யா என்பதற்கும் ஹதி என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இவர் சொல்லும் வித்தியாசம் அல்ல . என்று கூறிவிட்டு, அப்துல் நாசர் அவர்கள் கூறுகிறார் , 


உழ்ஹிய்யா விரிந்த அர்த்தம் கொண்டது. ஹதிய் சுருங்கிய அர்த்தம் கொண்டது. அதாவது. மனிதன் என்ற சொல்லுக்கும் உயிரினம் என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் உள்ளதோ அதே வித்தியாசம் தான் உழ்ஹிய்யா என்ற ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானுக்கும் , ஹஜ் கடமையை செய்பவர்கள் கொடுக்கும் ஹதிய் க்கும் உள்ள வித்தியாசம் என்கிறார். 


இவ்வாறு குறிப்பிட்டு ஹதீதுகளில் ஹதிய் யை உழ்ஹிய்யா என்றும் குறிப்பிட்டு வந்துள்ளதால் ஹதிய் குரிய சட்டம் உழ்ஹிய்யா வுக்கும் பொருந்தும் என்கிறார். அல்லாஹு முஸ்தஹான். தர்க்க சாஸ்திரத்தை வைத்து விளையாடுகிறார். 


இவரது உதாரணத்தின் அடிப்படையில் பார்த்தாலும் இது பொருந்தாது. இவரது உதாரணமான உயிரினம் என்பதில் பறவை, மிருகம் , மனிதன் எல்லாம் அடங்கும். எனவே, மிருகதுக்குரிய சட்டம் மனிதனுக்கு பொருந்துமா ? 


கருத்துக்களின் அடிப்படையில் ஒன்றுக்குள் ஒன்று அமைந்தாலும் நிச்சயமாக சட்டங்கள் தனித் தனியாக தான் அமையும். மிருகங்களின் சட்டத்தை மனிதனில் அமுல் படுத்தினால் என்ன வாகும் ? என்ன மடத்தனமான வாதங்கள் இவை ? 


இதனை இன்னும் விளக்கமாக ஒரு உதாரணத்தில் விளக்கலாம். அல்லாஹ் சுபஹானஹுதாலா ஸக்காத்தை பற்றி குறிப்பிடும் பொது " ஸதகா எனும் தானங்கள் ...  


 إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ


ஸதகா வில் ஸக்காத்தும் அடங்கிவிட்டது. எனவே, ஸதகாவின் சட்டத்தை ஸக்காத்தில் பாவிக்கலாமா ? என்ன முட்டாள் தனமான தர்க்க சாஸ்திர வாதங்கள் ? அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.


மேலே, ஹதீஸில் ஹஜ்ஜுப் பெருநாள் என்ற வாசகம் உள்ளது என்று தூக்கி பிடிக்கும் இவர், ஏன் அதே ஹதீஸில் உள்ள "பிரயாணத்தில் " என்ற வாசகத்தை தூக்கி பிடிக்கவில்லை. 


ஹஜ்ஜுப் பெருநாள் என்பது பிரயாணத்திலும் வரும், ஊரில் இருக்கும் போதும் வரும். பிரயாணத்தில் இருக்கும் போது என்று கூறுவது ஹஜ்ஜுக்காக , தடுக்கப்பட்ட உம்ராவுக்காக என்று பொருள் கொள்வது தான் ஹதீஸுகளை சேர்த்து விளங்கும் வழிமுறை. 


இன்னும் அந்த அறிவிப்பில், மொட்டையாக பெருநாள் தினத்தில் என்று மட்டுமே உள்ளது. உழ்ஹிய்யா என்றும் இல்லை. ஹதிய் என்றும் இல்லை.


அத்தோடு, ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மூன்று அமல்கள் இடம்பெறும். 

அவையாவன 

1 . ஹாஜிகள் கொடுக்கும் ஹதிய். 


2 . ஹஜ் கடமை செய்யாத மினா , முஸ்தலிபாவில் வாழுவோரும், ஏனைய பிரதேசங்களில் வாழுவோரும் கொடுக்கும் உழ்ஹிய்யா . 


3 . ஹஜ் கடமை செய்ய சென்றவர்கள் இடையில் ஏதும் காரணங்களினால் தடுக்கப் பட்டால் ஹதியில் முஹ்ஷர் 


எனவே, ஹஜ்ஜுப் பெருநாள் என்ற வாசகத்தை மட்டும் வைத்து எந்த அமல் என்று, எப்படி தீர்ப்பு எடுப்பது ? 


மாற்றமாக , ஹுதைபிய்யா என்ற பிரயாணம் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்போடும் , பிரயாணத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் என்ற இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்போடும் சேர்த்து விளங்கினால் , கூட்டு சேர்ந்தது ஹதியில் தான் என்று தெளிவாகும். இது தான் ஹதீஸ்களை ஒன்றுக் கொன்று முரண்படாமல் விளங்கும் முறை.


இவர்களது ஆதாரமும் இவர்களுக்கு முரணாகவே தான் இருக்கிறது. பிரயாணத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது ஹதியை தான் குறிக்கிறது. 


எனவே, இவர்கள் ஆதாரமாக எடுத்த ஹதீஸிலும் உழ்ஹிய்யாவில் கூட்டாக கொடுப்பதற்கு இல்லை.

இந்த அடிப்படையில் ஹாஜிகள் அல்லாதவர்கள் உழ்ஹிய்யாவில் கூட்டு சேர்வது சம்பந்தப்பட்ட பேச்சுகள் அனைத்தும் ஆதாரமில்லாத வாதங்கள் அன்றி வேறில்லை. 


அடுத்தது , இமாம் மாலிக்கின் பத்வா. 


ஹதீசையே ஹதீசுக்கு முரணாக காணும் இந்த மக்கள் இமாம் மாலிக்கின் பத்வாவை அவருக்கு முரணாக வைப்பது ஆச்சரியமில்லை. 


இவர்கள் கூறுவது போன்று இமாம் மாலிக்கின் வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்தால் ஹஜ்ஜிலும் கூட்டு சேர முடியாது , உழ்ஹிய்யாவிலும் கூட்டு சேர முடியாது என்பதாக அமையும். இப்படியான ஒரு பத்வாவை இமாம் மாலிக்கிடம் இருந்து வரமுடியுமா ? 


இன்னும் இமாம் மாலிக் பேசுவதே அபூ அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உழ்ஹிய்யா ஹதீஸை வைத்து. இவர்களோ இமாம் மாலிக் அவர்கள் தனது பத்வாவுக்கு மேல் பகுதியில் கூறியவைகளை கவனத்தில் கொள்ளாமல் , இமாம் மாலிக்கின் பேச்சின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு , இமாம் மாலிக்கின் வார்த்தைகளை இமாம் மாலிக் அவர்களுக்கு முரணாக தலைகீழாக சொல்கிறார்கள். 


இந்த லட்சணத்தில் , இவர்கள் ஆய்வு செய்வது இயற்கைதான். ஏனெனில் இவர்களது முக்கிய மார்க்க போதகர் P.J. , நபி மொழியை குர் ஆனுக்கு முரணாக காண்பார். நபி மொழியை நபி மொழிக்கு முரணாக காண்பார். எனவே, சீடர்கள் இமாம்களின் வார்த்தைகளை அதே இமாமுக்கு முரணாக காண்பது இயற்கைதான். "எவரிடம் ( உழ்ஹிய்யா கொடுக்க ) சக்தியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ கண்டிப்பாக அவர் எமது தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்." ( இப்னு மாஜா 2123, ஹகிமா 2/289, அஹ்மத் 2/221 )

 

இந்த ஹதீதை இமாம் நாசீருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் ஹசன் என தீர்ப்பளித்துள்ளார்கள். 


ஆனால் இவர்களோ, அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பை மேற்கோள் காட்டி இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இது சஹாபியின் கூற்றா , நபியவர்களின் கூற்றா என்பதில் சந்தேகம் இருப்பதாக இமாம் இப்னு ஹஜரல் அஸ்கலானி அவர்களை ஆதாரமாக வைக்கிறார்.


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாணவர்களான சஹாபாக்களின் கூற்று; ஏனைய நபி மொழிகளின் கூற்றுக்கோ அல்லது ஏனைய சஹாபாக்களின் கூற்றுக்கோ முரண்படாமல் இருந்தாலும் இன்னும் அந்த விடயத்தில் வேறு ரிவாயத்துக்கள் இல்லை என்றால் , அந்த அருமை சஹாபியின் கூற்று ஆதாரமாகும் என்பது தான் உஅலமாவுள் முஸ்லிமீன் களின் தீர்ப்பு. 


சரி !,  இவரது அடிப்படையில் பார்த்தாலும் கடமையில்லாத ஒன்றுக்கு ஏன் இவ்வளவு பிரயாசித்தம் ? தனக்கு ஒரு அறுப்பு பிராணியை தனியே கொடுக்க முடியவில்லை என்றால் , கடமையில்லாத ஒன்றுக்கு ஏன் கூட்டு சேர வேண்டும் ? 


மேலும், இவர்களது இணையதளத்தில் வசதி உள்ளவர்கள் கொடுப்பது அவசியம் என்று வேறு சில ஆதரங்களை குர்பானி சட்டங்கள் என்ற நூலின் பிரதியை பதிந்து அதில் ஆதாரம் காட்டுகிறார்கள். 


இவர் என்ன இவைகளையெல்லாம் பார்க்காமலா இந்த விடயங்களை மறுக்க முனைத்து விட்டார் ? சஹாபியின் கூற்று என்று எடுத்துக் கொண்டாலும் , இவர்களின் { பி. ஜெ. கும்பல் } ஆதாரங்களின் அடிப்படையில் வசதி உள்ளவர்கள் அவசியம் கொடுக்க வேண்டும். 


நாம் நபியின் கூற்று என்று எடுத்து பதிந்த ஒரு விடயத்தை சஹாபியின் கூற்று என்று தட்டுவதின் நோக்கம் தான் என்ன ? இவர்கள் எம்மை தட்டுவதை நோக்கமாக கொண்டு நபி வழியையும் தட்டுகிறார்களா ? அல்லது இவர்களின் ஆதாரங்ககளுக்கு இவர்களே முரண்படுகிரார்களா ?  அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன்..


மேலே கட்டுரையில் சில முக்கியமான பகுதிகள் ஷேக் யஹ்யாவின் ஆடியோவில் இருந்து பெறப்பட்டது. ஷேக் யஹ்யாவின் பேச்சை விளக்கமாகவும், விரிவாகவும் தெரிந்துக் கொள்ள கீழ் உள்ள ஆடியோவை கேட்கவும்.