[பி.ஜே. ஒரு பூஜையா]

PJயின் குப்ரின் பயங்கரமான நிலைப்பாடு


ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்பது நல்ல விஷயம்தானே? இதில் கலந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? என்று சில சகோதரர்கள் நினைக்கலாம். ஆனால் TNTJவினர் ஷிர்க் பட்டியலில் எதையெல்லாம் வைத்துள்ளார்கள் என்று நீங்கள் அறிந்து கொண்டால் உண்மையிலேயே இது ஷிர்க் ஒழிப்பு அல்ல, மாறாக குஃப்ருக்கான அழைப்பு என்பதை புரிந்து கொள்வீர்கள்! இவர்களின் ஷிர்க் பட்டியலில் என்னென்ன இருக்கிறது பாருங்கள்.
நபியவர்களை சூனிய பாதிப்பிலிருந்து அல்லாஹ் பாதுக்காத்ததாக வரும் ஹதீஸ்களை நம்பினால் ஷிர்க்!
சிஹ்ர் என்ற கலையின் மூலம் கணவன் மனைவியை பிரிக்கும் செயலை கற்று கொண்டார்கள் என்ற அல்குர்ஆனின் 2:102 வசனத்தை நேரடி பொருள் கொண்டு நம்பினால் ஷிர்க்!
கண்ணேறு என்பது உண்மை என்றும் கண்ணேறுக்கு துஆ செய்ய சொல்லியும் நபியவர்கள் சொன்ன ஹதீஸ்களை நம்பினால் ஷிர்க்!
அஜ்வா பேரீச்சம்பழம், கருஞ்சீரகம் சம்மந்தமாக நபியவர்கள் சொன்ன ஹதீஸ்களை நம்பினால் ஷிர்க்!
இப்படி பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் குர்ஆன் வசனத்தை நேரடியாக பொருள்கொண்டு நம்புவதும் ஷிர்க் என்றும் புகாரி, முஸ்லிம் உட்பட எல்லா மார்க்க அறிஞர்களும் இந்த ஷிர்க்கை தெரியாமல் செய்து விட்டார்கள் என்றும் கொஞ்சம் வாய் கூசாமல் அவதூறு சொல்லி, ஷிர்க்கிற்கு பதினான்கு நூற்றாண்டுகளாக யாருமே சொல்லாத புது இலக்கணத்தை சொல்லும் இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு நாம் செல்லலாமா? யோசியுங்கள்!
குர்ஆன் ஹதீஸிற்கு தாங்கள் கொடுக்கும் விளக்கத்தை ஏற்காதவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள், நரகவாதிகள் என்று சொல்லும் இந்த நவீன   குழப்பவாதிகள் நடத்தும் நாடகத்திற்கு  செல்லலாமா என்பதை யோசியுங்கள் சகோதரர்களே!
தங்களை தவிர உலக முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகளாக நினைக்கும்  இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு சென்று அவர்கள் சொல்வதை உண்மைப்படுத்த போகிறீர்களா?
ஷிர்க்கை ஒழிக்கிறோம் என்ற பெயரில் குஃப்ருக்கு ஆதரவளித்த பாவம் நமக்கு வேண்டாம் சகோததரர்களே!
..பாவத்திலும், பகைமையிலும்  ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2) 

Pjயின் குப்ரின் பயங்கரமான நிலைப்பாடு

ஷிர்க் ஒழிப்பு மாநாடு


 بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
 الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد                                                         
SLTJ யை நோக்கி ஓர் மடல்
السلام عليكم ورحمة الله وبركاته 
பி.ஜேயின் குர்ஆன் மொழிபெயர்ப்பு முஸ்லிம் சமூகத்துக்கு அவசியமா? 
அறிவை அறிவைக் கொண்டு மோதும் வழிமுறையைக் கையாள்வதாகக் கூறும் SLTJ யை நோக்கி கூறுகிறோம் : 
பி.ஜேயின் தமிழ் தர்ஜுமா வெளிவந்த போது அதற்கு எதிராக நாம் கொடுத்த பகிரங்க மறுப்புக்கு ஏன் இன்னும் உங்களிடமிருந்து அறிவுபூர்வமாக பதில் வரவில்லை.

நாம் பி.ஜே தொடர்பாக கொடுத்த மறுப்புகளுக்கு ஏன் அறிவு ரீதியாக பதிலளிப்பதற்கு நீங்கள் பின்வாங்குகிறீர்கள்?

பி.ஜேயின் மீது நாம் கொடுத்துள்ள ஆதாரபூர்வமான தீர்ப்புகள் அனைத்தையும் முழுவதுமாகப் புறக்கணித்து பி.ஜேயை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதுதான் உங்களின் அறிவை அறிவோடு கையாளும் வழிமுறையா? 

பி.ஜெய்னுல் ஆபிதீனுக்கு நாம் கொடுத்துள்ள மறுப்புகள் :
•  பிறை விடயத்தில் பி.ஜே சமூகத்தைப் பிளவுபடுத்தி அதில் தனது தனிவழியைக் கையாண்டார் என்பதை நாம் எடுத்துக் காட்டினோம். அதற்கு இது வரை பதில் இல்லை.
•  பி.ஜே இலங்கைக்கு விஜயம் செய்த போது பிறை விடயத்தில் முஸ்லிம்கள் மத்தியிலுள்ள வேறுபாட்டை தீர்ப்பதற்காக அவருக்கு அழைப்புக் கொடுத்து எமது துண்டுப் பிரசுரத்தை அவருடைய கையிலேயே கொடுத்த பின்னரும் அந்த விடயத்தில் கவனம் செழுத்தாதது ஏன்?
•  பி.ஜேயின் தமிழ் தர்ஜுமாவின் குறைகளையும் வழிகேடுகளையும் எடுத்துக் காட்டி அதனை வாசிப்பது ஹராமாகும் என்ற எமது தீர்ப்புக்கு இது வரை பதில் இல்லை.
•  நபிமொழிகளில் பி.ஜே செய்த அநியாயத்திற்கும் துரோகத்திற்கும் மறுப்பளிப்பதற்காக 'நபிமொழியின் உண்மைகளும் மடமையின் தன்மைகளும்' என்ற தலைப்பில் நாம் முன்வைத்த மறுப்புக்கு ஏன் இன்னும் பதில் தரவில்லை?
•  பி.ஜே மார்க்கக் கல்வியை ஒரு கட்டுப்பாடில்லாமல் கையாளும் ஒரு ஸின்தீக் என்று நாம் அறிவித்த பின்னாலும் அதனை மறுத்து ஏன் இன்னும் பதில் வரவில்லை?
•  எனக்கும் பி.ஜே யிற்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் இறுதியாக நான் எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்காமல் பி.ஜே மௌனமானது ஏன்?
•  பி.ஜேயின் கொள்கைகளையும் காதியானிகளின் கொள்கைகளையும் ஒப்பிட்டு பி.ஜேயானியும் காதியானியும் எவ்வாறு ஒன்றுக் கொன்று ஒப்பாகவும் சமமாகவும் ஆகிறார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்டினோம். அதற்கும் பதில் தரவில்லை.
•  புனித அல் குர்ஆனின் நம்பிக்கை விடயத்திலும் அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகள் விடயத்திலும் சூனியத்தின் விடயத்திலும் பி.ஜேயின் ரித்தத்தை எடுத்துக் காட்டி பி.ஜே இஸ்லாத்தை விட்டும் வெளியேறி முர்தத் ஆகிவிட்டார் என்ற எமது பகிரங்கமான தீர்ப்பை நாம் வெளியிட்டோம். அதற்கும் இவர்கள் பதில் தரவில்லை.

இவ்வாறாக பி.ஜேயின் குழப்பங்களின் பட்டியலும் எமது மறுப்புகளின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. 

உண்மையில் பி.ஜேயிடம்  மார்க்கத்துக்கு முரணான கருத்துகள் இருந்தால் எம்மிடத்தில் முன்வைத்திருக்கலாமே! ஏன் அதனை முன்வைக்கவில்லை என்று அப்துர் ராஸிக் கேள்வி எழுப்புகிறார். 

ACJU இவர்களுடன் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். அதே போன்றுதான் SLTJ யும் எம்முடன் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவில்லை.
நாம் எப்போது இவர்களுக்கு எதிராக ஒரு மறுப்பை முன்வைத்தாலும் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட விவாதம் செய்தலுக்கு எம்மை இவர்கள் அழைத்து சவால் விடுவதோடு SLTJ யின் பதில் முடிந்துவிடும். 
 
எப்போதுமே எமது கல்வி பெற்றுக் கொள்ளும் வழிமுறையும் அதனை நிலைநாட்டும் வழிமுறையும் அதனைப் பிரச்சாரம் செய்யும் வழிமுறையும் எம்மிடத்தில் நபிவழியே அதன் வழிமுறையாகும். 
 
நீங்களும் நபிவழியை நேசிப்பவர்களாக இருந்தால் மறுப்புகளை நபிவழியில் எதிர்கொள்ளுங்கள். எமது அனைத்து மறுப்புகளையும் எமது இணைய தளத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். 
 
எமது இணைய தள முகவரி : http://tamilsalafi.edicypages.com 

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. பி.ஜே இலங்கை வருகிறார். நீங்கள் கருத்தை கருத்தால் எதிர் கொள்பவரென்றால் எமது கல்வி ரீதியான மறுப்புகளுக்கு கல்வி ரீதியான உங்கள் பதில்களை எமக்கு சம்பந்தமாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

SLTJ ஏன் மௌனமாக இருக்கிறது? நாம் முன்வைத்த மறுப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் மௌனமாக இருக்கிறார்களா? 

எமது மறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்  நாம் முன்வைத்துள்ள மறுப்புகளுக்கு கல்வி ரீதியான பதிலை இன்னும் ஏன் இவர்கள் முன்வைக்கவில்லை? 

நபிவழியே நம்வழி 

 சகல வல்லமைமிக்க அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வுக்குப் புகழ் சேர்த்து இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாமும் ஸலவாத்தும் கூறி அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நூபார் பின் நூஹ் லெப்பை ஆல மரைக்கார் அஸ் ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி ஆகிய நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை நோக்கி இடம் பெயர்ந்ததிலிருந்து ஹிஜ்ரி 1437 முஹர்ரம் பிறை 25 இல் இதனை 8/Nov/2015 வெளியிட்டேன் 
பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு அது பற்றிய 
எச்சரிக்கையும் உபதேசமும்

பி.ஜே. ஒரு பூஜையா ? இஸ்லாத்தை விட்டு வெளியேறி ரித்தத் ஆகி விட்டார்


அல்லாஹ் இருக்கிறானா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பதாகவும், அல்லாஹ் என்ற அல்லாஹ்வின் பெயர் அது அல்லாஹ்வின் பெயர் அல்ல அது அரபி பாஷையில் மொழி ரீதியாக கடவுளுக்கு பாவிக்கப்படும் ஒரு வார்த்தை எனவும், அது படைத்து பரிபாலிக்கும் தத்துவத்தின் பெயராகும் எனவும், அல்லாஹ் என்பது ஒரு சூப்பர் பவர் என்றும் கூறி வருகிறார்.


அது மட்டுமில்லாமல், இவர் சூனியத்தை நம்ப கூடாது என்றும், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை என்றும் , சூனியம் செய்யப்பட்டதாக ஆதாரப்ர்வமான ஹதீஸ்கள் புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தத்தில் காணப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், 


இவரது இந்த விளக்கங்களை இவர் விளக்கிய பின்னரும் எவராவது சூனியத்தை நம்பினால் அவர் முஷ்ரிக் என்றும் அவர் பின்னால் தொழ முடியாது என்றும் கூறி வருகிறார்.


மேலும், எழுத்து மூலமாக எம்மிடம் இருக்கும் அல்குர் ஆன் பாதுகாப்பாக வந்தடையவில்லை என்றும் , அதன் வசனங்களை தமிழில் இவரது விளக்கத்தின் அடிப்படையில் இரு வசனங்களை ஒரு வசனமாகவும், ஒரு வசனத்தை இரு வசனமாகவும் கோர்த்து தமிழ் குர் ஆன் மொழிபெயர்ப்பாக வெளியிட்டும் உள்ளார்.


இன்னும், அல்லாஹ்வின் பெயர் பண்புகளுக்கு விளக்கங்கள் சொல்லி அதனை திரித்து மறுத்தும் கூறி வருகிறார்.


ருமை சஹாபாக்களின் கல்வி , மார்க்க விளக்கங்கள் , பத்வாக்கள் , தப்சீர் விளக்கங்கள் தேவை இல்லை எனவும், அவைகளில் தவறுகள் இருப்பதாகவும் , அவைகளை எடுத்து நடக்க கூடாது என்றும், அவர்கள் கிரிமினல் , நம்ப வைத்து கழுத்தறுத்தல் மற்றும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துக் கொண்டார்கள் என்றும் கூறி வருகிறார்.


எனவே, இவரது இந்த குப்ர் ஆன போக்கை 2006 ம் ஆண்டில் சவூதி உலமாக்களிடம் முன்வைத்த போது ஷேக் உஸாமா அல் உதைபி ஹபிதஹுல்லாஹ் போன்றவர்கள் இவர் இஸ்லாத்தை விட்டும் வெளியிறங்கி ரித்தத் ஆகி விட்டார் என்றும் சொன்னார்கள்.


என்றாலும், 2013 ஜூலை மாதம் வரை இவருக்கு நேரடியாகவும், இணையத்தளங்கள் மூலமாகவும் மறுப்புக்களும் , விளக்கங்களும், உபதேசங்களும் செய்யப்பட்டு,


அது பலனளிக்காததால், இவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி ரித்தத் ஆகி விட்டார் என்று ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி அஸ் சைலாணி அவர்கள் தீர்ப்பாக பிரகடனம் செய்து விட்டார்கள்.


 • ஷேக் அஸ் ஸைலானியின் பத்வாவும் இஸ்லாத்தை விட்டு பி. ஜே. நீங்கி விட்டார் என்பதும் கேட்க 
 • பி. ஜெ . யின் பின்னணியும் அதன் உண்மைகளும் கேட்க 
 • ஒருவனை காபிராக்கும் தன்மைகளும் அதன் உண்மைகளும் கேட்க
 • பி. ஜே. யின் முர்தத் தன்மைகளும் அது சொல்லப்பட்டதன் உண்மைகளும் கேட்க


பி. ஜெ. யை பற்றி பி. ஜெ. யே அறிமுகம் செய்கிறார்

தனது கல்வி தகைமை பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு பாருங்கள். நான் சரியான கல்வியை முறையாக கற்கவில்லை என அவரே முழங்குகிறார்.


 " இன்றுவரை தான் சுயமாக ஆராய்ந்து தனது தர்க்கத்தையும் குதர்க்கத்தையும் மார்க்க பிரச்சாரத்தில் செய்து வருகிறேன் என்று அவர் அறியாமலேயே ஒப்பு கொண்டு விட்டார். 


நானும் { பி. ஜெ. } என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப், ஷிர்க், தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம்.தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம்.மத்ஹப் தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை. தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன்.அதுபோல் என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமி சிம் போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம். தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால் அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போது அது மொழி பெயர்க்கப்பட்டது. "


இதற்கு மேலும் இவரைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. இவரை பார்த்து ஒருவர் அறிஞ்சர் என்று சொன்னால் சொல்கிறவர்களை பற்றி நீங்களே தெரிந்து கொளுங்கள். • நபி வழியின் உண்மைகளும் மடைமையின் தன்மைகளும் 1  பாகம் 1  2 
 • நபி வழியின் உண்மைகளும் மடைமையின் தன்மைகளும் 2  பாகம்  1  2  3
 • நபி மொழியின் ஆராய்ச்சிகளும் பி.ஜே. யின் தர்க்கவாதங்களும் பாகம்  1  2

 • சஹாபாக்கள் மீது P . J .  யின் அவதூறுகளும் அதனை நியாயப்படுத்தி பேசும் அவரது வார்த்தைகளும் வாசிக்க

*****************************************************************

 • பி.ஜே.யின் குர் ஆண் மொழிபெயர்ப்பு - ஒரு தீர்ப்பும் உபதேசமும் QQQQ


 

 • அல் குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில் பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு அது பற்றிய எச்சரிக்கையும் உபதேசமும் முஜிபுர் ரஹ்மான் பி. ஜே விவாதம் பற்றி ஷேஹ் யஹ்யா சில்மி  .........  பதிவிறக்கம்      
 • பி. ஜே. யிடம் இருப்பது தவறுகளா அல்லது வழிகேடுகளா ? 1  2

**********************************************************************

 

**********************************************************************

பி.ஜெ. க்கு செய்யப்பட்ட நேரடி உபதேசங்கள்

******************************************
இமாம் இப்னு குதாமா அல் மக்தஸி (ரஹிமஹுல்லாஹ்)>>>>
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் அறிவித்து அது அவரிடமிருந்து ஸஹீஹானதாக வந்த ஒவ்வொன்றையும்
ஈமான் கொள்வது வாஜிபாகும்.  

அதை நாம் கண்டாலும் சரி அது எம்மை விட்டும் மறைந்ததாக இருந்தாலும் சரி.  நிச்சயமாக அது சத்தியமானதும்
, உண்மையானதும் என நாம் அறிவோம்.  அது எமது புத்திக்கு தென்பட்டாமலும் அல்லது அறியாமையாக இருந்தாலும் அதனது உண்மையான கருத்தை அறியாமல் இருந்தாலும் ஏற்றுக்கொள்வதின் கடமை சமமானதாகும். 

உதாரணத்திற்கு 
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ரூஹை பறிப்பதற்காக மலக்குல் மௌத் அவரிடம் வந்த போது அவரின் கன்னத்திற்கு அரைந்தார்.  அவரது கண் கீழே விழுந்தது.  அவர் தனது இரட்சகனின் பால் திரும்பினார்.  அல்லாஹ்தஆலா அவரது கண்னை மீட்டிக் கொடுத்தான்.

இன்னும் இவை போன்றவைகளில் எவை அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானதாகவும் அதன் அறிவிப்பாளர்கள் நீதமானவர்களகவும் காணப் படுகின்றதோ அதனை ஈமான் கொள்வோம்.  அதனை மறுக்கமாட்டோம்.  புறக்கணிக்க மாட்டோம்.