ஸலபீய்யா ஓர் அறிமுகம்

ஸலபீய்யா ஓர் அறிமுகம்


அஷ்ஷெய்க் ரபீஃ ‌பி‌ன் ஹதி ‌பி‌ன் உமைர் அல் மத்களி அவர்களின் நூலான " மகானத்து அஹ்லுல் ஹதீஸ் "  இலிருந்து


" ஸலபி என்பவர்கள் குர் ஆனையும் சுன்னாவையும் ஸஹாபாக்கள் தாபீயீன்களீன் வழிமுறையை நன்நோக்குடன் உறுதியாய் பற்றிப் பிடித்து பின்பற்றுபவர்கள்.


இவர்கள் ஏனையவர்களின் வார்த்தைகள், வழிகாட்டல்களை விடவும் ஸஹாபாக்கள் தாபியீன்களின் வார்த்தைகளுக்கும்  வழிகாட்டல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அது கொள்கை, வணக்கவழிபாடு, அன்றாட நடவடிக்கை, குனாதிசயம், அர‌சிய‌ல் மற்றும் சமூக விடயங்கள் போன்ற எந்த அம்சமாக இருப்பினும் சரியே!.


மார்க்கத்தில் அடிப்படையான விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் அல்லாஹ் அவனது தூதருக்கு அனுப்பிய வஹியின் அடிப்படையில் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் தூய்மையாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் தஃவா பாதையில் நிமிர்ந்து நிற்பார்கள். மேலும் இவர்கள் தான் நபித்துவத்தின் கல்வியை சுமப்பவர்கள்.


தீவிரப் போக்கை கையாண்டு மார்க்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை இவர்கள் மறுப்பார்கள். இன்னும் அசத்தியவாதிகளின் விடயங்களை அழித்து விடுவார்கள். இன்னும் ஜாஹில்களுடைய விளக்கங்களை எரித்து விடுவார்கள்.  இவர்கள்தான் யாரெல்லாம் இஸ்லாமிய பாதையிலிருந்து சரிந்து விட்டார்களோ அவர்களை இடியை போன்று தடுப்பார்கள்


உதாரணமாக


ஜஹ்மீய்யா, முஃதஸிலா, கவாரிஜ், றவாபிழ், முர்ஜியா, கத்ரிய்யா போன்ற கூட்டங்களும் இன்னும் எல்லா காலங்களிலும், எல்லா விடயங்களிலும் யாரெல்லாம் அல்லாஹ்வின் பாதையிலிருந்து த‌ன் இச்சைப் பிரகாரம் மாறிவிட்டார்களோ அவர்களை இடியைப் போன்று தடுப்பார்கள். இ‌தி‌ல் அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் எந்தப் பயமும் கிடையாது.


ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்கள் புகழ்ந்து சொன்ன கூட்டம் இவர்கள்தான்


" எப்பொழுதுமே என்னுடைய ஒரு கூட்டம் சத்தியத்தில் வெளிப்படையாக இருப்பார்கள். யாரெல்லாம் அவர்களுக்கு முரணாக ஏமாற்ற முயற்சி செய்வார்களோ இதனால் அவர்களுக்கு ஒரு குறையும் நடக்காது கியாம நாள் வரும் வரை "


அவர்கள்தான் வெற்றிபெற்ற கூட்டம். அவர்கள் நபியும் அவருடைய ஸஹாபாக்களும் இருந்த வழிமுறையில் இருப்பார்கள்.


" என்னுடைய கூட்டம் 73 பிரிவுகளாகப் பிரியும். எல்லாம் நரகத்திற்கு ஒன்றைத் தவிர "

எ‌ன்ற நபிமொழியில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்கள் குறிப்பாகவும் அந்த ஒரு கூட்டத்தின் வரைவிலக்கணத்தையும் எடுத்துக் காட்டினார்கள்.  இதை நாம் அதிகமாகவோ மிகைப்படுத்தியோ அல்லது தான்தோன்றித் தனமாகவோ சொல்லவில்லை. மாறாக இவையெல்லாம் குர் ஆன் சுன்னாவில் வ‌ந்த விடயங்களாகும். வரலாறு இத‌ன் சாட்சியாகும். மேலும்  இவர்களின் வார்த்தைகளும்இ நிலைப்பாடுகளும்இ நூல்களும் சாட்சிகளாகும்.


وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا


மேலும்இ இதற்கு அஹ்லுல் ஹதீஸ் நீங்கள் யாவரும் ஒ‌ன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய வேதமாகிய கயிற்றைப் பலமாக பறறிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நீங்கள் பிரிந்து ‌விட வேண்டாம்  ( அல் குர் ஆன் 3:103 )

மேலே குறிப்பிட்ட குர் ஆன் வசனத்தை இவர்கள் எப்பொழுதுமே தங்கள்  மனதில் நிறுத்தி செயற்படுவார்கள்.


இமாம் அல் அவ்ஸாயி கூறினார்கள் >>  

ஸுன்னத்தின் மீது உனது ஆத்மாவை  பொறுமையுடன் வைத்துக்கொள் 

முன்சென்ற)கூட்டத்தினர் நின்று கொண்டது போன்று நீயும் நின்றுக்கொள்அவர்கள் 

சொன்னவைகளேயே  நீ சொல்அவர்கள் தவிர்ந்து கொண்டவைகளை நீயும் 

விர்ந்துகொள்.   உனக்கு முன்சென்ற ( ஸஹாபாக்கள் ) நல்வர்களின் பாதையில் 

நீயும்  நடநிச்சயமாக அவர்களை  விசாலமாக்கி வைத்தது உன்னையும்  

விசாலமாக்கி வைக்கும் ஆதாரம் லாலக்காயி 

சத்தியத்தின் குரலே எங்கள் நோக்கு

அல்லாஹ்வின் திருப்தியே எங்கள் இலக்கு