பி.ஜெ. கொள்கைக்கு உட்பட்ட SLTJ யின் மொட்டை விமர்சனம்

Tuesday, January 18, 2011

 யஹ்யா ஸில்மியின் அடுத்த சில்மிசம்.  

பதிலுக்கு(?) பதில்.


அன்பின் இணையதள வாசகர்களே! கடந்த சில தினங்களுக்கு முன்பு சுய இன்பத்தை(?) ஹலாழாக்கிய யெஹ்யா சில்மியின் கேடு கெட்ட பத்வா தொடர்பான நமது கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.


அந்தக் கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் தர தைரியம் இல்லாத ஸ(க)லபிக் கூட்டம் திருக்குர்ஆன் வசனத்திற்கு மாத்திரம் திரித்து விளக்கம் கொடுத்துள்ளது.

.

அவர்கள் கொடுத்துள்ள மறுப்புக்குறிய நமது மறுப்பை வெளியிடுகிறோம்.


சுய இன்பம்(?) தொடர்பாக நாம் வெளியிட்ட கட்டுரையை படிக்க இங்கே க்லிக் செய்யவும்


ஸ(க)லபி வாதம் :


சுய இன்பம் பற்றி நாம் வைத்த ஆதாரங்களை மறுக்காமல், மழுப்பி, தங்களுடைய ஒரு கட்டுரையை பார்வை இடும் படி கூறி மொட்டையாக முடித்துக் கொண்டார்கள். இது இவர்கள் சலபி விளக்கங்களுக்கு மறுப்பு சொல்ல தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பரவாயில்லை இவர்கள் சுட்டிக் காட்டிய அந்த கட்டுரையில் உள்ள விடயங்களின் ஆதாரமில்லாத தன்மைகளையும்,ஆதாரம் என்று குழப்பிய ஆய்வுகளையும் கீழே தெளிவு படுத்துகிறோம். இவர்களால் முடிந்தால் ,எமது இந்த விமர்சனத்தையாவது முறையாக விமர்சிக்கட்டும்.


நமது பதில் :


ஸலபி விளக்கங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நாம் தடுமாறுவதாக உளரியுள்ள இந்த ஸ(க)லபி கும்பல் நாம் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுதிய கட்டுரைக்கு பதில் தர முடியாமல் தலையில் துன்டைப் போட்டுள்ளது நன்றாக தெரிகிறது.


அத்துடன் நமது கட்டுரைக்கு பதில் தருவதாக சொல்லும் இவர்கள் ஏன் ஒரு திருக்குர்ஆன் வசனத்திற்கு மாத்திரம் திரித்து விளக்கம் கொடுத்ததுடன் நிறுத்திக் கொண்டார்கள் என்பது படிக்கும் வாசகர்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.


“பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்பார்கள் தங்களிடம் மார்கம் பற்றிய தெளிவு இருந்தால் தான் நமது கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் தர முடியும்.


மார்க்கம் பற்றிய தெளிவு இல்லாமைதான் ஒரு குர்ஆன் வசனத்துடன் மறுப்பு நின்றதற்கான காரணம் என்பதை வாசகர்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.


ஸ(க)லபி வாதம் :


சுய இன்பம் ஹராம் என்பதற்குஇ கீழே வரும் வசனத்தை போட்டுள்ளார்கள். (நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7 ) 


இந்த வசனத்தில்,வெட்கத் தலங்களை ( மர்ம ஸ்தானங்களை ) பாதுகாத்து கொள்வார்கள் என்று தான் உள்ளது. பார்க்க ஷேக் இக்பால் மதனி தர்ஜுமா. 


சரி, இவர்கள் வாதப்படியே பார்த்தாலும் சுய இன்பம் பற்றிய பேச்சே இல்லை. இங்கே அல்லாஹ் சுபஹானஹு தாலா கற்பை பாதுகாப்பார்கள் என்று கூறியுள்ளான். 


இன்னும் வேறு வழியில் கற்பை இழந்தால் வரம்பு மீறியவர்கள் ஆகிவிடும் என்பது தான் ஆயத்தின் கருத்து. சுய இன்பம் கற்பை இழக்க செய்யுமா ? இவர்களுக்கு கற்பு என்றால் என்ன வென்றே தெரியாது. 


நமது விளக்கம் :


وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ  [المؤمنون: 5 - 7


(நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7)


மேற்கண்ட திருமறை வசனத்திற்கு நாம் கொடுத்த விளக்கத்தினை குறை கூற முற்பட்டவர்கள் இக்பால் மதனியின் மொழியாகத்தினை எடுத்துக் காட்டியுள்ளதுடன் குறிப்பிட்ட திருமறை வசனத்தில் சுய இன்பம் பற்றிய பேச்சே இல்லை அதனால் இந்த வசனம் சுய இன்பத்தினை தடை செய்யவில்லை என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.


(ஒரு வாதத்திற்காக இந்த வசனத்தில் சுய இன்பத்தைப் பற்றிய பேச்சில்லை என்று வைத்துக் கொள்வோம், இந்த வசனம் தவிர இன்னும் எத்தனையோ ஹதீஸ்களை நாம் நமது கட்டுரையில் எடுத்தெழுதியுள்ளோமே,அவைகளுக்கெல்லாம் பதில் தர திரானியில்லையா ? அல்லது பூனைக் குட்டி வெளியில் வந்து விடும் என்ற பயமா?)


மர்ம உருப்பை எந்த முறையில் பயண்படுத்தி உணர்வுகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான் அப்படிக் குறிப்பிடும் போது (நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் என்றுதான் குறிப்பிடுகிறான். சுய இன்பத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று மழுப்பல் மறுப்பெழுதியுள்ளார்கள்.


ஸ(க)லபிக் கொள்கையின் லச்சனம் மேற்கண்ட விளக்கத்தில்(?) தெளிவாகத் தெரிந்திருக்கும்.ஏன் என்றால் அதே வசனத்தின் தொடரிலேயே இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23: 5,6,7) என்று இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.


தங்களின் கருத்திற்கு சாதகமாக இக்பால் மதனியின் மொழி பெயர்ப்பைப் பயண்படுத்த முற்பட்டவர்கள் இக்பால் மதனி மொழியாக்கத்தின் பின் பகுதியை மறைத்ததுதான் ஸ(க)லபி கொள்கையின் தந்திரத் தன்மை.


இக்பால் மதனி அவர்கள் 23 வது அத்தியாயத்தின் 7வது வசனத்திற்கு செய்துள்ள மொழியாக்கம் இதுதான்


ஆகவே எவர்கள் இதனைத் தவிர (வேறு தவறான வழிகளைத் )தேடுகிறார்களோ அப்போது அவர்கள் தாம் வரம்பு மீறியவர்கள்.(23-7)


ஏன் இந்த வாசகம் ஸ(க)லபிகளின் பார்வையை விட்டும் காணாமல் போனது?


அடுத்து மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள். ஸலபிகள் என்று ஸஹாபாக்களின் கருத்துக்களை தூக்கிப் பிடிக்கும் இந்த கலபிகள் நபியவர்களின் வார்தையை கண்டு கொள்ளாமல் விட்டதே அவர்களின் வழிகேட்டிற்கு போதுமான ஆதாரம்.


இது தான் சில்மியின் ஷேக் மத்ஹபின் விளக்கமோ? ஷேக்மார்களிடன் படித்து அவா்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டவர்கள் தான் தஃவா செய்ய முடியும் என்று இதற்காகத் தான் பிரச்சாரம் செய்கிறார்களோ? 


நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன,இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது. (நூல் : அஹ்மத் 10490)


அஹ்மதில் பதிவு செய்யப் பட்டுள்ள மேற்கண்ட செய்தியில் இரண்டு கைகளும் விபச்சாரம் செய்கின்றன என்று நபியவர்கள் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்(இதற்குறிய மேலதிக விளக்கம் சுய இன்பமும் விபச்சாரமே என்ற நமது ஆய்வுக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது). 


இரண்டு கைகளுக்குறிய விபச்சாரத்தில் சுய இன்பம் அடங்குமா அடங்காதா? 


இந்த ஹதீஸிற்கு விளக்கம் இந்தியாவின் தினகரன் பத்திரிக்கையில் வந்தால் தான் ஸ(க)லபிகள் ஏற்றுக் கொள்வார்கள் போலும்.


ஸ(க)லபி வாதம் :


கற்பு இல்லை என்பது பெண் என்றால், தனது கணவன் தவிர்ந்து மற்றவர்களுடன் பாலியல் தொடர்ப்பு வைப்பது, ஆண் என்றால் மனைவி, மற்றும் அடிமைகள் அல்லது வலது கரங்கள் சொந்தமாக்கப்பட்ட பெண்களை தவிர ஏனைய பெண்களுடன் பாலியல் தொடர்ப்பு வைப்பது. எனவே, இங்கே அல்லாஹ் சுபஹானஹு தாலா பாலியல் தொடர்ப்புக்கு ஹலால் ஆன ஆண் பெண் தவிர்ந்து ஏனையோரிடம் தனது பாலியல் தேவையை தீர்ப்பதை தான் குறிப்பிடுகின்றான் என்பதை கற்பு என்றால் என்ன என்று அறிந்தவர்கள் இலகுவாக புரிந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த கும்பல் சுய இன்பத்தையும் கற்பை இழக்கச் செய்யும் ஒரு காரியமாக்கி விட்டார்கள். என்ன செய்வது, இவர்களுக்கு உலக அறிவுமில்லை ... மார்க்க அறிவுமில்லை. 


நமது பதில் :


கற்பு என்றால் என்னவென்று ஸ(க)லபி கூட்டம் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்ப்பவர்கள் இவர்களின் உலக மற்றும் மார்க்க அறிவை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.


கற்பு என்ற பெயரில் இவர்கள் வைக்கும் வாதங்களுக்கும் சேர்த்தே 27 :5,6,7 என்ற வசனத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளதால் அந்த விளக்கமே இவா்களின் இந்த குருட்டு வாதத்திற்கு போதுமான மறுப்பாகும்.


ஸ(க)லபி வாதம் :இவர்களுக்கு உலக அறிவுமில்லை....... மார்க்க அறிவுமில்லை.


நமது பதில் :இந்தியாவின் தினகரனை ஆதாரக் கிரந்தம் ஆக்கியதிலிருந்தும், ஹதீஸ்களை விட ஸலபுகளின் கருத்துக்களை முக்கியத்துவப் படுத்தியதிலிருந்தும் இவா்(கலபி)களின் மார்க்க மற்றும் உலக அறிவின் லட்சனம் வெளிச்சத்திற்கு வருகிறது.


ஸ(க)லபி வாதம் :


இந்த குர் ஆன் ஆயத்தை தலை கீழ் ஆக விளங்கி இந்த அடிப்படையிலேயே தனது மடத்தனத்தை தொடருகின்றார்கள். எனவே, முதல் கோணல் முற்றும் கோணல் என்ற அடிப்படையில் இவர்களது அடிப்படையான கோணல் சுட்டிக் காட்டப்பட்டுவிட்டது. 


நமது பதில் :


குர்ஆன் வசனத்தை தலைகீழாக விளங்கியவர்கள் யார் என்பதை கட்டுரையைப் படிப்பவர்கள் தெளிவாக புரிந்திருப்பார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற அடிப்படையில் நமது கட்டுரைக்கு பதில் தராமல் விட்டார்களாம் ஆனால் மறுப்பின்(?) ஆரம்பத்தில் முழுக்கட்டுரைக்கும் பதில் தருபவர்களைப் போல் (இவர்கள் சுட்டிக் காட்டிய அந்த கட்டுரையில் உள்ள விடயங்களின் ஆதாரமில்லாத தன்மைகளையும்,ஆதாரம் என்று குழப்பிய ஆய்வுகளையும் கீழே தெளிவு படுத்துகிறோம்.) என்று கதைவிட்டதையும் வாசகர்களுக்கு ஞாபகப் படுத்துகிறோம்.


தைரியம் இருந்தால் முழுக் கட்டுரைக்கும் பதில் தரட்டும் வரிக்கு வரி பதில் தர நாம் எப்போதும் தயார்.


ஸில்மியின் சில்மிசம் தொடர்ந்தால், சாட்டையடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.........

 Thursday, January 13, 2011

 யஹ்யா ஸில்மியின் அடுத்த சில்மிசம்.
சுய இன்பத்திற்கு மார்க்கத்தில் தடையில்லை.(?) 

ஸ(க)லபி கொள்கை என்ற பெயரில் இலங்கையில் இருந்து முழைத்த ஒரு வழி கெட்ட கும்பல் சுய நலத்திற்காக மக்கள் மத்தியில் தாங்களும் அறிஞர்கள் என்று போற்றப்பட வேண்டும் என்பதற்காக நாளுக்கு நாள் புதுப்புது பத்வாக்களை(?) கொடுத்து தங்கள் இமேஜைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.


அந்தக் கும்பல் மிக அண்மையில் கூட்டுக் குர்பானி பற்றி ஒரு விளக்கத்தை கொடுத்ததும் அதில் அவா்கள் செய்த மடமைத்தனத்தை சகோதரர் பி.ஜெயின் இணையதளம் போட்டு உடைத்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.


அந்த தொடரில் யஹ்யா ஸில்மி என்ற இந்த அறிவுக் கொழுந்து(???????) தற்போது வெளியிட்டுள்ள பத்வா(?) சுய இன்பம் கூடும் என்பதாகும்.


அன்பின் வாசகர்களே ! 


இவரைப் போன்ற அரை குரைகளின் வாதங்களுக்கெல்லாம் சேர்த்து ஏற்கனவே இளைஞர்களே சுய இன்பமும் விபச்சாரமே என்ற தலைப்பில் நாம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம் அந்தக் கட்டுரையை படிப்பவர்கள் சுய இன்பம் பற்றி இஸ்லாமிய நிலைபாட்டை தெளிவாக புரிய முடியும்.


சுய இன்பமும் விபச்சாரமே என்ற நமது கட்டுரையை பார்க்க விரும்புபவர்கள்