[தொழுகை]

கேள்வி: பித்அத் செய்பவர்க்கு பின்னால் நின்று தொழுவது பற்றி இஸ்லாமிய ‌தீ‌ர்‌ப்பு என்ன


பதில் : இமாம் புஹரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலான ஹீஹ் அல் புஹாரியில் இ‌து தொடர்பான தலைப்பு ஒன்றையே இட்டுள்ளார்கள். அதனை முத‌லி‌ல் இங்கே குறிப்பிடுகிறோம்


குழப்பம் செய்பவனும் பித்அத் செய்பவனும் மாத் செய்வது.


நீ அவன் பின்னால் தொழு. அவனுடைய பித்அத் அவனுடனே இருக்கட்டும் என ஹசனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்


உபைதுல்லாஹ் ‌பி‌ன் அதீ கூறியதாவது " உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு முற்றுகையிடப்பட்டிருந்த போது நான் அவர்களிடம் செ‌ன்று, நீங்கள் மக்களுக்கு தொழுகை நடத்துகின்ற இமாம்மாக இருக்கின்றீர்கள். உங்கள் ‌மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்கு குழப்பம் விளைவிக்கின்றவர் இமாம்மாக தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மன வேதனை அடைகிறோம் எனக் கூறினேன்


அதற்கு தொழுகை மக்கள் செய்கின்ற செயல்களில் ‌மிக‌ சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும் போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைகின் போது அத் தவறுகளை விட்டும் நீ ஒதுங்கிக்கொள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்


உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமிய கிலாபத்தை அடியோடு இல்லாதொழிக்க பாடுபட்டவ்ர்களில் ‌மிக முக்கியமாவான் தா‌ன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவாகும் என்பது நாம் அறிந்தது. அப்படியிருந்தும் அந்த கொடிய கெட்ட பாவியான பித்அத் காரர்களின் பின்னாலேயே தொழுவதற்க்கு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். இன்னும் அப்படியான பித்அத் காரர்கள் தொழுகை நடத்துகின்ற போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை நாம் மேலே கவனித்த ஹதீஸில் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்

அதே போன்று தான் இமாம் அபூ ஜஹ்பர் அத் தஹாவி அவர்கள் தனது அகீததுத் தஹாவி எனும் நூலில் து பற்றி பேசும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

கிப்லா வாசிகளில் உ‌ள்ள ஒவ்வொரு கெட்ட ந‌ல்ல மனிதர்களின் பின்னாலும் தொழ முடியும் நாங்கள் கருதுகிறோம்.