நோன்பு


'நீங்கள் ஸஹர் செய்வீர்களாக. சஹர் செய்வதில் பரகத் 

இருக்கின்றது' . 

'ஸஹரை முடியுமான வரை இரவின் பிற்பகுதியில் வைத்துக் கொள்வதே சிறந்தது'. (புகாரி,முஸ்லிம்)

எனது உம்மத் இப்தாரை அவசரப்படுத்தி ஸஹரை பிட்படுத்தி நடந்து கொள்ளும் காலமெல்லாம் நல்ல நிலையிலேயே இருக்கும். (முஸ்னத் அஹ்மத்).

சஹர் முடியும் நேரம் என்று ஒரு சிலரால் குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டு அந்த நேரங்களையே ஒருசில விளம்பர அட்டைகளில் பிரசுரித்துக் கொடுக்கிறார்கள். உண்மையிலேயே சஹர் முடியும் நேரத்திற்கும், இவர்கள் தொழுது கொண்ட நேரங்களுக்கும் மிகுந்த வேறுபாடுண்டு. 

சுபுஹு தொழுகைக்காக உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு பாங்கு சொல்லும் வரை சஹர் உணவை உண்ண நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏவியுள்ளார்கள்.உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு (சுபுஹுக்காக) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் அறிவிப்பாளர்:ஆய்ஷா ரலியல்லாஹு அன்ஹ, (புகாரி,முஸ்லிம்,நஸயி)

நாங்கள் ஸஹர் செய்து விட்டு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுகைக்கு கிளம்புவோம் என்று ஜைத் பின் தாபித்  கூறினார்கள். (ஸஹர் முடிவதற்கும்,தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, புகாரி 

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்ளில் எவராவது உணவுத் தட்டு கையில் இருக்கும் போது (பஃஜ்ருடைய) பாங்கோசையை செவிமடுத்தால் அவர் தமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் வரை தட்டை வைக்க வேண்டாம்’ என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், இப்னு மாஜா). 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்)என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு ,( முஸ்லிம் )

ஸஹர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் 15 நிமிடங்கள் கழித்தே பாங்கு சொல்லப்படுகிறது, அதன் பின் 10 நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது. ஆக கிட்டத்தட்ட 1/2 மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடித்து கொள்ள வேண்டும்! என்று போலியான சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக! பாங்கு சொல்லும் வரை உண்ணுவோம், பருகுவோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள். (ஆதாரம்: புகாரி)

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள். நூல்:திர்மிதீ, அபூதாவூது 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நோன்பு திறக்கும் போது துஆ

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (தாரகுத்னீ, இமாம் தாருகுத்னியின் ஸஹீஹ் என்ற தரத்தை  இமாம் இப்னு ஹஜர் தல்கீஸ் அல் ஹபீர் என்ற நூலில் உடன் படுகிறார். இமாம் அல்பானி ஹசன் என்று தீர்ப்பளித்துள்ளார்கள் பார்க்க இர்வாஉல் கலீல்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து  வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!"

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு,   அறிவித்தார். 

"நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!" 

"ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!" என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார். (புகாரி)

நோன்புடனிருக்கும் போது உடலுறவு கொண்டால்நோன்பைக் கழாச் செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (பித்யா) செய்ய வேண்டும்

'ஒரு நோன்பாளி (நோன்பு நோற்றது (ஸஹர்) முதல் மஃரிப் வரையுள்ள நேரத்தில்) உடலுறவு கொண்டால்நோன்பைக் கழாச் செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (பித்யா) செய்ய வேண்டும். நோன்புடனிருக்கும் போது,உறவு கொண்டால்அவருக்கான குற்றப்பரிகாரம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்:

ஓர் அடிமையை விடுதலை செய்தல்.
தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல்.ஏழைகளுக்கு உணவளித்தல்.'
நூல்: புகாரி, முஸ்லிம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நோன்புடன் மனைவியை கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப் பட்டாலும் ஒருவர் நோன்பை தொடரலாம்.

நோன்புடன் மனைவியை கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப் பட்டாலும் ஒருவர் நோன்பை தொடரலாம். இது சம்பந்தமாக இமாம் நாசீருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் விளக்கமான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.

நான்(ஹகீம் பின் அகால்) ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிடம் கேட்டேன் , " எவைகள் நோன்பாளியாக இருக்கும் பொது ஒரு மனிதருக்கு அவருடைய மனைவியிடம் அனுமதிக்கப்பட்டவை என்று .",  உடலுறவை தவிர அனைத்தும் என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பதிலளித்தார்கள். (தஹாவி)

அமர் இப்ன் ஷர்பீல் இடமிருந்து  " இப்னு மசூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது வழமையாக பகல் நேரங்களில் தனது மனைவியுடன் கொஞ்சி குலாவுவார்கள். இப்னு அபி ஷைபாவின் அறிவிப்பின்படி, புஹாரி முஸ்லிமின் நிபந்தனைகளுக்கு இணங்க , மேலதிகமான வார்த்தைகளுடன் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது " ஆம் , நான் அவளது மர்மஸ்தானத்தை பற்றிப்பிடிப்பேன் "

இன்னும் இப்னு அபி ஷைபா அவர்கள் அமர் பின் ஹரிம் இடமிருந்து அறிவிக்கிறார்கள் ,ஜாபிர் இப்ன் ஜைத் அவர்களிடம் ஒரு மனிதரை  பற்றி  கேட்கப்பட்டது " அவர் ரமளானுடைய காலத்தில் தனது மனைவியை இச்சையுடன் பார்த்து அவள் மேலுள்ள மோகத்தால் விந்தை வெளியேற்றி விட்டார் , அவர் கட்டாயம் நோன்பை முறிக்க வேண்டுமா என்று " .இல்லை , நிச்சயமாக அவர் நோன்பை தொடரலாம் என பதிலளித்தார்.