பொது விடயங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை கனவில் காண முடியுமா? அபுஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன், யார் என்னை கனவில் காண்கிறாரோ, அவர் என்னை விழிப்பில் காண்பார். இன்னும் ஷைத்தானுக்கு
என்னைப் போன்று உருவம் எடுக்க முடியாது. (புஹாரி 6993).

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிப்பதாவது
எவர் என்னை கனவில் கண்டாரோ, அவர் நிச்சயமாக என்னை கண்டுவிட்டார். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தானுக்கு என்னைப்
போன்று உருவம் எடுக்க முடியாது. ஒரு முஃமினுடைய கனவு நுபுவத்தின் நாற்பத்தியாறு பங்குகளில் ஒ‌ன்று எனக் கூறினார்கள்.  (புஹாரி 6994)

புஹாரியில் இடம்பெறும் மேற்குறிப்பிட்ட இரண்டு ஹதிஸ்களிலிருந்தும் நாம் விளங்கிக்கொள்ளும் விடயம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் அமைப்பில் ஷைத்தான் ஒரு போதும் வர மாட்டன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் உருவத்தில் அவன் தோன்றவும் மாட்டான். அதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் அமைப்பு பற்றி ஹதிஸ்களில் வந்திருக்கும் பிரகாரம், நாம் அவர்களை கனவில் கண்டோம் எனில் நிச்சயமாக நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை தான் கனவில் கண்டுள்ளோம் என உறுதியாக கூறமுடியும்.

ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களும் மேற்குறிப்பிட்ட ஹதிஸ்களில் அதனையே உறுதியாக சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை நாம் கனவில் காண முடியும் என்பதனை மேற்குறிப்பிட்ட ஹதிஸ்களின் ஆதாரங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்குறிப்பிட்ட இரு ஹதிஸ்களிலும் கனவில் என்னைக் காண்பவர், விழிப்பிலும் என்னைக் காண்பார் எ‌ன்ற வசனம் ஒரு பொதுவான வசனமாகும். இ‌தி‌ல் இரு பொதுவான விடயங்கள் உள்ளன. 
1. என்னை கனவில் காண்பவர்
2. விழிப்பில் கானுதல்
 

1. என்னை கனவில் காண்பவர் 

இவ்வசனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்பவரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவரையோ குறிக்காது, மாறாக 
இ‌து ஸஹாபாக்கள் முத‌ல் மறுமை நாள் வரை வாழக்கூடிய முஸ்லிம்கள் அனைவரையும் உள்ளடக்கும்.

2. விழிப்பில் காணுதல் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை கனவில் கண்ட அனைவரும் மீண்டும் விழிப்பிலும் காண்பார்கள் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களுடைய ஒரு வாக்குறுதியாக இருக்கிறது. இதையே "  " எ‌ன்ற வசனம் எதிர்காலத்தில் மீண்டும் விழிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை காண்பார் எ‌ன்றும் வலியுறுத்துகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை கனவில் கன்டவர் விழிப்பிலும் மீண்டும் காண்பது 
இம்மையிலோ மறுமையிலோ சாத்தியமான ஒன்றாகும். இ‌து அல்லாஹுவின் ஆற்றலில் வல்லமையில் உ‌ள்ள விடயமாகும். இத‌ன் பொருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் மீண்டும் உலகத்திற்கு வருவார்கள் எ‌ன்ற வழிகேடான கருத்திற்கு ஒரு போதும் அமையாது. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  • மகத்தான கிதாபுகளான அகீததுல் வாஸித்திய்யா,ஸாதுல் மாஃத் பிய் ஹதியில் ஹைருள் இபாத் போன்றவைகளை இரு தொழுகைக்கு இடையில்,ஒரு பயணத்தில் இமாம்களால் கிதாபுகள் எவ்வாறு எழுத முடிந்தது?

  • ஹலால் சான்றிதழ்களும் மோசடிகளும் வாசிக்க