[உளப்பூர்வமான உபதேசமும் யெமன் தம்மாஜ் பற்றிய எச்சரிக்கையும்]

உளப்பூர்வமான உபதேசமும் யெமன் தம்மாஜ் கல்வி / தஃவா பற்றிய எச்சரிக்கையும்   

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,

அல்ஹம்துலில்லாஹ் வஸ் ஸலாத்து வஸ் ஸலாம் அலா முன் லா நபிய அமா பஃத்


அன்பின் இஸ்லாமியர்களே !


அல்லாஹ்வின் கையிற்றை பலமாக பற்றிப் பிடித்து , நாம் பிரிந்து விடாமல் இருப்பது மிக முக்கியமானது. இது அல் குர் ஆன் சொல்லும்அடிப்படையான, ஒற்றுமைக்கான வழி. அந்த அடிப்படையில் நாம் எப்போதும் நன்மைக்கும் தக்வாக்கும் ஒத்துழைப்பு செய்பவர்களாகவும் பாவத்திற்கும் எதிர்ப்பு தனத்திற்கும் ஒத்துழைப்பு செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும்.


உண்மையிலேயே இன்று ஸலப் மக்களுக்கு மத்தியில் ஷேக் யஹ்யா அல் ஹஜூரி அவர்களின் நடவடிக்கைகள் பிரிவினைகளையும் , எதிர்ப்புகளையும் ஏற்படுத்துவதாகவே அமைந்து உள்ளது. இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் , ஸலப் மக்கள் மத்தியில் அடிப்படையாக எந்த காரணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பிரிவினைகளையும் , பிரச்சனைகளையும் ஏற்படுத்துபவர்களாக தான் செயல்படுகிறார்கள்.


இப்படியான நேரத்தில் , இந்த உம்மத்திற்கு உலமாவுஸ் சுன்னாஹ் அறிவுரைகள் வழங்க எடுக்கும் முயற்சிகளுக்கு , நாம் ஒவ்வொருவரும் சத்தியத்திற்கு ஒத்துழைப்பு செய்வதின் முக்கியத்தை அறிந்து , நாம் அவர்களுக்கு தோள் கொடுத்து நிற்க வேண்டும்.


இலங்கை நாட்டில், ஒரு சமயத்தில் , உலமாக்களின் உபதேசத்தின் அடிப்படையில் ஷேக் யஹ்யா அல் ஹஜூரி அவர்களை போற்றி பாராட்டி பேசினோம் . இன்று அதே உலமாக்களின் உபதேசத்தின் அடிப்படையில் , நாமும் இந்த தம்மாஜ் மர்கஸினால் ஏற்பட்டுள்ள பித்னாவை அறிந்து அதை நோக்கி ஆர்வமாக கல்வி கற்க முன்னிரங்கி செல்வதையும், அங்குள்ள மக்களுக்கு ஒத்துழைப்பு செய்வதையும் எச்சரிக்கிறோம்.


ஸலப் வழிமுறையில் அக்கறை கொண்டுள்ள மக்கள் , தயவு செய்து ,  எனது இந்த உளப்பூர்வமான உபதேசத்தை பெற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.


அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Written with the Praises to Allah and Salaams & Salawaath to the Last Prophet Muhammed Sallallahu alaihi wassallum by Abu Abdur Rahman Yahya Silmy bin Muhammed Nubar bin Usman bin Noah Lebbe Alaa Marikaar Al-Yemani As-Saylani As-Salafi 


This is a translation of Shaykh Yahya silmy hafidhahullaah's advice which was in english.